வில் திரைவிமர்சனம் RATING 2.6/5

வில் (உயில்)
நடிப்பு: சோனியா அகர்வால், விக்ராந்த், அலீக்யா, பதம் வேணுகுமார், மோகன் ராமன், சுவாமிநாதன், தயாரிப்பு: ஃபுட் ஸ்டெப் ப்ரொடக்ஷன், கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் இசை: சௌரப் அகர்வால் ஒளிப்பதிவு: டி. எஸ். பிரசன்னா இயக்கம்: எஸ் சிவராமன் பி ஆர் ஓ: பரணி அழகிரி , PRO வேலு
கதை : OPEN பண்ணா …!
சோனியா அகர்வால் நீதிபதியாக இருக்கும் கோர்ட்டுக்கு ஒரு வழக்கு வருகிறது.சென்னையில் மனைவியை இழந்து தனியாக தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் செல்வந்தர் ஒருவர், கிராமத்திலிருக்கும் சொத்துக்களை தனது இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக உயில் எழுதி வைத்துவிட்டு, சென்னையிலுள்ள அடுக்குமாடி வீட்டை அலகியா என்ற இளம் பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து இறந்து விடுகிறார்.அவரது இறப்புக்கு பின் வழக்கறிஞர் மூலம் இந்த தகவல் குடும்பத்துக்கு தெரிய வர… யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மொத்த குடும்பமும் வேலை செய்கிறது. வேறு ஒரு பெண்ணை பேசி வைத்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள்அவரது மகன்கள்…! இதில் சந்தேகமடைந்த நீதிபதி சோனியா அகர்வால், நீதிமன்ற காவல் உதவி ஆய்வாளர் விக்ராந்தை அழைத்து உண்மையான அலகியாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி உத்திரவிடுகிறார்.
விசாரணை அதிகாரியான விக்ராந்த் அந்த பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினாரா? வீட்டை எழுதி வைக்கும் அளவுக்கு அந்த பெண்ணுக்கும் பெரியவருக்குமான உறவு எத்தகையது என்பதை திருப்பங்களுடன் தந்திருக்கிறார்கள். நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நடிப்பால் கம்பீரம் சேர்த்து இருக்கிறார் நீதிமன்ற காட்சிகள், அதில் நடக்கும் விசாரணைகள் எல்லாமே நிஜத்தில் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. நீதிபதியாக சோனியா அகர்வால் அருமையான நடிப்பு ..!அதிகாரி விக்ராந்த் உண்மையை கண்டறிந்தாரா? வழக்கு தொடுத்த பெண்தான் உரிமை தாரரா? என்பதை விக்ராந்த் உறுதி செய்தாரா என்பதற்கு சட்ட நுணுக்கங்களுடன் பதில் அளிக்கிறது வில் திரைப்படம்.
இது ஒரு உண்மை சம்பவத்தை திரைப்படமாக இயக்கியிருக்கிறார் எஸ்.சிவராமன். இச்சம்பவம் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால் படம் முழுவதையும் ரசிக்க முடிகிறது. மனித ஆசைகளையும் நியாயத்தையும் படம் சித்தகரிக்கிறது. விக்ராந்த் விசாரணை நடத்தும் காட்சிகளில், நிஜ காவலரை நம் கண்முன் காட்டுகிறார். அந்தளவுக்கு தத்ரூபமாக நடித்து படத்துக்கு பக்கபலம் சேர்த்திருக்கிறார்.
அலகியாவுக்கு இது முதல் படம்போல் தெரியவில்லை. பலபடங்களில் நடித்த அனுபவசாலியாக திரையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியுள்ளது. சோனியா அகர்வாலின் தம்பி செளரப் அகர்வால் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு துணைநிற்கிறது. அதிகாரி விக்ராந்த் உண்மையை கண்டறிந்தாரா? வழக்கு தொடுத்த பெண்தான் உரிமை தாரரா? என்பதை விக்ராந்த் உறுதி செய்தாரா என்பதற்கு சட்ட நுணுக்கங்களுடன் பதில் அளிக்கிறது வில்…! திரைப்படம் அதற்காக.இயக்குநர் எஸ்.சிவராமனை வெகுவாக பாராட்டலாம் ..வில் பட குழுவினருக்கு வாழ்துக்கள்…!
நம்ம tamilprimenews ரேட்டிங் 2.6/5