குமார சம்பவம் திரைவிமர்சனம் RATING 3.2/5

படம்: குமார சம்பவம்
நடிப்பு: குமரன் தியாகராஜன், பாயல், ஜி எம் குமார், குமரவேல, பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா சிவா அரவிந்த்
தயாரிப்பு: கே ஜி கணேஷ் இசை: அச்சு ராஜாமணி ஒளிப்பதிவு: ஜெகதீஷ் இயக்கம்: பாலாஜி வேணுகோபால் பிஆர்ஓ: நிகில் முருகன்
கதை open பண்ணா …!
பெரிய வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சினிமாவில் இயக்குனராகி ஜெயிக்க வேண்டும் என்பது குமரன் (குமரன் தியாகராஜன்) எண்ணம் அதற்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் குமரனது வீட்டில் குடியிருந்த சமூக சேவகர் வரதன் (குமரவேல்) ஒரு போராளி …அமர்நாத், அக்பர் பாஷா , ஆண்டனி ஆசீர்வாதம் என இந்த மூன்று பேரையும் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் வரதன் ..அவர் திடீரென ஒரு நாள் இறந்து விடுகிறார் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் . இந்த விவகாரம் குமரன் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. வரதனை கொன்றது யார் என்று போலீஸ் விசாரிக்கிறது. இந்த விசாரணையில் குமரன் உள்ளிட்ட பல நபர்கள் விசாரணைக்கு உள்ளாகிறார்கள். வரதனை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க குமரனே தனிப்பட்ட முறையில் துப்பறியும் வேலையில் ஈடுபடுகிறார்.குமரன் தன்னுடைய பாணியில் நடந்தது என்ன? என்று சொல்வது போல இடைவேளை வரை கதை நகர்கிறது.
பல முடிச்சுகளுக்கு இடைவேளைக்கு பிறகு ஒவ்வொன்றாக இயக்குனர் அவிழ்க்கிறார் திரைப்படத்தில் மிக மிக சுவராஸ்யமான பகுதி நிறைய இருக்கிறது .இடைவேளைக்குப் பிறகு காமெடியில் கலை காட்டுகிறது. வினோத் சாகர் ஒவ்வொரு காட்சியும் அதகளம் செய் கிறார்.அந்த அளவுக்கு காமெடி கை கொடுத்திருக்கிறது. யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
TV’ தொடர் மூலம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் முதல் படம்இது, குமரன் துணை இயக்குநராக கதை சொல்லும் பாணியும், காதலிக்காக பாண்டிச்சேரி செல்லும் போது நாயகியின் பாட்டி அவருடைய செயலுக்கு போஸ் கொடுப்பதும் ரசிக்க வைக்கிறது…தாத்தாவிடம் கோபம், காதலியிடம் போராளி கள் பிடிக்காது என்று சொல்லும் எதார்த்தம் , எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்ற தீராத தாகம் ,என பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் குமரன் நல்ல அறிமுகம் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார்.
பாயல் ராதாகிருஷ்ணன் அழகாக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பாடல் காட்சியில் கூட ஆட்டம் போடாமல் கதைக்கு தேவையாக வந்து போகிறார்.குமரவேல் வரதன் என்ற கதாபாத்திரத்தில் மனுஷன் வாழ்ந்திருக்கிறார். குமரன் குடும்பத்தில் ஒருவராக அவரது வீட்டில் தங்கி இருந்து கதையின் மையப்பகுதியாக இவர் கதாபாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது…பால சரவணன் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கராக வந்து குமரன் நண்பராக ,வரதன் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிப்பதற்காக நாயகனுடன் படம் முழுக்க வந்து கலகலப்புக்கு கை கொடுக்கிறார். வினோத் சாகர் , நாயகனுக்கு உதவி செய்ய சிபிஐ ஆபீஸராக, இவர் வரும் காட்சிகளில் செம கலகலப்பு. மூன்று வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு இவர் முழிக்கும் காட்சியில் திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது…!
மொத்தத்தில் இந்த குமார சம்பவம் காதல், காமெடி, சஸ்பென்ஸ் என கலந்து தரமான ஒரு கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் வகையில் வந்திருக்கிறது…குமரன் பால சரவணன் வினோத் சாகர் இவர்கள் மூவருக்கும் குமார சம்பவம் படம் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.. மர்மக் கொலை என்றதும் ரொம்பவும் சீரியஸான கதையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம்….ஒரு துப்பறியும் கதையை காமெடி கலந்து சுவாரசியமாக சொன்னதில் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.2/5