காந்தா திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5

காந்தா திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5

காந்தா

நடிப்பு: துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்திரி சங்கர், விஜய் நாகேஷ், பக்ஸ், பரதன், நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன்    தயாரிப்பு: ராணா டகுபதி, துல்கர் சல்மான் , பிரசாந்த் பொட்லூரி, ஜாம் வர்கீஸ்   இசை: ஜானு சந்தர்                                              ஒளிப்பதிவு: டேனி சாஞ்செஸ் லூபஸ்    இயக்கம்: செல்வமணி செல்வராஜ்    பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

கதை ஓபன் பண்ணா ….!

மாடர்ன் ஸ்டுடியோஸ் பட  நிறுவனத்தில் மிகப்பெரிய இயக்குனர் ஐயா சமுத்திரகனியை வரவைத்து பாதியில் நின்று போன படத்தை மீண்டும் இயக்க பட நிறுவனத்தின் மகன் கேட்டு கேட்டுக்கொள்கிறார்  படத்தின் ஹீரோ டிகே மகாதேவன் என்பதை அறிந்ததும் முதலில் மறுக்கிறார் தன் அப்பாவிற்காக இந்த பட நிறுவனம் வளர்வதற்காக நின்று போன அந்தப் படத்தை மீண்டும் இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டதால் அரை மனதுடன் சம்மதிக்கிறார்… கட் பண்ணா.. சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ டிகே மஹாதேவன் உச்ச நட்சத்திரமாக கம்பீரமாக செட்டுக்குள் நுழைகிறார்.., அதற்குள் ஹீரோயின் குமாரியை சந்தித்த இயக்குனர் எக்காரணம் கொண்டும் என் பேச்சை மீறக்கூடாது என்று  சத்தியம் வாங்கிக் கொள்கிறார் …ஷூட்டிங்கின் போது தன்னுடைய இயக்குனரை ஓரமாக இருக்க சொல்லிவிட்டு தானே இயக்குவதாக  டிகே மகாதேவன் சொல்வதைக் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைகிறார் ஆனாலும் அமைதி கேட்கிறார் ஹீரோயின் குமாரி கதாநாயகன் பேச்சை கேட்காமல் இயக்குனரின் பேச்சை மட்டுமே கேட்பேன் என்று கூறிவிடுகிறார் …ஒரு காட்சியில் கதாநாயகி பாக்ய ஸ்ரீ நிஜமாகவே தன்னை கன்னத்தில் அறைந்து நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்வதை அறிந்ததும் அதிர்ச்சியாகும் துல்கர் மீண்டும் ஒரு டேக் எடுக்கலாம் என்று கேட்டு அவரே பாக்யஸ்ரீ கையை பிடித்து தனது கன்னத்தில் பளார் பளார் என்று இடைவிடாமல் அறைந்து கொள்ளும்போது பாக்யஸ்ரீ,  சமுத்திரக்கனி மட்டுமல்லாமல் அரங்கில் இருக்கும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்து விடுகிறார்..!.

flashback ..ஐயா என்கிற மிகப்பெரிய இயக்குனர்  தன்னிடம் வேலை கேட்டு வந்த டி கே மஹாதேவனை ஒரு நடிகர் ஆக்கி அழகு பார்த்தவர் சமுத்திரக்கனி ..ஆனால் தன்னால் நடிகரான டி.கே மகாதேவன் தன்னை மீறி மிகப் பெரிய நடிகராக மாறுவது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் பொய் வழக்கு போட்டு அவரின் புகழை அளிக்க முயற்சி  செய்தது அறிந்த துல்கர் சல்மான் தன்னுடைய குரு மீது வெறுப்பு கொள்கிறார் இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஈகோ பற்றிக்கொள்கிறது இயக்குனர் ஒன்று சொன்னால் அவரை மீறி நடிக்க தொடங்கி பாராட்டியும் பெறுகிறார் கொஞ்சம் கொஞ்சமாக தன் முயற்சியின் காரணமாக உச்ச நட்சத்திரமாக மாறிவிடுகிறார் மாறிவிடுகிறார் ..

