படையாண்ட மாவீரா திரைவிமர்சனம் RATING 3.6/5

படையாண்ட மாவீரா  திரைவிமர்சனம் RATING 3.6/5

படம்: படையாண்ட மாவீரா

நடிப்பு: வா கௌதமன் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா

தயாரிப்பு:நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி  இசை: ஜிவி பிரகாஷ்(பாடல்)  பாடல்கள்: வைரமுத்து   பின்னணி இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்    இயக்கம்: வா கௌதமன்   பி ஆர் ஓ: நிகில் முருகன்.

கதை : OPEN பண்ணா …!

காடுவெட்டி குரு எனும் அரியலூர் ஜெயங் கொண்டம் பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒரு சமுதாய தலைவரின் கதை …  உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மண்ணையும் மானத்தையும் காக்க போராடிய ஒரு மாவீரனைப் பற்றியது. …அவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை திரைவடிவில் நேர்த்தியாக கொடுத்துள்ளார்  இயக்குனர் வா கௌதமன் ..!

மேலிட உத்தரவின் படி குருவை பிடிக்க என்கவுண்டர் spl போலீஸ் அதிகாரி அந்த பகுதிக்கு நியமிக்க படுகிறார் ..அவர் அந்த ஊர் காவலரிடம் குருவை பற்றி விசாரிக்க குருவின் வாழ்க்கையின் வரலாறு நம் கண் முன்னே விரிகிறது..

காடுவெட்டி குரு, அவர்கள் ,தமிழ் இனத்து பெண்கள் மானம் காக்க எந்த எல்லைக்கும் சென்று எதிரிகளை கொன்று மண்ணுக்குள் புதைப்பார், என்று சொல்லப்பட்டிருக்கிறது . திலகா என்ற பள்ளி மாணவியை ,சீரழித்த கதிர் ,சந்திரன், மணிமாறன் இவர்களை கொன்று குவிக்கும் இவர், ஒரு பெண், போலீஸ் ஸ்டேஷனில் கணவர் அடிக்கிறார் என்று புகார் செய்யப் போக அங்கு போலீஸ் அதிகாரி(சாய்தீனா) எல்லை மீற அந்த போலீஸ் ஸ்டேஷனை சுக்கு நூறாக அடித்து தூளாக்குகிறார் செம விறுவிறுப்பான முதல் பகுதி …!

இரண்டாவது பகுதியில் அவரின் குடும்ப வாழ்க்கை ,மற்றும்  ஏழை மாணவ மாணவிகளை, படிக்க வைப்பது ..”அய்யா “அவர்களிடம் அன்புக்கு பாத்திரமாக இருப்பது ,பட்டியல் சமுதாய மக்களிடம் அன்பு காட்டுவது,அங்கே அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்து அவர்களிடம் சமூக ஒற்றுமை பற்றி பேசும் இடம் அருமை..!மூன்றாவதுபகுதியில் குரு, என்கிற குருநாதன், அவர் தந்தை ஜெயராம் ,(சமுத்திரக்கனி) அவரின் எதிரியான ரவிச்சந்திரன்(ஆடுகளம் நரேன்) இருவருக்கும் ஏற்படும் மோதலை மிக விறு விறு ப்பாக காட்டப்பட்டிருக்கிறது..!அது பட்டியல் இனமக்களான, மன்சூர் அலி கானுக்கு, ஜெயராம் ஆன சமுத்திரக்கனி உதவி செய்ய அவர் உயிரேயே எடுக்கிறார் நரேன் தன் அப்பாவை கொன்றவரை பழிவாங்குகிறார் குரு. அந்த இளமைப் பருவத்தில் தமிழ் கௌதமன் நடித்திருக்கிறார் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.

அடுத்த  பகுதியில் சூரியபாபு (மதுசூதன ராவ்)என்கிற பண முதலையுடன் மோதுவதாக அமைக்கப்பட்டு இருக்கிறது .எதிரியான, சூரிய பாபு வீட்டிலே சென்று ஓர் இரவு முழுவதும் தூங்கி எழுவது, வில்லன்கள் அவரை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் கொண்ட ஒரு மாவீரனின் ரசனையான காட்சி.அரியலூர் சிமெண்ட் பேக்டரி கார்பொரேட் அதிகாரிகள் சிண்டிகேட் குரு வளர்ச்சி அவர்களுக்கு பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து அவரை விலை பேசுகிறார்கள் ..100 கோடி முதல் 1000 கோடிக்கு விலை வைக்கிறார்கள்..அதையெல்லாம் மறுத்து மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நிற்கிறார் ..!…ஒரு கட்டத்தில் காட்டில் வாழும் வீரப்பனை சந்திக்கிறர் ..வீரப்பன் அறிவுரைப்படி அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து MLA வாக சட்டசபை சென்று தன பகுதி மக்களுக்காக கோபத்துடன் குரல் கொடுக்கிறார்..!

ஐந்தாவது பகுதியில் அனல் மின் நிலையம் திறக்க அந்த மண்ணின் மைந்தர்களைஊரை விட்டு துரத்தி, அவர்கள் நிலத்தை பிடுங்கி ,பல கோடி முதலீடு செய்யும் அந்த பண முதலையிடம் மோதும் காட்சி, படத்தின் மிகப்பெரிய விறுவிறுப்பான காட்சிகளில் குரு அவர்கள் கைது நடவடிக்கை துணிச்சல் மிக்க நடிப்பு சூப்பர்!காடுவெட்டி குருவின் வாழ்க்கை சம்பவங்களையும், சில கற்பனை சம்பவங்களையும் மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் வ.கெளதமன், 

தன் உடலுக்கு வந்த நோயை கூட கண்டு கொள்ளாமல் இருப்பது ..மக்கள் நலனே முக்கியம் என தன் நலன் பேணாமல் கடைசியாக  குரு அவர்கள் நோய்வாய்ப்பட்டு, மரணம் அடைவதைப் போல காட்டப்பட்டிருக்கிறது அவர் ஒரு மனிதநேயர், அவருக்காக அனைத்து மத மக்கள் எல்லாரும் பிரார்த்தனை செய்வது போல படத்தை முடித்து இருக்கிறார்கள்…!

மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மீது பல வழக்குகளும், குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில், அவர் மீதிருந்த தவறான கண்ணோட்டங்களை உடைத்து, அவர் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதோடு, சாதி பாகுபாடுகளை தவிர்த்து, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்து   தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்வது மட்டுமல்லகுருவின் மறைக்கப்பட்ட அடையாளங்கள் இந்த ‘படையாண்ட மாவீரா’.இயக்குனருக்கு மட்டுமல்ல ..மொத்த பட குழுவினருக்கும் பாராட்டுக்கள் ..இது சாதி படமல்ல ..சமூக நீதி பேசி மண்ணுக்காக மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒரு தலைவனின் உண்மை கதை ..!

 

நம்ம tamilprimenews ரேட்டிங் 3.6/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *