தண்டகாரண்யம் திரைவிமர்சனம் RATING 3.9/5

படம்: தண்டகாரண்யம்
நடிப்பு: தினேஷ், கலையரசன், டான்சிங் ரோஸ் சபீர், பால சரவணன், ரித்திகா , வின்சு சாம், அருள்தாஸ், முத்துக்குமார், யுவன் மயில்சாமி
தயாரிப்பு: எஸ் சாய் தேவானந்த், எஸ் சாய் வெங்கடேஸ்வரன், பா ரஞ்சித் இசை: ஜஸ்டின் பிரபாகர் ஒளிப்பதிவு: ஸ்ரீ கிருஷ் இயக்கம்: அதியன் ஆதிரை பிஆர்ஓ: குணா
கதை : OPEN பண்ணா …!
காடுகள் நிறைந்த பகுதிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. அந்த காடுகளுக்கு தண்டக்காரண்யம் என்று பெயர்.கிருஷ்ணகிரி எல்லையில் ,உள்ள தொளுவ பேட்டை என்ற கிராமத்தில் படம் ஆரம்பித்து வனத்துறை அதிகாரி அருள் தாஸ், வன்மம் தினேஷ் , மற்றும் அவரது கிராமத்தினரை குதறி எடுக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட தினேஷ் ,கலையரசன் எப்படி சூறாவளிக்குள் சிக்கி சின்னா பின்னம் ஆகிறார்கள் என்பது ஒரு வரி கதை …!
காட்டுப்பகுதியில் வாழும் ஆதி குடிகள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குடும்பத்தினர். தினேஷின் தம்பி கலையரசன். காட்டில் உள்ள காட்டிலாகத் துறையில் உதவியாளராக வேலை செய்கிறார். தற்காலிக வேலையில் இருக்கும் அவருக்கும், இலாகா அதிகாரிக்கும் மோதல் நிகழ்கிறது. இதில் கலையரசன் வேலை பறிபோகிறது.பழங்குடி இனத்தைச் சேர்ந்த கலையரசனை அவரது அண்ணனான தினேஷ் கஷ்டப்பட்டு துணை ராணுவ படையில் வேலைக்காக தயார் செய்து அனுப்புகிறார்.
துணை ராணுவ படையில் சேர்வதற்காக யாரோ ஒருவர் கொடுக்கும் ஐடியா படி நக்சலைட் என்று சொல்லி போலீஸில் சரணடைகிறார். அப்படி சரணடைந்தால் அவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நடப்பதோ வேறு. இதுபோல் அப்பாவிகளை நக்சலைட் என்ற பெயரில் சரணடை செய்து அவர்களை ஒரு கூட்டம் கொல்கிறது. வேலைக்காகச் சென்ற தம்பிக்கு வெற்றி கிட்டியதா என்பதை பதைபதைக்கச் சொல்கிறது மீதிக்கதை பழங்குடி மக்களில் கம்யூனிசம் பேசும் ஒருவராக அசத்தியுள்ளார் நாயகன் தினேஷ். அதே இனத்தின் துடிப்பான இளைஞனாக வாழ்ந்துள்ளார் கலையரசன். வின்சு சாம் ரித்விகா இருவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர்.
குண்டு என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்பு இயக்கிய அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி இருக்கிறார்…மந்திரி மற்றும் அரசியல் துறை அதிகாரிகளால் அப்பாவி இளைஞர்கள் எப்படி நக்சலைட்களாக மாற்றப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்ற ஒரு உண்மையை துணிச்சலாக வெளிப்படுத்தி இருக்கிறார்
அப்பாவியான கலையரசன் படிப்படியாக எப்படி நக்சலைட் என்ற தீவிரவாதியாக மாற்றப்படுகிறார், தன் உயிர் போகப் போகிறது என்பதை அறிந்து அவர் எடுக்கும் எதிர் நடவடிக்கைகள் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.கலையரசனுக்கும், வின்சுவுக்கும் இடையே மலரும் காதல் காட்சிகள் கொஞ்சமே வந்தாலும் அதில் உயிர்ப்பு உண்டு.எப்படியாவது இந்த வேலையில் நாம் பர்மெனென்ட்ஆகி, அண்ணனின் கௌரவத்தை காப்பாற்றி விட மாட்டோமா ? என்று ஏக்கம் ! டான்ஸிங் ரோஸ் டார்ச்சர் ,மற்றும் காதலியின் பிரிவு, என கலந்த கட்டி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கலையரசன். அதிகாரத்துக்கு முன்னால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் கலையரசன் ,பால சரவணன் ,மனதில் பதிகிறார்கள். இழிவாக திட்டிய டான்ஸிங் ரோஸ், அடித்ததால், கடைசி வரை அதிகாரி ஆக முடியாமல் தவிக்கும் கதாபாத்திரம். அந்த வேதனையையும், ‘உஸ்தாத் மீறி இங்க எதுவுமே நடக்காது’’ என்கிற இயலாமையையும் தனது தேர்ந்த நடிப்பின் வழியே கடத்துகிறார்.
அட்டகத்தி தினேஷ் காட்டிலாகா அதிகாரிகள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதும் ஒரு கட்டத்தில் அவரே துப்பாக்கி எடுத்து வஞ்சகர்களை கொல்வதும் கதையில் மற்றொரு பரிமாணம் …! அடக்குமுறைகளை கண்டு வெகுண்டு எழுந்து பழங்குடி மக்களுக்கு தீங்கு வரும் போதெல்லாம் வனச்சரக அதிகாரி அருள்தாஸ் உடன் மோதும் காட்சி கள். வேட்டை முத்துக்குமாரிடம், மோதும் போதும் அட்டைக்கத்தி தினேஷ் சபாஷ் வாங்குகிறார். வெறித்தனமான பார்வை, ஆக்ரோஷமான சண்டை, என அசத்தி இருக்கிறார்.
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், கொரில்லா பயிற்சி கொடுக்கிறேன். என்று ராணுவ பயிற்சி நடத்தும் அதிகாரம் நடத்தும் ஜார்கண்ட் மாநிலத்தில் அப்பாவி இளைஞர்களை ராணுவ பயிற்சி கொடுக்கிறேன் என்று சித்தரவதை செய்து, மூன்று மாதம் கசக்கி பிழிந்து பிறகு அவர்களை அழைத்துச் சென்று இவர்களை சுட்டு விட்டு நக்சலைட் கொண்று விட்டார்கள், என்று கதை கட்டுவது தமிழ் சினிமா காணாத புதிய கதைக்களம். அந்த ஜார்கண்ட் மாநிலத்தின் அடர்ந்த காடுகள் ,அழகையும் தருகிறது அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது எப்படி தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை சொல்கிறது இந்த படம் அடக்குமுறைகள் எவ்வளவு காலத்துக்கு ஒரு மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியும் அவன் வெகுண்டு இருந்து அநீதியை அழிக்கிறான் என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் .
முதல் பாதிவரை வேகமாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில், றெக்கை கட்டி பறக்கிறது. பரேட், பரேட் என, மைதானத்தின் புழுதி நம் முகத்திலும் தெறிக் கிறது. காதல், பார்த்துப் பழகிய பிளாஷ்பேக் ஆக இருந்தாலும் ராணுவ பயிற்சி, பள்ளியில் நடக்கும் அதிகார அத்துமீறல்கள், அதிகாரிகளின் ஈகோ மோதலைத் துணிந்து தோலுரித்துக் காட்டிய விதத்தில் ஈர்க்கிறது.தண்டகாரண்யம்..!
அனைவரும் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் அரசுக்கு இது ஒரு பாடம் ..!
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.9/5