டியூட்(DUDE) திரை விமர்சனம் ரேட்டிங் 4.1/5
டியூட்(DUDE)
நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு , சரத்குமார், ரோகிணி தயாரிப்பு:; மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்நேனி , ஒய்.ரவிசங்கர்
இசை: சாய் அபயங்கர் ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி இயக்கம்: கீர்த்தீஸ்வரன் பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

கதை : OPEN பண்ணா …!
பிரதீப் ரங்கநாதன் டூ கே கிட்ஸ் பல்ஸ் பார்த்து திரைக்கதை தேர்ந்தெடுப்பதில் கில்லாடி ..சொந்தக்கார பொண்ணு மமிதாவை அவர் அப்பாவிடமே பொண்ணு கேட்டு இருந்தா அவரே கட்டி கொடுத்திருப்பார்..ஏனென்றால் அவர் ஹீரோ வோட தாய் மாமன் .. ஆனால் கதைப்படி முதலில் இவர் மமிதா காதலை வேண்டாம் என்று சொல்ல அப்புறம் இவர் அவர் மேல் காதல் கொண்டு மாமன் வழியாக காதலை சொல்ல …மாமன் மகள் தான் பாரி என்ற ஒருவனை காதலிப்பதாக சொல்லி இந்த காதலை நம்ம ஹீரோவிடம் மறுக்க..காதலர்களை சேர்த்து வைக்க பிரதீப்பே முடிவு செய்கிறார். . மமிதா மாமாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதற்காக அவளுக்காக அவள் கழுத்தில் போலியாக தாலி கட்டுகிறான் பிரதீப் ரங்கநாதன்… வெளி உலகத்திற்கு இவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும் மமிதா வின் குழந்தைக்கு தந்தை பாரி …எப்படிப்பட்ட கதை இப்ப புரியுதா …இந்த லட்சணத்துல குழந்தையும் பிறக்குது பிரதீப்போட மாமா சரத்குமார் ரொம்ப சந்தோஷத்துல மிதக்கிறார் ..
அந்த குழந்தை வளர வளர படத்தோட கதையும் ரிவர்ஸ் கியர் ல போகுது.. மமிதா பிரதீப் ரங்கநாதனை இப்படி தன்னந்தனியாக விட்டுச் செல்வதில் விருப்பமில்லாமல் அவனுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் செய்து விட்டு தான் வெளிநாடு செல்வேன் அப்படிங்கற ஒரு அருமையான குறிக்கோளோட நம்ம ஹீரோவுக்கு ஹீரோயின் பொண்ணு தேடுறாங்க புதுசா இருக்குல்ல இருக்கும் …சரத்குமார் கிட்ட மாட்டிகாம இவங்க மூணு பேரும் அதாவது கணவன் மனைவி அப்புறம் ஒரிஜினல் கணவன் (அதாவது ) எப்படி தப்பிக்கிறாங்க…? பாரி ரங்கநாதன் மனைவியும் ஒன்று சேர்ந்தாங்களா…? பிரதீப் ரங்கநாதன் என்ன ஆனார் …?

தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது இருந்தது இப்போதும் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் ...ஆனால் இந்த கலாச்சார சீரழிவு இளைஞர்களை மிகவும் கவருகிறது கீர்த்தீஸ்வரன் இவர் இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு பாடி லேங்குவேஜ் க்கு ஏற்றவாறு சீரியஸான கட்டத்திலும் காமெடியை கலந்து திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார் .. பால்வளத்துறை அமைச்சராக பிரதீப் ரங்கநாதனின் மாமனாக வரும் சரத்குமார் சிரித்துக் கொண்டே சீரியஸான கேரக்டர் மனுஷன் அசத்தி விட்டார் ….மமிதா அழகான சிரிப்பு ரங்கநாதனுக்கு ஈடு கொடுத்து அசால்டாக நடித்துள்ளார் ரெண்டு பேருமே நல்ல எனர்ஜி இந்த எனர்ஜி இப்ப உள்ள டூ கே கிட்ஸ்க்கு ஈசியா bond ஆகிடும் ..திரைக்கதையில லாஜிக் பல ஓட்டைகள் இருந்தாலும் தவறாக இருந்தாலும் அது அத்தனையும் ஒத்த ஆளா சமாளிக்கிறார் பிரதீப் .. ரங்கநாதன் மாமன் சரத்குமார் பிளாஷ்பேக் அருமையான ட்விஸ்ட் ..பாரியாக வருபவன் பரிதாபமாக நடிக்க அவருக்கும் சேர்த்து ஸ்கோர் செய்கிறார் நம்ம ஹீரோ பிரதீப் ரங்கநாதன் …!

நம்ம ஹீரோ நடை உடை மேனரிசம் அனைத்திலும் ரஜினி யை அப்பட்டமாக காப்பியடித்து அப்படியே நடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன் …2k கிட்ஸ் களுக்காக நாட்டில் நடப்பதையே திரைப்படமாக எடுத்துள்ளோம் என்று கூறுவார்கள்.. ஆனால் இனி வரும் படங்களில் கொஞ்சம் சமூகப் பொறுப்போடு திரைக்கதைகளை அமைத்து நடித்தால் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் இடம் பிடிப்பீர்கள் ..DUDE டைட்டில் ஒரு இளமையான டைட்டில் ..பாடல்கள் அத்தனையும் அருமை .. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி..ஆர்ட் டைரக்ஷன் ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க ..!இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனுக்கு “ஹாட்ரிக் வெற்றி” .!
மொத்தத்தில் டியூட் படக்குழு அனைவர் உழைப்பால் இந்த தீபாவளியை DUDE தீபாவளியாக மாற்றியதற்கு பாராட்டுக்கள்..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.1/5
ReviewI by : Media RAM

