கேம் ஆப் லோன்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.1/5

கேம் ஆப் லோன்ஸ்
நடிப்பு: நிவாஸ் ஆதித்தன், அபினய் கிங்கர், எஸ்தர், ஆத்விக் ஜலந்தர் தயாரிப்பு: என் ஜீவானந்தம் இசை: ஜோ கோஸ்டா ஒளிப்பதிவு: சபரி
இயக்கம்: அபிஷேக் லெஸ்லி PRO: ஆர்.மணி மதன்
கதை : OPEN பண்ணா …!
நிவாஸ் ஆதித்தன் காதலித்து கட்டிய இரண்டாவது மனைவி எஸ்தர் நோரோன்ஹா மற்றும் பள்ளிக்கு செல்லும் ஐந்து வயதுடைய சாமுடன் வசிக்கின்றார். கொரோனா காலத்தில் வேலையிழந்த நிவாஸ் ஆதித்தன் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலில் வெற்றி பெற்று பணம் சம்பாதிக்க அதன் பின் சூதாட்ட மோக வலையில் சிக்கி ,Get Money app மூலம் கடன் பெற்று விளையாட விளையாடி நாட்கள் செல்ல செல்ல லட்சங்களில் கடனாளியாகிறார். கடன் மீட்பு நிறுவனம் பலமுறை எச்சரித்தும் பணத்தை திரும்ப கட்டாமல் டேனியல் தவிர்க்கிறார். கணவனின் இந்த சூதாட்ட பழக்கத்தால் அனைத்து பொறுப்புக்களையும் மனைவி எஸ்தர் ஏற்றுக் கொண்டு வேலைக்கு சென்று சம்பாதித்தாலும்காதலித்து கட்டிய கணவனை வெறுக்க முடியாத இயலாமையில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் கடன் மீட்பு முகவர்கள் அபினய் கிங்கர் மற்றும் அத்விக் ஜலந்தர் இருவரும் நிவாஸ் தனியாக இருக்கும்போது,வீட்டிற்குள் நுழைந்து அவரை அடித்து கை ,கால் கட்டி போட்டு வாயை அடைத்து விடுகிறார்கள்.. நீ எங்கள் கம்பெனியில் ஆன்லைன் சூதாட்டத்திற்காக வாங்கிய 68 லட்சங்கள்கடன் வாங்கி இதுவரை வட்டி அசலும் தரவில்லை கடனை திருப்பிச் செலுத்தக் கோரி மன ரீதியாக துன்புறுத்துகின்றனர் ..! .. வீட்டில் சிறை வைத்து, சிகரெட், மது அருந்த வைத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள்.. நிவாஸிடம் .உனக்கும் வேலை இல்லை உன்னுடை பெயரில் எந்த சொத்தும் இல்லை உன் மனைவின் சம்பளத்தின் வாழ்கிறாய் உனக்கு கொடுத்த கெடு நேரம் முடிந்துவிட்டது அப்படி அவன் தற்கொலை செய்து கொண்டால் அனைத்து கடன்களும் இன்சூரன்ஸ் மூலம் தள்ளுபடி ஆகிவிடும் என்றும், அத்துடன் இறந்து பிறகு அவன் குடும்பத்தினர் இந்த கடனை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று வாக்குறுதியை கொடுத்து தற்கொலை கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு எட்டாவது மாடியிலிருந்து கிழே குதித்து தற்கொலை செய்ய மனா அழுத்தம் கொடுக்கின்றனர்.. கடன் வாங்கிய நிவாஸ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ன நடந்தது என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ….!
ஹீரோ நிவாஸ் ஆதித்தன் ஆன்லைன் கடனில். சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் பயத்தையும், நடுக்கத்தையும் எதிர்காலம் என்வாகுமோ என்ற பீதியையும் தனது நடிப்பின் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தி யோசிக்க வைக்கிறார்.கடன் வசூல் செய்யும் நபராக வரும் அபிநய் நீண்ட காலத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டி இருக்கிறார். எதார்த்தமாக நடிப்பதில் கை சேர்ந்த நடிகர் அபினய்..அபினய்க்கு உதவியாளராக வரும் ஆத்விக் ஜலந்தர் நடிப்பும் நன்றாகவே இருந்தது .இசை அமைப்பாளர் ஜோ கோஸ்டா படத்திற்கு பின்னணி இசை பெரிய பலம் ..!ஒரு வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வை ஹால் kitchen bedroom என குறுகிய வட்டத்துக்குள் அழகாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபரி…!
இந்த கதை சமூக அக்கறையுடன் எடுக்க பட்டு ..அதை அவ்வளவு நேர்த்தியான திட்டமிடல் கொண்டு குறிப்பாக போரடிக்காமல் தற்கொலை எனும் முடிவை நாமே எடுத்தது போல த்ரில்லர் மூடுக்கு ரசிகனை கடத்தியதில் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி மற்றும் அவர் டீம் அனைவர்க்கும் ஒரு சபாஷ் …!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3,1/5