சக்தி திருமகன் திரைவிமர்சனம் RATING 3.4/5

சக்தி திருமகன் திரைவிமர்சனம் RATING 3.4/5

படம்: சக்தி திருமகன்..

நடிப்பு: விஜய் ஆண்டனி, கண்ணன், க்ரிஷ் ஹாசன், வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண் ரத்தோட், ரினி பாட் , ரியாஜித்து, சோபா விசுவநாத்,

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி   இசை: விஜய் ஆண்டனி   ஒளிப்பதிவு: ஷெல்லி ஆர் காலிஸ்ட்   இயக்கம்: அருண் பிரபு   பிஆர்ஓ: ரேகா

கதை : OPEN பண்ணா …!

விஜய் ஆன்டனி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்அப்படி இந்த கதையில் 1989 ம் ஆண்டு அம்மா அப்பாவை இழந்து  அதிகார வர்க்கத்தால் அனாதையாக்கப்பட்ட கிட்டு என்கிற  விஜய் ஆண்டனி சிறுவயதுமுதலே பழிதீர்க்கும் மனதுடன் வளர்ந்து வருகிறார். அரசு அலுவலகத்திலுள்ள அதிகாரிகளுக்கு டீ வாங்கித் தரும் பையனாக சேர்ந்து அதிகாரிகள் செய்யும் ஊழல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஏழைகளின் நிலைகளையும் கவனித்து வருகிறார். அவர் வளர வளர அவருடன் சேர்ந்து எப்படி ஊழல் செய்யலாம் ஏழைமக்களுக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையும் வளர்கிறது…

34 வருடங்களுக்கு பின் கிட்டு என்கிற விஜய் ஆண்டனி  அரசியல் தரகர்… அரசாங்கத்தில் வேலை முடிய வேண்டுமென்றால் தனக்கான ஒரு கமிஷனை எடுத்துக்கொண்டு அந்த வேலையை முடித்து தருவதில் கில்லாடி. மத்திய பெண் மந்திரி ஒருவரின் உதவியாளர் கிட்டுவை சந்தித்து “என்னை யாரும் மதிப்பதே இல்லை, குறிப்பாக மந்திரி என்னை சுத்தமாக மதிப்பதில்லை. அவர்களிடம் எனக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால். அந்த மந்திரி வெளிநாட்டு நிறுவனத்திற்கு தரவிருக்கும் நிலத்தை என் பெயருக்கு மாற்றித் தர வேண்டும்” என்று கிட்டுவிடம் கேட்கிறார். அந்த வேலையில் கிட்டு இறங்குகிறார்.

இது பெண் மந்திரிக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. பெண் மந்திரியின் அந்தரங்க ஆலோசகர் ஒருவர் மந்திரி என்னென்ன செய்ய வேண்டுமென்று அட்வைஸ் தருகிறார். ஆனாலும்  பல்வேறு விஷயங்கள் அவரது கையை மீறி நடக்கிறது. தான் சூழ்நிலை கைதியாக இருப்பதை உணர்ந்த பெண் மந்திரி  தன்னை இந்த கதிக்கு ஆளாக்கியவரை கண்டுபிடித்து அழிக்கும்படி அந்தரங்க ஆலோசகரிடம் கூறுகிறார். அவர் இந்த வேலைகளை தரகர் கிட்டுதான் செய்கிறார் என்பதை அறிந்து அவரை முடக்கப் பார்க்கிறார் அதன் பிறகு நடப்பது என்ன .?   விஜய் ஆண்டனி ஒரு அரசியல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி சுமார் 60 ஆயிரம் கோடிக்கு எப்படி அதிபரானார்? அரசியல் சாணக்கியனாக அறியப்படும் வில்லனிடம் எப்படி சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விஜய் ஆண்டனி இந்த மாதிரியான குற்றச் செயல் செய்து தன் காரியத்தை சாதிக்கும் கதாபாத்திரத்தை  தனதுவழக்கமான நிதாதமான நடிப்பால் அசத்தியுள்ளார். முதல் பாதி முழுவதும் அரசியல் களம் சூடு பறக்கிறது. மாநிலம் முதல் மத்திய அரசு வரை தங்களுக்கு வேலை நடக்க தரகர்கள்  எந்த அளவிற்கு பயன்படுகிறார்கள், அவர்கள் ராஜதந்திரம் என்ன என்பதை அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளார் இயக்குநர் அருண் பிரபு…விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக “சக்தி திருமகன்” படமாக அமைந்திருக்கிறது…OK இது வரை ..!

ஆனால்  இயக்குனரிடம் சில கேள்விகள்

இந்த கதைக்களத்தை இயக்குனர் அருண் பிரபு கையாண்டிருக்கும் விதம்..,சக்தி திருமகன் நாட்டில் நடக்கும் அரசியல் அவலங்களை பேசுகிறேன் என்று கடந்த 60 ஆண்டுகள் நாட்டில் நடந்த ஊழல்களை பண பரிமாற்றங்களை 2025 இல் தற்போது நடப்பதாக காட்டி இருப்பது சரியா …?.அளவுக்கு அதிகமாக வசனங்கள் மூலம் ஊழல் பட்டியல் money லாண்டரிங் மற்றும் மக்களுக்கு புரியாத TECHNICAL டெர்ம்ஸ் உங்க வசனங்கள் கடந்து செல்கின்றன..தற்போது 11 வருடமாக ஊழல் இல்லா நேர்மையான மத்திய ஆட்சி நாட்டில் நடக்கும் போது state சென்ட்ரல் ஒரே தராசில் வைத்து பேசுவது எதனால்…? அடிமை அதிகாரிகள் இருக்கும் மாநில அரசில் தற்போது நடக்குது என்பதை சொல்வதில் இயக்குனர் பார்வையில் இதில் தெளிவில்லை…B & C மக்களை அதிகமாக ஆங்கில வடிவில் இருக்கும் வசனங்கள் சென்று சேருமா  ..??கிட்டு போன்ற ப்ரோக்கர் களால் தான் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கொள்ளை யடித்து வாழ்கிறார்கள்..இந்த மாநிலத்தில் ஏரளாமான கிட்டுக்கள் மாவட்ட வாரியாக வளர்ந்து வருகிறார்கள்..இவர்களை களையெடுக்க உங்க படம் ஒரு பாடமாக இருந்தால் வாழ்த்துக்கள் ..!

நம்ம tamilprimenews ரேட்டிங் 3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *