அந்த 7 நாட்கள் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5
படம்: அந்த 7 நாட்கள்
நடிப்பு: அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே பாக்யராஜ், நமோ நாராயாணா தயாரிப்பு: முரளி, கபிர்தாஸ் இசை: சச்சின் சுந்தர் ஒளிப்பதிவு: கோபிநாத் துரை இயக்கம்: எம் சுந்தர்
பிஆர் ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

கதை : OPEN பண்ணா …!
வானியல் துறை படிப்பவர் அஜிதேஜ். இவர் ஒரு முறை 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சூரிய கிரகணத்தை டெலஸ்கோப்பில் பார்க்கிறார். அப்போது இவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. யாருடைய கண்களையாவது பார்த்தால் அவர்கள் இறக்கும் நேரம் அவருக்கு தெரிந்து விடுகிறது. எதிர்காலத்தை அறிந்து கொள்கிறார்..!
அவர் சொன்ன நேரத்தில் அவர்களுக்கும் மரணம் சம்பவிக்கிறது. ஒருமுறை அஜிதேஜ் தான் காதலிக்கும் ஶ்ரீஸ்வேதாவின் கண்களை பார்க்கிறார். இன்னும் 7 நாட்களில் ஶ்ரீஸ்வேதாவும் மரணிக்கப்போவதை தெரிந்து கொள்கிறார். அந்த மரணதிலிருந்து தன் காதலியை காப்பாற்றினாரா இல்லையா? என்பதுதான் கதை.!!
இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த எம் சுந்தர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பாக்யராஜ் உதவியாளராக இருந்தாலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதையை பாக்யராஜ் எப்படி தனது படங்களில் காட்சியில் எதிர்பார்க்ககாத ட்விஸ்ட் வைப்பாரோ அதுபோல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.

காதல் ஜோடியாக நடித்திருக்கும் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா தொடக்க காட்சிகளில் காதல் விளையாட்டு விளையாடி காட்சிகளை ஜாலியாக நகர்த்துகின்றனர்.
காதல் ஜோடிகளின் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து அவர்கள் இவர்களை துரத்த தொடங்கியதும் ஊரை விட்டு ஓடிச் சென்று கொடைக்கானலில் தங்குவதும், அங்கு இவர்களுக்குள் உடல் அளவில் ஏற்படும் ராபிஸ் வெறி பிடிக்கும் எதிர்பார்க்காத தருணங்களை காட்சியில் மிரட்டலாக காட்டி உள்ளனர்
கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா வெறி நாய் போல் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது பதட்டத்தை அதிகரிக்கிறது. அவருடன் சேர்ந்து அஜிதேஜ் வெறி நாய்போல் மாறுவது கூடுதல் அதிர்ச்சி. இருவரும் நடிப்பும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இது ஒரு உண்மைக் காதலின் உணர்வு சொல்லும் கதை. காதலுக்காக கஷ்ட்டப்படுவதை வரமாக நினைக்கும் காதலர்களின் கதை. அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு அஜிதேஜின் நடிப்பு ஈர்த்துவிட்டது. அவரின் நடிப்புக்கு சற்றும் குறைவின்றி ஈடுகொடுத்து நடித்துள்ளார் கதாநாயகி ஶ்ரீஸ்வேதா. வெறிநாய் கடித்ததில் நாயாகவே மாறி சாகப்போகும் நிலையை படம்பார்ப்பவர்களின் கண்முன்னே தற்ரூபமாக காட்டி நம்மை கதிகலங்க செய்துவிட்டார். அபாரமான நடிப்பு.
அமைச்சராக வரும் பாக்கியராஜ் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் நிறைகிறார். அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன் வழக்கமான நகைச்சுவை நடிப்பிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு நடித்து அசத்துகிறார்.
ஒரு காதல் காவியத்தை வித்தியாசமான் கோணத்தில் மனதுக்குள் பயம் பதட்டம் பரவவிட்டு படம்பிடித்து காட்டியிருக்கும் இயக்குநர் எம். சுந்தர் மற்றும் அவர் team அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.6/5

