ரைட் திரைவிமர்சனம் RATING 3.4/5
படம்: ரைட்
நடிப்பு: நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா தயாரிப்பு: திருமால் இசை: குணா சுப்ரமணியன்
ஒளிப்பதிவு: எம் பத்மேஷ் இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ் குமார் பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

கதை : OPEN பண்ணா …!
சென்னையிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் நட்டி. பிரதமர் பாதுகாப்பிற்காக அவர் சென்ற நிலையில் அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.அந்த காவல் நிலையத்துக்கு தன் மகனை காணவில்லை என்று புகார் கொடுக்க அருண்பாண்டியன் வருகிறார். அதே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் அக்ஷ்ரா ரெட்டி தனது திருமண அழைப்பிதழை கொடுக்க காவல் நிலையத்துக்கு வருகிறார்.
அதே காவல் நிலையத்தில் சில காவலர்களும் கைதிகளும் இருக்கிறார்கள். இப்போது இவர்கள் யாவரும் காவல் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது. மீறி சென்றால் தானியங்கி கதிர்வீச்சி மூலம் குண்டு வெடித்து சாவார்கள். இதனால் பீதியடைந்து அனைவரும் உள்ளேயே இருக்கிறார்கள். அவை உண்மை என்று நிரூபிப்பது போல் லாக்கப்பில் இருந்து நைசாக வெளியேற முயன்ற கைதி ஒருவர் குண்டு வெடித்து படுகாயம் அடைகிறார் ..! இந்நிலையில் அந்த மர்ம மனிதன் ஒரு மடிக்கனணி மூலம் காவல் நிலையத்திலிருக்கும் காவலர்களுக்கு சில கட்டளைகளை பிறப்பிக்கிறான்.

அதன்படி நீதிபதி வினோதினியை வரச் சொல்ல கட்டளையிடுக்றான். அவரும் காவல்நிலையத்துக்கு வந்துவிடுகிறார். ..பிரதமர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற விபரீதம் வெளியே தெரிய வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிதாகும். அதனால் இந்த பிரச்சினையை அடக்கி வாசிக்க உத்தரவிடுகிறார் கமிஷனர். இந்த நிலையில் மர்ம நபரின் கட்டுப்பாட்டில் இருந்து காவல்துறை மீட்கப்பட்டதா? அந்த மர்ம மனிதர் பிடிபட்டாரா, இல்லையா? இதில் அவரது நோக்கம் என்ன என்பதை கனமான ஒரு மனம் நெகிழும் கதை ..!
படம் முழுவதும் எந்த நேரத்தில் எந்த குண்டு வெடிக்குமோ என்ற பரபரப்பு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ரைட்டர் மூணாறு ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் அக்ஷரா ரெட்டி, புகார் தர வந்த அருண்பாண்டியன் மூவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.அறிமுக நடிகையாக வரும் அக்ஷரா ரெட்டி சேலை கட்டிக் கொண்டிருந்தாலும் போலீஸ் சீற்றத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகன் என்றாலும் அவர் வரும் காட்சிகள் குறைவு.. அதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. . ஏனென்றால்கதை செல்லும் பாதை அப்படி . தன் மகள் தீக்கிரையாகி கிடக்கும் காட்சியை பார்த்து அழுகின்ற நட்டி நட்ராஜ் படம் பார்ப்பவர்களின் அனுதாபங்களை அள்ளி செல்கிறார். . மகனை காணாமல் போன அப்பாவின் பதற்றத்தை அருண்பாண்டியன் அப்படியே படம்பிடித்து காட்டுகிறார். ஒரு காவல்நிலையத்துக்குள்ளேயே முழுப்படத்தையும் முடித்திருக்கும் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார் அடுத்தடுத்த காட்சிகளை சில திருப்பங்களுடன் திரைக்கதையில் சொல்லி தன் தரப்பை”ரைட்” என ஞாய படுத்தி உள்ளார் .சஸ்பென்ஸ் கலந்த இந்த கதையை படமாக்க இயக்குனருடன் உழைத்த “ரைட்” பட குழுவினருக்கு பாராட்டுக்கள் ..!
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.4/5

