மருதம் திரைவிமர்சனம் RATING 3.4/5

மருதம்
நடிப்பு: விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா தயாரிப்பு: சி வெங்கடேசன் இசை: என் ஆர் ரகு நந்தன்
ஒளிப்பதிவு: அருள் கே சோமசுந்தரம் இயக்கம்: வி கஜேந்திரன் பிஆர்ஓ: A.ராஜா
கதை : OPEN பண்ணா …!
ராணிப்பேட்டை அருகேயுள்ள இயற்கை சூழ்ந்த ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி ரக்ஷனா மற்றும் 5 வயது மகனுடன் தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார். சந்தோஷமான வாழ்க்கையுடன், சிறந்த விவசாயி என்ற நற்பெயருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது மகனை வசதியான ஆங்கிலவழி பாடசாலையில் படிக்க வைக்க காய்கறி வியாபாரி அருள்தாஸிடம் நிலத்தை அடகு வைத்து மூன்று லட்சம் கடன் வாங்கி மகனுக்கு கவுன்சிலர், எம்எல்ஏ உதவியுடன் பள்ளியில் படிக்க சீட் வாங்கி விடுகிறார்.
இந்நிலையில் திடீரென தன விவசாய நிலத்தில் சிலர் கம்பி வேலி போடுவதை பார்க்கிறார். அதனால் அவர்களுடன் சண்டை போடுகிறார். இந்த நிலத்தின் மீது உங்கள் தந்தை வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி இந்த நிலத்தை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்தொகையை நாங்கள் கட்டி வேலிபோடுகிறாம் என்று வேலிபோட வந்தவர்கள் கூறுகிறார்கள். என் தந்தை எனக்குத் தெரியாமல் நிச்சயமாக கடன் வாங்கியிருக்க மாட்டார் என்று விதார்த் கூறிவிட்டு, அந்த வங்கிக்குச் சென்று மேலாளரிடம் விவரம் கேட்கிறார். வங்கி மேனேஜர் அவருடைய தந்தை இறப்பதற்கு முன் நிலத்தை அடமானம் வைத்து நெல் அரைக்கும் இயந்திரத்தை வாங்கியதாகவும், அதற்காக ஆறு மாதம் வட்டி கட்டி விட்டு அதன் பின் கட்டாமல் இருந்ததால் பணத்தை மீட்க நிலத்தை ஏலத்தில் விட்டு விட்டதாக கூறுகிறார். இதனை கேட்கும் கன்னியப்பன் அதிர்ச்சியாகி, தன் தந்தை எந்த கடனும் வாங்கவில்;லை என்று கூறினாலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நிலத்தை பறிகொடுத்து விட்டு தவிக்கிறார்.ஒரே வாழ்வாதாரமாக இருந்த விவசாய நிலம் கை விட்டு போக, மகனின் படிப்பிற்காக வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல், பள்ளியில் சேர மீதிப் பணத்தையும் கட்ட முடியாமல், உணவுக்கும் வழி இல்லாமல் குடும்பம் கஷ்டத்தில் தவிக்கிறது.
விதார்த் நடவ்டிக்கைகளை கண்காணிக்க வங்கியில் ஆட்களை ஏற்பாடுகளை போர்ஜரி பார்ட்டிகள் செய்ய ஆரம்பின்றனர் ..விதார்த் வக்கீலிடம் போவதை தடுக்க இவர்கள் ஆட்கள் மூலமாக அதிக பணம் கேட்கிறார் ஒரு வக்கீல் …இது அறியாமல் அருளதாஸிடம் மீண்டும் வட்டிக்கு காசு கேட்கிறார் விதார்த் ..இவர் சூழலை உணர்ந்த அருளதாஸ் தனக்கு தெரிந்த வக்கீலை போய் பார்க்க சொல்கிறார்..அவர் தான் தினந்தோறும் நாகராஜ் …வக்கீல் கந்தன் கன்னியப்பனிடம் இந்த வழக்குக்கு தேவையான தடயங்களை தகவல்களை சேகரிக்க சொல்கிறார் …விதார்த் வக்கீல் கேட்ட அனைத்து டாக்குமெண்ட் களையும் ஒரு துப்பறிவாளன் போல follow பண்ணி கலெக்ட் பண்ணுகிறார் ..வக்கீல் உன் வலி யை உன்னை விட கோர்ட் இல் யாரும் சொல்ல முடியாது…ஆகவே நீயே வாதாடு என்கிறார் .
தன் நிலத்துக்கான கடன் பத்திரம் போலியானது பெரும் மோசடி நடந்திருக்கிறது என கூறி நீதிமன்றத்தில் வங்கியின் மீது வழக்கு தொடுக்கிறார் விதார்த். வங்கியின் வழக்க்றிஞரும் விதார்த்தும் நீதிபதியின் முன் வாதிடுகிறார்கள். முடிவு என்னானது? என்பதுதான் விறுவிறுப்பான சட்ட போராட்ட கதை…! சி வெங்கடேசன் படத்தை தயாரித்திருக்கிறார். இயக்கம்: வி கஜேந்திரன்…இந்த படம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் விதத்தில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட படம் என்பதால் மொத்த படக்குழுவினருக்கு “தமிழ் பிரைம் நியூஸ்” வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.4/5