யெல்லோ திரை விமர்சனம் ரேட்டிங் 3.1/5

யெல்லோ திரை விமர்சனம் ரேட்டிங் 3.1/5

யெல்லோ

நடிப்பு: வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி, பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், லோகி, அஜய்

தயாரிப்பு:பிரசாந்த் ரங்கசாமி   இசை: ஆனந்த் காஷிநாத்   ஒளிப்பதிவு: அபி ஆத்விக்   இயக்கம்: ஹரி மகாதேவன்      பி ஆர் ஓ: பரணி அழகிரி

பூர்ணிமா ரவி ஒரு வங்கியில் கடனை வசூலிக்கும் பிரிவில் வேலைபார்க்கிறார். காதலில் தோல்வியுற்ற பூர்ணிமா, விரக்த்தியில் கடன் வாங்கியவர்களிடம் தொலைபேசியில் பேசி கடுமையாக நடந்து கொள்கிறார். “மன அமைதி பெற உன் தோழிகளை சந்தித்து பேசிவிட்டு வா” என்று வயோதிக தந்தை டெல்லி கணேஷ் அறிவுரை கூற, அதன்படி தனது பழைய போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு கேரளாவிலிருக்கும் தோழி லீலா சாம்சனை சந்திக்க செல்கிறாள். அங்கு அவரோ தன் இளமைக்கு தீனிபோடும் ஒரு ஆண் நண்பனோடு பழகி வருகிறாள். அவளின் சிபாரிசின் பேரில் வைபவ்வை சந்திக்க செல்கிறாள் பூர்ணிமா. வைபவ் தான் வேலைபார்க்கும் வங்கியில் மோட்டார் சைக்கிளுக்கு கடன் வாங்கி இன்னும் அதை அடைக்காமல் இருப்பவர் என்பது பூர்ணிமாவுக்கு தெரியவருகிறது. வைபவுக்கும் தன்னை தொலைபேசியில் கடனை கட்டச் சொல்லி திட்டி தீர்த்தவர் என்பதும் தெரியவருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் யார் என்பதை புரிந்துகொண்டு தனது பயணத்தை மோட்டார் சைக்கிளில் தொடர்கிறார்கள். பயணத்தின் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.

திரைக்கதை முழுவதும் வசனகர்த்தாவான இயக்குநர்தான் உண்மையான கதாநாயகன். “யெல்லோ” அதாவது “மஞ்சள்” என்பது வெளிப்படையானது. கடனை கட்ட முடியாதவர்கள் மஞ்சள் நோட்டீசை கொடுத்துவிடுவார்கள். அப்படி கொடுத்தவர்களின் வாழ்வியல் அனைத்தும் வெளிப்படையான திறந்த புத்தகம்போல் ஆகிவிடும். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும், ஒலிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருப்பதை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். படமுழுவதும் சலிப்புத்தட்டாமல் ரசிப்புத்தன்மையுடன் செல்கிறது.  கேரள கானகத்தின் செழிப்பு மிகுந்த அழகை தன் காமிராவில் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் அபி அத்விக்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க, காண கண்கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமாக படமாக்கியிருக்கிறார்…!

இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம், நாயகி ஆளும் அழகு. நடிப்பும் அழகு.
ஆதிரை கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடும் பூர்ணிமா ரவி, ரொமான்ஸ், நடனம், ஆத்திரம் என நடிப்பின் அனைத்து ஏரியாவிலும் அடித்து ஆடியிருக்கிறார்.நாயகியின் திடீர் தோழனாக வந்து அவரது அன்புக்கு பாத்திரமாகும் கேரக்டரில்வைபவ் முருகேசன் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பயணத்தின் போது நாயகிக்கும் இவருக்குமான சின்ன சின்ன சண்டைகள் கூட அத்தனை அழகு.சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி தங்கள் கேரக்டர்கள் மூலம் கதையுடன் நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறார்கள். இவர்களில்  பிரபு சாலமன் கேரக்டர் இன்னும் தனித்துவமானது.பயணத்தை காட்சிப்படுத்திய விதமும், பயணப்படும் இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கண்களையும் மனதையும் ஒருசேர வசீகரிக்கிறது. ஆழ்மனதில் சிந்திக்காமல் இருந்தால் எல்லோ வானவில் போல் வட்டமிடும் …!

படத்தில் கேமராவும் ஒரு பாத்திரம் போல் பயணிக்கிறது என்பதே உண்மை. ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக்குக்கு இதற்காகவே ஸ்பெஷல் பாராட்டுக்கள் ….!

கேரளா, கோவா என சுற்றுலாத் தளங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள  அதியற்புதம்.ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை   அக்மார்க் அமர்க்களம்.   எழுதி இயக்கியிருக்கும் ஹரி மகாதேவன், இந்த சுற்றுலா கதையில் ரசிகர்களை சுற்றுலா பயணிகள் ஆக்கி கூடவே சந்தோஷமாய் பயணிக்க வைத்திருக்கிறார். கதையில் எளிமை. காட்சிகளில் வலிமை. சாலை வழி பயணத்தில் வழி தவறி விட்ட ஜோடி இரு தவறான மனிதரிடம் சிக்கி மீளும் காட்சி நிஜமாகவே மனதில் படபடப்பை ஏற்படுத்தி விடுகிறது.

-யெல்லோ  அழகான வான வில்

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.1/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *