பைசன் காளமாடன் திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5
படம்: பைசன் காளமாடன்
நடிப்பு : துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள், அருவி மதன் தயாரிப்பு: சமீர் நாயர், தீபக் சீகல், பா ரஞ்சித், அதிதி ஆனந்த் இசை: நிவாஸ் கே பிரசன்னா ஒளிப்பதிவு: எழிலரசு கே இயக்கம்: மாரி செல்வராஜ் பிஆர்ஓ : குணா, யுவராஜ், சதீஷ்(AIM)

கதை : OPEN பண்ணா …!
மணத்தி கணேசன் அர்ஜுனா விருதுபெற்ற இந்திய கபடி வீரரின் உண்மை கதையே ‘பைசன்’ திரைக்கதையின் BASE,,. க்ளைமாக்ஸிலிருந்தே தொடங்குகிறது கதை. இந்தியா- பாகிஸ்தான் மோதும் கபடி இறுதி போட்டி. இந்த போட்டியில் கிட்டான் களமிறங்குவதற்காக போராடுகிறார் அணியின் கேப்டன். ஆனால் பயிற்சியாளர் இதற்கு தடை போடுகிறார். இதை அறியும் கிட்டான்.. தான் வந்த வழி, கடந்து வந்த வலியின் நினைவுகளில் மூழ்க.. ரத்தமும் சதையுமாக காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது
நெல்லை பகுதி கிராமத்தில் லால், அமீர் என்ற இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள். எந்த நேரத்தில் யாரை வெட்டி சாய்ப்பார்கள் என்பது தெரியாமல் எப்போதும் ஒரு ரவுடி படையுடனே வலம் வருகிறார்கள்..!கிட்டான் (துருவ்) மணத்தி என்ற ஊரில் வாழும் இளைஞன். வறுமை சூழல், ஊரில் நிகழும் வன்முறை, ஒடுக்குமுறை என பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகும் அவனுக்கு இதில் இருந்து மீள கிடைக்கும் ஒரே வழி கபடி.

எப்படியாவது ஊரின் கபடி அணியில் சேர நினைக்கும் அவனின் முயற்சிகள், அவனது தந்தை பசுபதியால் தடுக்கப்படுகிறது.பள்ளியில் கடவுள் வாழ்த்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் மறைந்திருந்து சாப்பாடு திருடி தின்னும் துருவ் விக்ரமை பள்ளி ஆசிரியர் அருவி மதன் கண்டுபிடித்து அடித்து விரட்டி,” அம்மாவை அழைத்து வா” என்று சொன்னதும் காலில் இருக்கும் செருப்பை கழட்டி விட்டு பள்ளி மைதானத்தில் நிற்காமல் ஓடும் துருவ் விக்ரமின் எனர்ஜியை கண்டு ஆச்சரியப்படும் மதன்,” யார்ரா நீ, இவ்வளவு நேரம் நிற்காமல் ஓடுற.. உன் ஆசை கபடி வீரனாக ஆவது என்றால் அதை நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்று பள்ளி ஆசிரியர் ஒருவரால் அந்த கனவு மெய்ப்படுகிறது. அதற்கு கிட்டான் அக்கா கை கொடுக்கிறார்.அந்த ஏரியாவில் பரவி கிடக்கும் வன்முறையும், பகையும் இந்த கபடி போட்டியால் தூண்டப்படுமோ, மகனுக்கு ஆபத்து வருமோ என்ற பயம் என்று பசுபதி பயப்படுகிறார் தன் மகனை கபடி பக்கம் போக கூடாது என்று சத்தியம் வாங்குகிறார்.

கிட்டான் அவனுக்கு கபடி மேல் அவ்வளவு ஆசை ஆனால் அவன் அப்பா பசுபதி அனுமதிக்கவில்லை என்பதை தெரிந்ததும் பி டி மாஸ்டர் தானே சென்று பசுபதியிடம் அனுமதி வாங்குகிறார் ..ஆனால் உள்ளூர் கபடி அணியில் கூட கிட்டானை சேர்க்க மறுக்கிறார்கள். அதற்கு காரணம் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவரே .. பசுபதி சொந்தக்காரரை பகைத்துக் கொண்டதால் அவரின் பகை காரணமாக உள்ளூர் கபடி போட்டியில் சேர்த்துக் கொள்வதில்லை ..!கிட்டான் தலைமையில் ஒரு டீம் உருவாக்கி பக்கத்து கிராமங்களில் நடக்கும் கபடி போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள் ..இதனிடையே ராணியுடன் (அனுபமா) காதல், உறவுக்குள்ளேயே ஏற்படும் ஈகோ மோதல் இவையும் முளைக்கிறது.
இந்த சூழ்நிலையில் லால் நடத்தும் கிரிக்கெட் போட்டியில் கிட்டான் டீம் கலந்து கொள்கிறது.. கபடி விளையாட்டை ஆர்வமுடன் கவனிக்கும் லால் கிட்டானின் ஆட்டத்தை ரசித்து பார்க்கிறார்…அன்று நடந்த போட்டியில் வெற்றி பெற்ற கிட்டான் அணிக்கு உணவும் பரிசும் கொடுக்கிறார் லால் .. மேலும் பிடி மாஸ்டர் மதனை அழைத்து லால் நடத்தும் கேபி கிளப்பில் கபடி விளையாட கேட்டுக்கொள்கிறார் இதே கேள்விப்பட்ட பசுபதி தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயப்படுகிறார்..ஆனால் லால் நேரடியாக கிட்டானின் திறமைக்கு நன்றாக வருவான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்..அரை மனதுடன் பசுபதி சம்மதிக்கிறார் …கேபி கிளப்பில் விளையாடி பல வெற்றிகளை பெற்று தருகிறான் கிட்டான் ..லாலின் கூட இருக்கும் நபர்களுக்கு இவன் வேறு சாதி என்பதால் கிட்டானை எப்போதும் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள் ..!.

ஒரு சூழலில் பாண்டியராஜா எனும் அமீரை லால் குரூப் கையெறி குண்டுகளை வீசி கொலை செய்ய முயற்சிக்கிறது அந்த கொலையிலிருந்து தப்பித்த அமீர் ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் …இதற்கு பழிவாங்க அமீர் குரூப்பில் இருந்து வந்த சில பேர் லாலின் வீட்டுக்கு நுழைந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் லால் அதில் தப்பித்து விடுகிறார்.. அமீர் குரூப் அங்க வந்ததுக்கு கிட்டான் மீது சந்தேக பார்வை விழுகிறது இதை கவனித்த லால் கிட்டானை அழைத்து இனி என்னை சந்திக்க வராதே கேபி குழுவில் கிட்டான் விளையாட வேண்டாம் என்று சொல்லி, தமிழக அணியில் விளையாட நான் அனுமதி வாங்கி தருகிறேன் என்று அதையும் செய்கிறார்.. ஒருவழியாக போராடி தமிழக அணியில் இடம்பெற்ற கிட்டான் அங்கு அருமையாக விளையாடி அனைவரின் நன்மதிப்பையும் பெறுகிறார்..!
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு தேர்வு குழு தயாராகிறது இந்திய அணி தேர்வு பட்டியலில் இடம் பிடிக்க அந்தக் குழுவில் உள்ள அழகம் பெருமாள் கிட்டானுக்காக பல வாதங்களை எடுத்து வைத்து அவரை தேர்வு செய்ய கேட்டுக்கொள்கிறார் ஆனால் வட இந்திய குழுக்கள் திறமைக்கு மதிப்பில்லாமல் சிபாரிசுக்கு மதிப்பு கொடுப்பதாக காட்டியுள்ளார்கள் இதனால் மனம் வெறுப்படைந்த கிட்டான் ஊருக்கு திரும்புகிறான் அவன் ஊருக்கு திரும்பி வேளையில் …அமீரை சதி செய்து திட்டமிட்டு வர வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விடுகிறார்கள்…! ஊர் முழுவதும் கலவரம் ஏற்படுகிறது காவல்துறை களம் இறங்குகிறது லால் சுட்டுக் கொல்லப்படுகிறார்…

இது எதுவுமே தெரியாமல் ஊர் வந்து சேர்ந்த கிட்டானை கண்டு பசுபதி அதிர்ந்து போகிறார் எப்படியாவது ஊரை விட்டு போய்விடு என்று சொல்வதை கிட்டான் கேட்கவில்லை நான் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் அப்பொழுது டெல்லியில் இருந்து தொலைபேசி வருகிறது கிட்டானுக்கு இந்திய அணியில் தேர்வில் இடம் கிடைத்து விட்டது என்று அழகம் பெருமாள் தெரிவிக்க உடனே கிளம்பி வரச் சொல்கிறார்கள் ஜப்பானில் கபடி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் கலவரம் நடக்கும் பூமியிலிருந்து பசுபதி வழி அனுப்பி வைத்தாரா .? கிட்டான் இந்திய அணிக்கு விளையாடி வெற்றி பெற்றாரா..? என்பதை கபடி போட்டியையும் சாதி போட்டியையும் இரு தண்டவாளமாக மாற்றி அதில் இந்த பைசன் எனும் காளமாடனை ஓட விட்டிருக்கிறார் இயக்குனர் …!

இயக்குனர் மாரி செல்வராஜ் முதலில் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்திலும் உங்கள் சாதிய பிரச்சினையை முன்னெடுத்தாலும் அந்த மனத்தி கணேசன் அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உதவிய மற்ற சாதியினரையும் நேர்மையாக காட்டியுள்ளீர்கள் அதேபோல சொந்த சாதியினரே அந்த பையன் கபடி விளையாட அனுமதிக்காத சூழலையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளமைக்கு பாராட்டுக்கள் ..! 80 90 களில் நடந்த நல்ல விஷயங்களை அனைவரும் அடுத்த தலைமுறைக்கு திரைவடிவில் மாரி செல்வராஜ் போன்ற திறமை வாய்ந்த இயக்குநர்கள் கொடுக்க முடியும் ஏன் இந்த சாதிய வட்டத்திற்குள் சுழன்று அடிக்கிறீர்கள் புதிய தலைமுறைக்கு சிந்திக்க வாய்ப்பு கொடுங்கள் அவர்களை பின்னோக்கி இழுக்காமல் இருக்க வேண்டும்…
காளமாடன் துருவ் விக்ரம் அப்பாக்கு மேல கடும் உழைப்பை போட்டு அருமையா நடித்துள்ளார்.. இயக்குனர் மாரி செல்வராஜ் அவரை ஓட ஓட விரட்டி உள்ளார் .. இது துருவ் விக்ரமுக்கு ஒரு பயிற்சி களமாக கூட இருந்திருக்கலாம் இனி அவர் பெறப்போகும் பல வெற்றி களுக்கு முதல் படிக்கட்டாக இந்த காள மாடன் தான் இருப்பான் ..!
மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மற்றும் படக்குழுவினருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் இந்தபடம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…!
மொத்தத்தில் பைசன் எனும் இந்த காளமாடன் நாலு கால் பாய்ச்சலில் பாய்கிறான்
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4,1/5
review by : Media RAM

