தணல் திரைவிமர்சனம் RATING 3.4/5
படம்: தணல்
ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, லாவண்யா, திரிபாதி, அஷ்வின், லக்ஷ்மி பிரியன், போஸ்வெங்கட், அழகம் பெருமாள், ஷா ரா, பரணி, செல்வா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தணல்”.

கதை : OPEN பண்ணா …!
ஒரு அடுக்குமாடி வீட்டில் தங்கியிருக்கும் சில இளைஞர்களை போலீசார் சுட்டு கொல்கின்றார்கள். சிலநாட்கள் கழித்து அதர்வா காவலர் பணியில் சேர காவல் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு 5 பேர்கள் காவல் பணியில் சேர காத்திருக்கிறார்கள். இவர்களுடன் அதர்வாவையும் சேர்த்து 6 பேரையும் இரவு ரோந்து பணிக்கு ஆய்வாளர் அனுப்புகிறார்.
ஒரு இடத்தில் பாதாளசாக்கடை வழியாக ஒருவன் வெளியே வருகிறான். அவனை பிடிக்க 6 பேரும் விரட்டுகிறார்கள்.அவன் தப்பித்து விடுகிறான். அதனால் அவனை கண்டுபிடிக்க அவன் வெளியே வந்த பாதாளசாக்கடை வழியாக அதர்வா உள்பட அனைவரும் உள்ளே இறங்குகிறார்கள். அந்தவழி ஒரு நெருக்கமான குடிசைப்பகுதிக்கு செல்கிறது. அனைத்து காவலர்களும் அந்த குடிசைப்பகுதிக்கு வந்து தப்பி ஓடியவனை தேடுகிறார்கள். அப்போது அஷ்வின் ஒரு காவலரை வெட்டி கொலை செய்கிறார். மற்றவர்களையும் கொலை செய்ய விரட்டுகிறார். அவர்கள் இந்த ஆறு பேரில் இருவரைக் கொல்ல, மீதி நால்வரும் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஓடுகிறார்கள் ஓடிய காவலர்கள் தப்பித்தார்களா? இல்லையா? அந்த சதிகார கும்பலுக்கும் தங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வர, இவர்கள் உயிர் தப்பினார்களா, அங்கு நடக்கவிருந்த சதி முறியடிக்கப் பட்டதா ..? காவலர்களை ஏன் அஷ்வின் கொலை செய்ய துடிக்கிறார்?. என்பதுதான் கதை.

அதர்வா, வலுவான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.ஹீரோவுக்குரிய பில்டப்புகள் ஏதுமின்றி கதை நாயகனாக மட்டுமே வரும் அதர்வா, அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். கண்களில் உயிர் பயம் தெரிய, அதே நேரத்தில் தன் நண்பர்களை காப்பாற்றி ஆக வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியையும் வெளிக்காட்டுவது சிறப்பு. ஆக்ஷன், காதல், கோபம் உள்ளிட்ட உணர்வுகளை நம்பவைக்கும்படியாக வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து இத்தகைய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் அவருக்கு சாதகமாக இருக்கும்.
வில்லன் அஸ்வின் பாத்திரமும், அவர் இரண்டாவது ஹீரோ என்று சொல்லத் தக்க அளவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் மீது கோபம் வந்தாலும் அந்த ஃப்ளாஷ் பேக் தெரியும் போது அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அஸ்வின் அவர் கதாநாயகனுக்கு சற்றும் குறையாத நடிப்பை வழங்கியுள்ளார். நாயகியாக லாவண்யாவுக்கு வழக்கமான வரையறுக்கப்பட்ட பங்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பரணி, ஷா உள்ளிட்ட கான்ஸ்டபிள் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் முழு உழைப்புடன் காட்சிகளை பதிவு செய்துள்ளார். நகர்ப்புற காட்சிகளிலும் குடிசைப் பகுதியின் சூழலிலும் அவர் வெளிப்படுத்திய வேலைப்பாடுகள் படத்துக்கு உயிரூட்டுகின்றன. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, படத்தின் பதட்டத்தையும் பரபரப்பையும் அதிகரித்து முக்கிய பலமாக அமைந்துள்ளது.
போலி என்கவுண்டர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதியுள்ள இயக்குநர் ரவீந்திர மாதவா, ஆனால் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் தனது கிராமத்தில் விவசாயிகளுக்கு நேரும் கொடுமைகளை எதிர்த்து அங்கேயே குரல் கொடுக்காமல் இருப்பதும், யாரோ சில போலீஸ்காரர்கள் தவறாக நடந்து கொண்டதற்காக ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையும் தண்டிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..!.மாநகரம் போன்ற ஒரு படத்தைத் தர வேண்டும் என்ற நினைப்பில் இந்தப் படத்தின் திரைக் கதையை எழுதி இருப்பார் போலிருக்கிறது ரவீந்திர மாதவா, நெருப்பு அணையாமல் இருக்கும் வெப்பத்தை தணல் என்பார்கள் ..இந்த படத்தில் tunnel முக்கிய திருப்பமாக வருவது tunnel க்குள் சமூகம் பேசும் தணல் பட குழுவினருக்கு பாராட்டுக்கள் ..
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.4/5

