“ZEE தமிழ் புதிய தொடரான ‘அண்ணாமலை குடும்பம்’ 230 அடி நீளமான புடவையின் மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.”
230 அடி சேலை மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Zee தமிழின் புதிய தொடராக “அண்ணாமலை குடும்பம்”.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ரியல் திறமைகளை கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன Zee தமிழ் தொடர்ந்து புத்தம் புதிய கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

நம் கலாச்சாரத்தையும் பண்பாடையும் பிரதிபலிக்கும் விதமாகவும், தமிழ் நெஞ்சங்களின் உணர்வுகளோடு கலந்து உள்ளங்களில் ஒருவரான Zee தமிழ் தொடர்ந்து நம் குடும்பங்களின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைகளை நமக்கு வழங்குகிறது. குறிப்பாக Zee தமிழ் மதிய வேளையில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களின் ரசனைக்கு ஏற்றவாறு கதைக்களத்துடன் விறுவிறுப்பான தொடர்களை கொடுத்து வருகிறது. மதிய நேரத்தில் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான உற்சாகமூட்டக்கூடிய கதைக்களத்தை கொண்ட தொடர்களை வழங்குவது தான் எங்கள் நோக்கம் என்கிறார் Zee தமிழ் மற்றும் Zee திரையின் தலைமை சேனல் அதிகாரி V.S ராகவன்.
ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியல் மாறுபட்ட காதல் கதைக்களத்துடன் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது.
அதே போல் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய வாரிசு சீரியல் அனைவரும் விரும்பத்தக்க குடும்ப கதையாக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளது.
இப்படிப்பட்ட வரிசையில் அடுத்ததாக உங்கள் உள்ளங்களை கவர இல்லங்களை தேடி வருகிறது அண்ணாமலை குடும்பம். இந்த தொடர், கூட்டு குடும்பத்தில் உள்ள உணர்வுகளின் உணர்ச்சிகரமான பயணத்தை எடுத்துரைக்கிறது.
மனிதர்களுக்கு தேவைப்படும் அன்பையும், ஆதரவையும் அள்ளிக் கொடுக்கும் குடும்ப அமைப்பு தான் நம் கூட்டுக் குடும்பங்கள். ஒருவரின் மகிழ்ச்சியைப் பலர் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரின் துயரத்தை பலர் தாங்கி நிற்பதற்கும் கூட்டுக் குடும்பம் உதவுகிறது. சமூக மாற்றத்தால் இன்றைய காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து இருந்தாலும் கூட்டு குடும்ப அமைப்பில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்குள் இன்றும் இருந்து கொண்டு தான் உள்ளது.
அப்படிப்பட்ட அழகான கூட்டுக் குடும்பத்தின் மேன்மையையும், அதன் நினைவுகளையும் மையமாகக் கொண்ட ஒரு புத்தம் புதிய மதிய நேர மெகாத் தொடர் தான் “அண்ணாமலை குடும்பம்”.

அண்ணாமலை குடும்பம் மெகாத்தொடர் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால் 230 அடி சேலையை அண்ணாமலை சில்க்ஸ் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் உருவாக்கி உள்ளனர். இந்த சேலையை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தலைமை சேனல் அதிகாரி V.S ராகவன்.
தன் கடின உழைப்பாலும், குடும்பத்தினர் அனைவரின் அன்பாலும், அண்ணாமலை என்ற பெண்மணி அண்ணாமலை சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை மூலம் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிறார். தனது குடும்பம் இன்று போல் என்றைக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் அண்ணாமலையின் ஆசை.
இப்படிப்பட்ட ஒற்றுமையான இந்த குடும்பத்திற்குள், ஒற்றுமையை விரும்பும் வெண்ணிலா, சுயநலவாதியான வான்மதி என மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட சகோதரிகள் மருமகள்களாக நுழைகிறார்கள். இவர்கள் வருகையால் அண்ணாமலை குடும்பத்தின் ஒற்றுமை என்றென்றும் நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு அண்ணாமலை குடும்பம் தொடரை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

