ஆரியன் திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5
ஆரியன்
நடிப்பு: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், மானஷா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ் தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ஆரியன் ரமேஷ் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன் இயக்கம்: பிரவீன் கே பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

கதை open பண்ணா …!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சொல்அதிகாரம் என்கிற நிகழ்ச்சியின் ஆங்கர் சிரத்தா ஸ்ரீநாத் இவர் வெறும் தொகுப்பாளினி மட்டுமல்ல இவருடைய கேள்விகள் மக்கள் மனதை நெருங்கிய கேள்விகளாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஆதரவுகளை அள்ளி குவித்து இருக்கிறது இந்த சேனல் அந்த வகையில் இன்று சிரத்தாஸ்ரீனா பேட்டி எடுக்க வேண்டிய அரசியல்வாதி வராத காரணத்தினால் வேறு வழி இல்லாமல் ஒரு பிரபல நடிகரை பேட்டி காண படைக்கப்படுகிறார் இந்த நிகழ்ச்சி ஒரு நேரலை நிகழ்ச்சி என்பதால் பொதுமக்களும் பதிவு செய்து கலந்து கொள்கிறார்கள் சொல் அதிகாரம் நிகழ்ச்சியின் ஆங்கர் சுரதா ஸ்ரீநாத் கேட்கும் கேள்விகளுக்கு அந்த நடிகர் திக்கித் திணறி பதிலளித்து வருகிறார் அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து செல்வராகவன் இவரை நக்கலும் நையாண்டியமாக கேள்வி கேட்கிறார் இதனால் கோபம் மிக்க அந்த நடிகர் அரங்கத்தை விட்டு வெளியே செல்ல முயற்சிக்க அங்கே பெரிய அதிர்ச்சி ஆம் செல்வராகவன் தன் கையில் உள்ள துப்பாக்கி எடுத்து அவரின் காலில் சுட்டு விடுகிறார் தமிழகமே நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெறுகிறது …

அப்புறம் என்ன காவல்துறை பரபரக்கிறது செல்வராகவன் கட்டுப்பாட்டில் இந்த அரங்கம் சிக்கிக் கொள்கிறது துப்பாக்கியின் காரணமாக அனைவரும் பம்மி பதுங்கி கொள்கிறது அப்போது செல்வராகவனிடம் உங்களுடைய கோரிக்கை என்ன என்று சிரத்தா ஸ்ரீநாத் கேள்விகள் கேட்க இன்றிலிருந்து ஆறு நாட்களில் ஆறு கொலைகள் நடக்கவிருக்கும் கொலை செய்யப்படுபவரின் பெயர்கள் அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தெரியப்படுத்தப்படும் இன்னும் சாமி நேரத்தில் இங்கு ஒரு இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு ஒரு கொலை நடக்க உள்ளது செல்வராகவன் இப்படி சொன்னதும் தமிழ்நாடே பரபரப்பாக பற்றி கொள்கிறது யார் அந்த நபர் என்பது இந்த கேள்வி …அதற்கும் விடை அவரே சொல்கிறார் இந்த அரங்கத்தில் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இதை நம்ப முடியுமா… என்ன செய்வது …என்று காவல்துறை குழம்பி நிற்க மேலும் கொலைகள் நடக்காமல் இருக்க ஒரு டீம் அமைக்க அமைக்கிறார்கள் அந்த டீமுக்கு தலைமை தாங்க விஷ்ணு விஷால் வரவழைக்கப்படுகிறார் அவரும் அந்தக் குழுவும் அடுத்த கொலை நடைபெறாமல் தடுக்க முடியுமா என முயற்சிக்கின்றனர் …!

