பல்டி திரைவிமர்சனம் RATING 3.7/5

பல்டி
நடிப்பு: ஷேன் நிகம், சாந்தனு, பிரீத்தி அஸ்வராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், தயாரிப்பு: சந்தோஷ். டி. இசை: சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு: அலெக்ஸ் ஜே புலிகல் இயக்கம்: உன்னி சிவலிங்கம் பிஆர் ஓ: யுவராஜ்
கதை : OPEN பண்ணா …!
கேரள, தமிழக பார்டரில், நடக்கும் கதை “பல்டி” ஷான் நிகம், சாந்தனு உள்ளிட்ட நான்கு நண்பர்கள் பஞ்சமி கபடி குழுவை சேர்ந்தவர்கள். போட்டி என்று வந்து விட்டால் கில்லியாக ஆடி ஜெயிக்கிறார்கள்.. பஞ்சமிடீம், பொற்றாமரை டீம், இரண்டு கபடி டீம்-க்கும் எப்போதும் கடும் போட்டி நடக்கிறது, பொற்றாமரை டீம் செல்வராகவன் வைத்துள்ளார், அத்தோடு அவர் ஜெட் ஸ்பீடு வட்டி, ஜம்போ வட்டி, மீட்டர் வட்டிக்கு விடுபவர்.கடன் கொடுக்க முடியாதவர்களை ஒட்டு துணி இல்லாமல் உட்கார வைத்து, அவர்கள் மனைவியை வரவழைத்து அவமானப்படுத்தும் செல்வராகவன்.
இந்த 4 நண்பர்கள் பண தேவை வரும்போது தங்கள் அணி தவிர மற்ற அணிக்காக விளையாடுவார்கள் ..அப்படி ஒருமுறை நான்கு நண்பர்கள் சோடா பாபு (அல்போன்ஸ் புத்திரன்)வுக்கு ஆடுவதாக கூறிவிட்டு பைரவன் (செல்வராகவன்) அணிக்கு ஆடுகிறார்கள்.. பொற்றாமரை கபடி டீமில், இணைத்து சோடா பாபுவை வெற்றிக் கொள்கிறார் செல்வராகவன் .கபடியில் இவருக்கு தன்னுடைய டீம் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர் பொற்றாமரை வங்கி துவக்க வேண்டும் என்று கனவு கானுகிறார்…சாந்தனு வால் ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் வைத்திருக்கும் ஷோ பாய்ஸ் கபடி டீம்-ல் ஆட சம்மதிக்க, பணத்திற்காக தற்போது பொற்றாமரை டீம்-ல் விளையாட சம்மதிக்க அல்போன்ஸ் புத்திரன் ஈகோ அதிகமான, அவர் செல்வராகவனுக்கு சொந்தமான ஒரு கார்-யை தூக்குகிறார். அந்த கார் தங்களால் தான் போனது என்பதால் சமாதானம் பேச போன ஷான் நிகம், சாந்தனும் மற்றும் அவர் நண்பர்களை அல்போன்ஸ் தாக்க, அங்கு அவரை அடித்து துவைத்து ஷான் நிகம் & கோ கார்-யை எடுத்து வர, ..ஒரு கட்டத்தில் விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள் நான்கு நண்பர்கள் பைரவனுக்கு அடியாளாக மாறிவிடுகிறார்கள்.
இதற்கிடையே நாயகி கல்யாணியுடன், உதயன் காதல் , நாயகியின் அண்ணன் பிரதீப் பைரவனிடம் கடன் வாங்கி, ஒரு காலை இழப்பது, என்று கதை செம ஸ்பீடாக செல்கிறது..இந்த சூழலில் பைரவன் மீது போட்ட கேஸ் வாபஸ் வாங்க சொல்லி உதயன் காதலியை கையை பிடித்து இழுக்கும் பைரவன் ஆளை உதயன் தாக்க பெரும் மோதலாக மாறுகிறது. ஒரு சமயம் பைரவனையே உதயன் தாக்க அவர்களை கொல்ல பைரவன் ரவுடிகளை அனுப்புகிறார். அதன் பிறகு நடப்பது என்ன.அடுத்தடுத்து இவர்கள் பகை எங்கு கொண்டு சென்றது என்பதற்கு ரத்தக்களரியாக பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
சாந்தனு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார் …கிளைமாக்ஸ் காட்சியில் ஷேன் நிஹம் இருவரும் போட்டி போடு நடித்துள்ளார்கள் …இருவரும் கபடி விளையாட்டு மற்றும் சண்டை காட்சிகளில் அசத்தி விட்டார்கள்..! ஷேன் நிஹம் அவருக்கு இந்த படம் 25 வது படம் ..அவருக்கு வாழ்த்துக்கள்
நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேங்ஸ்டர் உலகிற்குள் செல்கிறார்கள் அந்த பழக்கம் அவர்களை எப்படி சுத்த விடுகிறது என்பது திரைக்கதை யுக்தி..சரியான பாதையை தேர்ந்தெடுக்காமல் பணத்திற்க்காக் அவர்களை அறியாமல் தவறான பாதையை தேர்வு செய்தது ..என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இயக்குனர் உன்னி சிவலிங்கம் தன் திரைகதை மூலம் மிரட்டியுள்ளார் ..அல்போன்ஸ் புத்திரன் ஆக்ட்டிங் ரொம்ப casual ரசிக்கும் படி இருந்தது ..!மூன்று வில்லன்களில் ஒரு வில்லி பூர்ணிமா இந்திரஜித் (ஜி மா) கேரக்டரில் ராக்கிங் performence ..!
அதே போல படத்தில் வரும் கபடி காட்சிகள் நாம் நேரில் கபடி பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்கிய ஒளிப்பதிவாளருக்கு தனி பாராட்டுக்கள் ..சண்டை காட்சிகளை யதார்த்தமாக அதே நேரம் மிரட்டலாக அவர் கேமரா கண்கள் மூலம் நமக்கு கடத்திய ஈர்ப்பு அருமை ..!
ப்ரீத்தி அஸ்ரானி ஷான் நிஹாம் காதலிக்கும் இடங்கள் கவிதை அதிலும் கருப்பு நிறமாக பூ விற்கும் பெண்ணாக ப்ரீத்தியின் பார்வையில் பட்டதும் கபடி வீரன் தடுமாறுவது இயக்குனர் அனுபவித்து இயக்கியுள்ளார் ..நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேங்ஸ்டர் உலகிற்குள் செல்கிறார்கள் அந்த பழக்கம் அவர்களை எப்படி சுத்த விடுகிறது என்பது திரைக்கதை யுக்தி..சரியான பாதையை தேர்ந்தெடுக்காமல் பணத்திற்க்காக் அவர்களை அறியாமல் தவறான பாதையை தேர்வு செய்தது ..என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இயக்குனர் உன்னி சிவலிங்கம் தன் திரைகதை மூலம் மிரட்டியுள்ளார்!
(BALTI) பல்டி பட குழுவினருக்கும் நம்முடைய பாராட்டுக்கள்
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.7/5