இரவின் விழிகள்திரை விமர்சனம் ரேட்டிங் 3.2/5
இரவின் விழிகள்
நடிப்பு: மகேந்திரா, கர்ணா, நீமா ராய், ரேஷ்மா, நிழல்கள் ரவி, ரகுபதி, சிக்கல் ராஜேஷ், கருப்பு, சிசர் மனோகர், மாரிமுத்து, சரண் ராஜ், ரங்கராஜ், ஏன்சி சிந்து, கயல், அமிதா தயாரிப்பு: பி.மகேந்திரன் இசை: ஏ எம் அசார் ஒளிப்பதிவு: எல் கே ஆண்டனி இயக்கம்: சிக்கல் ராஜேஷ் பி ஆர் ஓ: A. ஜான்
சமூக ஊடகம் குறிப்பாக யூ ட்யூப் மோகத்தில் நடக்கும் குற்றங்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது இரவின் விழிகள்.

மகேந்திரா, நீமா ராய் ஜோடி யூ டியூபில் பிரபலம் ஆவதற்கு சில அடாவடி வேலைகள் செய்கின்றனர். ஒரு அசைன்மெண்டுக்காக காட்டுப் பகுதிக்கு செல்லும்போது அங்கு முகமூடி அணிந்த.ஒருவனால் கொலை முயற்சிக்குள்ளாகின்றனர். அங்கிருந்து தப்பி வரும் அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து முகமூடி மனிதனை தேடி செல்கின்றனர். ஏற்கனவே முகமூடி மனிதனால் சில கொலைகள் நடந்திருக்கின்றன. …யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பிரபலமாகத் துடிக்கும் சிலர், அதில் தங்களை முன்னிறுத்த எந்த எல்லைக்கும் போய் விடுகிறார்கள். இதில் பெண்கள் தொடர்பான பாலியல் வக்கிரங்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக தன்மானம் இழக்கும் பெண்களின் சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உண்டுஅப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு மேலோகம் அனுப்புகிறார் ஒருவர். அவர் யார் ? இவர்களால் அவர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார் என்பதை திகிலும் திடுக்கிடலுமாக சொல்வதே இந்த ‘இரவின் விழிகள்’.

கைப்பேசி வைத்திருப்பவர்கள் பலபேர் நன்மைகளை செய்ய கல்வி புகட்ட வலையொளியை பயன்படுத்திவருன் நிலையில் சில்பேர் ஆபாசங்களையும் சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் காணொளிகளை பதிவேற்ற வலையொளி தளத்தை உருவாக்கி அதன்மூலம் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டுப்பற்றும் சமுதாயத்தை சீர்திருத்தும் நோக்கமும் கிடையாது. அப்படிப்பட்டவர்களை மிருகத்திற்குக்கூட ஒப்பிடமுடியாது. மிருகம் தனது பசிக்கும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே செயல்படும். ஆனால் இவர்கள் மனித உருவிலிருக்கும் சைத்தான்கள். அவர்களை அழித்தொழிக்க என்ன செய்ய வேண்டுமென்பதை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநரும் கதாநாயகனுமான சிக்கல் ராஜேஷ் தங்கைமீது கொண்ட பாசத்தையும் இறப்பின்போது வெளிக்காட்டிய துக்கத்தையும் தத்ரூபமாக காட்டி அசைத்திருக்கிறார். அவரின் நடிப்பை நடிப்பு என்றே சொல்ல முடியாதளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களின் கண்களை ஈரமாக்கியது….!

வலையொளி காட்சிகளை படமாக்கும் நேர்த்தியான நடிப்பை காட்டிய மகேந்திராவின் உடல் மொழியும் நீமா ராயின் கவர்ச்சியும் ரசிகர்களை ஈர்த்தன. வலையொளி காட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் நிழல்கள் ரவி. ஒளிப்பதிவாளர் பாஸ்கர் தன் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார். கதைக்கேற்ற இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.எம். அசர். உச்சக்கட்ட காட்சியில் சொல்கின்ற கருத்துகள் சட்டத்தின் தீர்ப்பாக தர்மத்தின் தீர்ப்பாக இருக்கிறது. துணிச்சல் மிகுந்த இயக்குநர் சிக்கல் ராஷேஷ்…!

ஒரு முழுமையான க்ரைம் திரில்லர் படம் தமிழ் சினிமாவில் வருவதும் ஒரு நாவலைப் படிப்பது போன்ற பரபரப்புடன் நகரும் படங்கள்தான் ரசிகர்களை ஈடுபாட்டுடன் ரசிக்க வைக்கும். அப்படி ஒரு படமாக இந்த ‘இரவின் விழிகள்’ படம் அமைந்திருக்கிறது. ஒரு அறிமுக இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு நேர்த்தியான படம் வந்திருப்பதும் பாராட்டுக்குரியது. படத்திற்கு என்ன தேவையோ, எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே திரைக்கதையில் சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட காட்டு மிருகங்கள் சர்வ சாதாரணமாக உலா வரும் இடங்களில் அச்சமின்றி படமாக்கி இருக்கிறார்கள். கருப்பண்ண சாமியை இந்தக் கதையுடன் பிணைத்து உருவாக்கியுள்ளவிதம் சூப்பர் ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் மிரட்டி இருக்கிறது.
மொத்தத்தில் இரவின் விழிகள்’. மிரட்டல்
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.2/5

