கிஸ் திரைவிமர்சனம் RATING 3.3/5

படம்: கிஸ்
நடிப்பு: கவின், ப்ரீத்தி அஸ்ராணி, பிரபு, வி டிவி கணேஷ், ஆர் ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, கௌசல்யா
தயாரிப்பு: ராகுல் இசை: ஜென் மார்ட்டின் ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன் இயக்கம்: சதீஷ் பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D ‘One), அப்துல் ஏ நாசர்
கதை : OPEN பண்ணா …!
கதாநாயகி பிரீத்தி அஸ்ராணி முலம் கதாநாயகன் கவினுக்கு ஒரு மாயப்புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகதை கவின் படித்ததும் ஒரு அபூர்வு சக்தி கவினுக்கு கிடைக்கிறது. காதலர்கள் முத்தமிடுவதை கவின் பார்த்துவிட்டால் அந்த காதலர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை கவினுக்கு முன்கூட்டியே தெரிகிறது. இப்படியொரு அபூர்வ சக்தி படைத்த புத்தகம் கிடைக்க காரணமாயிருந்த பிரீத்தி அஸ்ராணியை கவின் நேரில் பார்க்கிறார். பார்த்ததும் கவின் அவள் மீது காதல் கொள்கிறார். பிரீத்தியும் கவின் மீது காதல் கொள்கிறாள்..!
திடீரென்று சாரா நெல்சனுக்கு முத்தம் தரும்போது ஒரு அதிர்ச்சி காட்சி தெரிகிறது. அதைப்பார்த்ததும் கவின் பதறுகிறார், கலங்குகிறார். பிரித்தியின் எதிர்காலம் என்ன? அந்த எதிர்கால நிகழ்விலிருந்து பிரீத்தியை கவின் காப்பாற்றினாரா? அந்த மாயப்புத்தகத்திற்கும் பிரீத்திக்கும் கவினுக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதுதான் கதை. நடன இயக்குநராக தனது திறமையை நிரூபித்த சதீஷ் கிருஷ்ணன் கதை சொல்வதிலும், அதனை இயக்குவதிலும் எமக்கு திறமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காக ‘கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். கதையாக கேட்கும் போது அழகாகவும், கிளர்ச்சியூட்ட கூடியதாகவும், இளமை ததும்பக்கூடியதாகவும் இருக்கிறது.
கவின், காதலுக்கு எதிரி என்பது போல் காட்டுவதற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அந்தக் காட்சியை தவறவிட்டால் அடுத்து கதை புரியாது.ஏற்ற கதாபாத்திரத்தில் ஓவர் ஆக்டிங் இல்லாமல் செய்து முடிப்பது கவின் இயல்பு. இந்த படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் முகத்தை வெறுமனே வைத்துக்கொண்டு பார்ப்பதெல்லாம் ஏன் இப்படி இருக்கிறார் ஏதாவது ரியாக்ஷன் கொடுத்திருக்கலாமே என்று எண்ண வைக்கிறார்….கவினும் சரி, இயக்குனர் சதீஷும் சரி, கதாநாயகி ப்ரீத்தியம் சரி நடனம் ஆடுவதில் கில்லாடிகள். அதை இயக்குனர் சதீஷ் அளவோடுதான் பயன்படுத்தியிருக்கிறார். அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணியா இந்த படத்தில் நடித்திருக்கும் ப்ரீத்தி என்று கேட்கும் அளவுக்கு ரொம்பவே கிளாமராக வருகிறார்.குறிப்பாக ஹாஸ்பிடல் காட்சிகளில் கூட கிளாமர் உடையணிந்து வருவது …இயக்குனரின் ரசனைக்கே விட்டு விடலாம் ..!
ஆனால் வி டிவி கணேஷ் – ஆர் ஜே விஜய் ஆகிய இருவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறது. இரண்டாம் பாதியில் இடம்பெறும் கவின் – பிரீத்தி இடையேயான காதல் காட்சிகள் வழக்கமானதாக இருந்தாலும்… . கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார். . மார்க்கஸ் – டெய்ஸி தம்பதியினராக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் மற்றும் தேவயானியின் நடிப்பிலும் அனுபவம் பளிச்சிடுகிறது. ஒளிப்பதிவாளரின் உழைப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது. அவரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்ட வைக்கிறது.காதல் கலந்த ஃபேண்டசி படத்தை இயக்கியிருக்கிறார் சதீஷ். நடன இயக்குனரன இவர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். புதுசா புளியமரம் ஏறாமல் ஏடாகூடமாக எதையும் செய்யாமல் இளைஞர்களை கவரும் வகையில் கமர்சியல் காதல் கதையை தந்திருக்கிறார் சதீஷ்…! சலிப்புத்தட்டாமல் இரண்டரை மணி நேரம் கற்பனை கதை என்றாலும் கவினுக்காக ரசிக்கலாம் …ப்ரீதிக்காக இளைஞர்கள் படம் பார்க்கலாம் ..மற்றபடி கிஸ் சம்திங் மிஸ் …!
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.3/5