காந்தாரா சேப்டர் 1திரைவிமர்சனம் RATING 4.3/5
படம்: காந்தாரா சேப்டர் 1
நடிப்பு: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர் இசை: அஜ்னீஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப் இயக்கம்: ரிஷப் ஷெட்டி பி ஆர் ஓ: யுவராஜ்


கதை : OPEN பண்ணா …!
ஈசன் தவம் செய்ய பார்வதியால் படைக்கப்பட்ட இடம் காந்தாரா. ஈசனின் அருள் பெற்றஅங்குள்ள ஈஸ்வரன் பூந்தோட்டத்தில் ஆதிவாசிகள் கூடியிருக்கிறார்கள்.காந்தாரா ,அடர்ந்த காட்டுப்பகுதி அங்கு சென்றவர்கள் திரும்பி வந்தது கிடையாது..பாங்காரா நாட்டு மன்னன் காந்தாராவைஅடைய சென்று மரணம் அடைகிறார்.
அவரது மகன் ஜெயராம் ஆட்சி பொறுப்பை ஏற்கிறார் .அவருக்கு இரண்டு குழந்தைகள் குலசேகரன், கனகவதி இவர்கள் இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் குலசேகரனுக்கு பட்டம் சூட்டுகிறார் மன்னர் ஜெயராம் . இளவரசன் குலசேகரன் ஆட்சி புரிகிறான். சிறுவயதில் இளவரசனின் தந்தை, காந்தாரா பகுதிக்கு செல்ல வேண்டாம் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்று மகனுக்கு கூறுகிறார்.
அதே சமயம் காந்தாராவில் காட்டுக்குள்ளேயே வாழ்ந்த ரிஷப் செட்டி தன்னுடைய பகுதிக்கு வேட்டையாட வந்த குலசேகரனை என்கிற மன்னனை ஓட வைத்துவிட்டு அதில் ஒரு வீரரான சென்னப்பா மற்றும் தன் தோழர்கள் எல்லாம் அழைத்துக் கொண்டு பங்காரா அரண்மனைக்கு வருகிறார். ரிஷப் ஷெட்டி ..!. அவர்களை இளவரசன் சிறை பிடித்து கொடுமை படுத்துகிறான். ஆனால் தந்தை அவர்களை விடுவிக்குமாறு கூறுகிறார். வேறு வழியின்றி விடுவிக்கும் இளவரசன் குலசேகரன் காந்தாரா மக்களை அழிக்க முடிவு செய்கிறான்.. ரிஷப் ஷெட்டி அங்கு இளவரசி கனகவதியை பார்க்கிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது துறைமுகத்தில் வியாபாரம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்த்து, ஈஸ்வரன் தோட்டத்து மக்களை விவசாயம் செய்ய வைத்து, ரிசப் செட்டி எல்லோரையும் வியாபாரி ஆக்குகிறார்.


தங்கள் காட்டில் விளையும் பொருட்களை சந்தையில் விற்று பணம் பார்க்கும் மக்களுக்கு பக்கத்து தேச அரசனால் தொல்லை ஏற்படுகிறது. இதனால் அந்த மக்களின் தலைவன் தொல்லை கொடுத்த படை வீரர்களை பெண்டெடுத்து அனுப்புகிறான்…இதன்பிறகு மன்னர் சமாதான பேச்சு வார்த்தை நடத்துகிறார். சமாதானம் என்ற பெயரில் சதி நடக்கிறது ..மன்னர் குலசேகரன் காந்தாரா பகுதியில் இருக்கும் ஈஸ்வரன் தோட்டத்துக்கு சென்று , எல்லோரையும் கொன்று குவித்து, நரக வேட்டை ஆடுகிறான். அங்குள்ள கடப்பாவாசிகள், சிவபெருமானை தங்கள் சக்திக்கு கொண்டு வந்து கடவுளை வசமாக்குகிறார்கள்…ஈஸ்வரன் தோட்டத்தில் வாழ்ந்த மக்களை குலசேகரன் கொன்று குவித்ததால், அவனையும் அவன் வீரர்கள் அனைவரையும் கடவுள் ரூபம் எடுத்து அனைவரையும் வேட்டையாடுகிறார் ரிஷப் செட் டி…
அதிகார வர்க்கத்திற்கும் தெய்வபக்தியுடன் வாழும் ஆதி பழங்குடிகளுக்கும் நடக்கும் மோதலைப் பற்றி பேசிய காந்தாரா திரைப்படம் 2022-ல் வெளிவந்து பெரும் வெற்றியை பெற்று வரலாறு படைத்தது ..!பஞ்சுருளி கடவுளை காட்சி படுத்திய பிரமாண்டம் அந்த பின்னணி இசை மிரட்டலும் பக்தியும் கலந்த கலவையாக இருந்தது…!இதிலும் குலதெய்வம் இடம் பிடிக்கிறது. பக்கத்து தேசத்தில் உள்ள மன்னனின் பேராசை இருக்கிறது. தங்கள் பக்க நியாயத்துக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கு மேலாக மிரட்டும் கிளைமாக்ஸ் இருக்கிறது…ஈஸ்வரன் தோட்டத்து மக்களுடன், அதைத் தொடர்ந்து நடக்கும் மோதல், எதிர்பார்ப்பது போலவே அரசன் வில்லன், அம்மக்களின் பண்பாட்டுப் பின்னணி, திடீரென ஆட்டம் காட்டிப் போகும் காவல் தெய்வம், ‘காந்தாரா’ காட்டும் உலகம் வியக்க வைக்கிறது.

ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் தன் நடிப்பாலும் இயக்கத்தாலும் முழு படத்தையும் தூக்கி சுமந்து இருக்கிறார்…இந்த படத்துக்காக நாயகன் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இந்த படம் ..ஒரு இயக்குனராக இரவு பகல் ஒரு தவம் போல அனைவரையும் ஒருங்கிணைத்து அதற்கும் மேலாக vfx தொழில் நுட்பத்தை நேர்த்தியாக பயன் படுத்திய விதமாகட்டும் awesome work .ரிஷப் ஷெட்டி ..hatsoff
நாயகி ருக்மணி வசந்த், இளவரசிக்கான மிடுக்குடன் அவர் நடை அழகு ..ரிஷப ஷெட்டியை காதலுடன் நெருங்கும் காட்சிகளை இயல்பாக அதே நேரம் ஒரு இளவரசி யின் திமிரையும் தனது அழகான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார்..!. மன்னராக வரும் ஜெயராம், சாணக்கியத்தனத்தில் கவர்கிறார். அவரது மகனாக வரும் குல்சன் தேவய்யா தனது வித்தியாசமான மேனரிசங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்…!இந்த மாதிரி படங்களுக்கு பின்னணி இசை பெரிய பக்கபலம் ..இதை உணர்ந்த இசையமைப்பாளர் பி. அஜினீஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நேர்த்தி முதல் பாகம் போலவே …sorry அதற்கும் மேலாகவே மிரட்டிவிட்டார் . ..! அரவிந்த் கே காஷ்யப் பின் கேமரா காடு மேடு பள்ளம், மலை, நீர்வீழ்ச்சி என கண்ணுக்குள் காந்தாரா கட்டுக்குள் நம்மையும் இழுத்து செல்கிறார் …!
மொத்தத்தில் காந்தாரா சேப்டர் 1 இந்திய அளவில் இந்த வருட வெற்றி பட வரிசையில் மணி மகுடமாக அமர்ந்து விட்டது …!
நம்ம tamilprimenews ரேட்டிங் 4.3/5