ஆனால் செல்வராகவன் வேறு ஊடக வழியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் யார் கொலை செய்யப்பட போகிறார் என்பதை தெரிவிக்கிறார் அவர் சொன்னது போலவே நடக்கவும் செய்கிறது அடுத்த அடுத்த நாட்கள் ஒவ்வொரு கொலைகளும் யார் யார் கொல்லப்பட போகிறார்கள் என்பதை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பலவிதமான ஊடகங்கள் மூலமாக செல்வராகவன் தெரிவிக்கிறார் இதை தடுக்க இயலாமல் விஷ்ணு விஷால் அந்த டீம் மிகவும் சிரமப்படுகிறார்கள் அதற்குள் மூன்று நபர்கள் இறந்து விடுகிறார்கள் இருக்கும் மீதி இரண்டு நபர்களை காப்பாற்ற முடியுமா என்று இன்வெஸ்டிகேஷன் அண்ட் டிடெக்டிவ் விறுவிறுப்பாக நடைபெறுகிறது அதில் பலவித திருப்பங்கள் யார் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் இவர்களுக்கு என்ன தொடர்பு இவர்களுக்கும் நாராயணனுக்கும் என்ன தொடர்பு இறந்தவர்கள் யாருமே பிரபலங்கள் இல்லை ஆனால் அவர்கள் எல்லோருமே சமூக அக்கறை உள்ளவர்கள் நல்லவர்கள் அப்புறம் எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை புத்திசாலித்தனமாக விறுவிறுப்பாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.பிரவீன் கே...! படத்தின் இறுதிக் காட்சி வரை சஸ்பென்ஸ் குறையாமல் பார்க்கும் ரசிகர்கள் ஏன் எதற்கு என்று சீட்டு நுனியில் உட்கார்ந்து கையை பிசையும் அளவிற்கு திரைக்கு அதிகம் அமைத்து ஆரியன் கருவாகி உருவாகி இருக்கிறான் ..!
இந்தப் படத்திற்கு இசை பெரிய பக்க பலம் அதற்காக ஜிப்ரானுக்கு பாராட்டுக்கள்.. அதேபோல ஒளிப்பதிவு தடதடக்கும் கதையில் படபடக்கும் ஓட்டங்களுக்கு நடுவே நம் கண்களுக்கு மிரட்டலான காட்சிகளை படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ..!செல்வராகவன் அவருடைய கதாபாத்திரம் அலட்டல் இல்லாமல் மிரட்டி இருக்கிறார் சிரத்தாஸ்ரீ நாத் அந்த குற்றவாளி யார் என்பதை தெரிந்து கொள்வதில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருவதில் ஆகட்டும் அபாரமான நடிப்பு அதேபோல விஷ்ணு விஷாலின் காதல் மனைவியாக வரும் மானஷா சவுத்ரி,விவாகரத்தை தேடி காத்திருந்தாலும் காதலனை கண்டவுடன் கண்கள் பணிக்க அவருக்கு உதவுகிறார்..!

விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரி வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் ஒரு இன்வெஸ்டிகேஷன் மூவில என்ன நடிப்புல கொடுக்கணுமோ அதை சரியான அளவுல கொடுத்திருக்கிறார் அவருடைய பையன் தான் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஆரியன் பொதுவாக இன்வெஸ்டிகேஷன் மூவி என்றால் மலையாள படங்களை பெருமையா சொல்லுவாங்க அதுலயும் சிபிஐ டைரி குறிப்பு மம்முட்டி அப்படிங்கிறது தமிழகத்தில் மிகவும் பிரபலம் …1ஆனால் ஆரியன் படம் வந்த பிறகு இனி இன்வெஸ்டிகேஷன் மூவி என்றால் நம்ம விஷ்ணு விஷால் அதற்கென்று தனி அடையாளத்தை பதிவு செய்துவிட்டார்… மிடுக்கான தோற்றம் அடுத்தடுத்து கொலைகளை தடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் அதற்கான இந்த படத்தில் கடைசி கொலை செய்யப்படுபவர் பெயர் நம்பி என்று சொன்னதும் விஷ்ணு விஷால் அதிர்ச்சி அடைவதும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் இந்த படத்தில் நம்பி என்பதும் திரில்லர் படத்திற்கு உரிய திருப்பங்கள் கடைசியில் இறந்தவர்கள் எல்லாம் யார் என்பதும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளும்போது சமூகத்தின் மீது நமக்கு கோபம் வரும் அளவுக்கு இந்த திரை கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் பிரவீன் கே.ஆரியன் படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்
மொத்தத்தில் ஆரியன் சமூகத்துக்கு ஒரு படிப்பினை..1
நம்ம தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம் …ரேட்டிங் 4.1/5

