டீசல் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5
டீசல்
நடிப்பு: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, காளி வெங்கட் , விவேக் பிரசன்னா, சச்சின் கெதக்கெர், ஜாகிர் உசேன், தங்கதுரை, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், மாறன், கே பி ஒய் தீனா, அபூர்வா சிங் தயாரிப்பு: தேவராஜுலு மார்க்கண்டேயன் இசை: திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன், எம் எஸ் பிரபு இயக்கம்: சண்முகம் முத்துசாமி பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

கதை : OPEN பண்ணா …!
சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை குழாய் மூலம் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லும் வழியில் மீனவக் குடியிறுப்பு உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகுமென போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டத்க்தையும் மீறி அதிகார வர்க்கத்தினரால் கப்பலிலிருந்து கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் மீனவரான சாய்குமார் குழாயிலிருந்து கச்சா எண்ணெய்யை திருடி அதை விற்று மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்கிறார். அவரது வளர்ப்பு மகன் ஹரிஸ் கல்யாண் வேதியல் படித்த பட்டதாரி. அதனால் கச்சா எண்ணெய்யைலிருந்து டீசல் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களை அழித்து, தனியார் துறைமுகம் கொண்டு வர துடிக்கும் கார்ப்பரேட் முதலாளி, அந்த மீனவர்களை காப்பாற்றத் துடிக்கும் டீசல் வாசு, இவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் தான் கதை,… கார்ப்பரேட் முதலாளி பதானின் ,சூழ்ச்சிக்கு துணை போகும் பாலமுருகனாக விவேக் பிரசன்னா, டி.ஜி.பியாக மாயவேலனாக, வினய் இவர் கள்இருவரும் டீசல் வாசுவை எப்படியாவது கொல்ல துடிக்கிறார்கள். அதிலிருந்து டீசல் வாசு, எப்படி தப்பிக்கிறார் ?எப்படி அந்த மீனவ குப்பங்களை காப்பாற்றுகிறார்? திருடு போன இரண்டு கோடி லிட்டர் ஆயிலை எப்படி மீட்க்கிறார்? வஞ்சக சூழ்ச்சியால் தன் அப்பாவை சிறைக்குள் தள்ளிய மாயவேலை எப்படி பழி வாங்குகிறார்? தன் நண்பன் ரமேஷ் திலக் இறப்புக்கு எப்படி பழி தீர்த்துக் கொள்கிறார்.? பாலமுருகனின் சூழ்ச்சியை எப்படி முறியடிக்கிறார்? தன்னை காதலிக்கும் அதுல் யாவை எப்படி கரம் பிடிக்கிறார்?

வினய் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் அனன்யா… மேலும் படத்தில் கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா என நடிகர்கள் பட்டியல் நீண்டாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்
ஹரிஷ் கல்யாண் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருக்கிறது … ஹரிஷ் கல்யாணை முதல் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கி இருக்கும் படம். மீனவருக்கான உடல் மொழி உள்ளிட்ட சகலத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்… வளர்ப்பு தந்தைக்கும் அவருக்குமான அன்னியோன்யம், இறந்த அம்மாவுடன் பேசுவது என்று செண்டிமெண்ட் காட்சிகளில் முழுமையுடன் கூடிய ஹரிசை பார்க்க முடிகிறது…நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, படம் முழுவதும் பயணித்தாலும்,கலங்கி நிற்கும் டீசல் வாசுவிடம் கனவில் இப்போதெல்லாம் மீன் கன்னி வருவதில்லை என்று தன் காதலை மெல்லிய மயிலிறகால் வருடி செல்வது போல் சொல்லிச் செல்கிறார் அதுல்யா ரவி அம்புட்டு அழகு

கச்சா எண்ணெய் கதையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமியை பாராட்ட வேண்டும். பணக்கார கும்பலும் அரசியல்வாதிகளின் சதியாட்டத்தையும் அவர்களுக்கு துணை நிற்கும் ஒருசில காவல் துறையினரின் உள்குத்து வேலையையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.. மீனவ பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் . கச்சா எண்ணெய் பின்னணியில் கார்ப்பரேட் மாபியா ஊடுருவல் கதைக்களமும் அதை சொன்ன விதமும் அருமை …!
மொத்தத்தில் “டீசல்” அத்தியாவசிய தேவையில் ஒன்று ….அதுபோல இந்த “டீசல்” படமும் இந்த வருட தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும்
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.7/5