இந்த சூழ்நிலையில் தான் நின்று போன தங்கள் படத்தில் இருவரும் சந்திக்கிறார்கள் குமாரிக்காக ஹீரோ டி.கே மகாதேவன் பல இடங்களில் விட்டுக் கொடுக்கிறார் அதனால் குமாரி ஹீரோவுடன் காதல் வயப்படுகிறார் இதை அறிந்த இயக்குனர் குமாரி கண்டிக்கிறார் .. சூட்டிங் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர் அதனால் குமாரி கர்ப்பமாகிறார் ஹீரோ மகாதேவன் அவர் மனைவி மற்றும் மாமனாருக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது ,,,இந்த சூழ்நிலையில் குமாரியை சந்திக்க வந்த ஹீரோ மறுநாள் திருமணம் செய்ததாக திருப்பதி போய் திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்து செல்கிறார் குமாரி கொலை செய்யப்படுகிறார் அதன் பிறகு என்ன நடந்தது ..?  யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள்? என்ற விவரங்களை எல்லாம் படத்தின் கிளைமாக்ஸ் வரை துல்கர் சல்மான், ராணா, சமுத்திரகனி, பாக்கியஸ்ரீ போர்ஸ், காயத்ரி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடிப்பில்  காந்தா படம் மூலம் சஸ்பென்ஸ் கலந்து  கிளைமாக்ஸ் ல்  விடை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

துல்கர் தான் ஒரு உச்ச நடிகன் என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஒரு நடிகர் படத்தில் நடிகன் கதாபாத்திரத்தை ஏற்று செய்வது மிக கடினம். ஏனென்றால் அதில் ஒரு செயற்கை தனம் தெரியும். அந்த சாயல் எதுவும் இல்லாமல் இந்த கதாபாத்திரத்தை துல்கர் மிக லாவகமாக கையாண்டு இருக்கிறார்..நிழல்கள் ரவி மிரட்டி உள்ளார் வையாபுரி  கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர் காயத்ரி ஹீரோவின் மனைவியாக அதிகம் பேசாமல் நடித்துள்ளார் படத்தில் ராணா விசாரணை அதிகாரியாக வருகிறார் அவர் ஒவ்வொருவரையும் விசாரிக்கும் பாணி அருமையாக இருக்கிறது. படத்தின் நாயகி ..குமாரி என்கிற பாத்திரத்தில் தன்னுடைய காந்தர்வ கண் கொண்டு அனைவரையும் மயக்கி விடுகிறார்.. ஹீரோவுக்கு இணையாக நாயகி குமாரியின் பாத்திரப்படைப்பு படைக்கப்பட்டுள்ளது..!

இது ஒரு ஒரு பீரியட் பிலிம் ஆக இருப்பதால் 1950 .,60 காலகட்டங்களில் நடிகர் நடிகைகளின் உடை நடை பாவனை அனைத்தையும் அருமையாக வெளிக்கொண்டு வந்து இருக்கின்றனர் .. துல்கர் சல்மான் டி கே மகாதேவன் எனும் மகா நடிகனாகவே வாழ்ந்துள்ளார் ..!துல்கர் சல்மான் போன்ற தென்னிந்திய நடிகர்கள் பொக்கிஷம் போன்றவர்கள் என்ன ஒரு நடிப்பு இந்த கதை வாழ ..கதாபாத்திரங்கள் ஒத்துழைக்க வேண்டும் கதையின் நாயகன் டி கே மகாதேவன் கதாபாத்திரத்தில் துல்கரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் துல்கர் சல்மான்…!

இப்படிப்பட்ட அந்த காலகட்ட கதையை திறம்பட இயக்கிய செல்வமணி செல்வராஜ் அவர்கள் மற்றும் காந்தா படத்தின் படக் குழுவினர் அனைவரையும் நம்ம “தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம்” சார்பாக வாழ்த்துகிறோம் ..

இந்தப் படம் வெளிவந்த பிறகு அந்த காலகட்டத்தில் நடந்த முக்கியமான ஒரு கொலை வழக்கு பற்றி நிறைய கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன இது அது இல்லை என்றாலும் அது இதுவாக இருக்கலாம் என்று கற்பனை குதிரையை தட்டி விட்டு வருகிறார்கள் படத்திற்கு பெரிய விளம்பரமே …

மொத்தத்தில் “காந்தா ரசிகர்களைக் கவரும் காந்தம் “

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *