வில்லன் பற்ற வைத்த bomb …BOMB பட ஹீரோ அர்ஜுன்தாஸ் என்கிற மணி

BOMB படத்தின் ஹீரோ அர்ஜுன்தாஸ் ..இவர் ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் கொடுத்த வெற்றி படங்களில் வில்லனாக வந்தவர் ..உதாரணமாக கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற படங்களை சொல்லலாம் ..அந்தகாரம் படத்தில் யாரும் லேசில் ஏற்காத lead ரோல் ஏற்று அருமையாக நடித்திருந்தார் ..இந்த பாம் படத்தில் இயக்குனரின் நாயகனாக கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்..!
இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்றதும் அவர் ஏதோ ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருப்பார் என்ற எண்ணத்துடன் தியேட்டருக்கு சென்றால் அதில் அர்ஜுன் தாசின் கதாபாத்திரம் இருப்பதிலேயே பயந்த சுபாவம் கொண்ட பணிவான கதாபாத்திரம். இன்னும் சொல்லப்போனால்தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருக்கிறார். இதுவரை அர்ஜுன் தாஸிடம் காணாத நடிப்பை இப்படத்தில் பார்த்தபோது உண்மையிலேயே வியக்க வைத்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் பேசும் வசனங்கள் அத்தனையிலும் பணிவு, , நட்பு ஷிவாத்மிகாவுடன் மெல்லிய காதலும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது .அர்ஜுன்தாஸ் எதிராளியை அடித்து துவைக்கும் ஹீரோயிசம் காட்டாமல் ஊர் மக்களிடம் அடி வாங்கி கொண்டு அவர் அமைதியாக இருக்கும் போது பார்க்கும் ரசிகர்கள் திருப்பி அடிக்க மாட்டாரா என்கிற ஏக்கத்தை பதிவு செய்து விடுகிறார்…!
அதேபோல நண்பன் காளிவெங்கட் இறந்து விட்டான் என்பதை அர்ஜுன்தாஸ் மனம் ஏற்க மறுக்கிறது அந்த நடிப்பை இறுதி வரை அழகாக காட்டி இருப்பார்…!
நண்பன் கதிரை தோழில் சுமக்கும்காட்சிகளில் ஆத்மார்த்தமான அன்பை கொட்டி இருப்பார் ஆனால் அதேநேரம் உனக்கு புரியலையா என்று அதுவும் நண்பன் சாமியாக வந்து சொல்லும் போதும் ..! “உன் குரலுக்கு நீ ஒரு குரல் கொடுத்து ஒரு அடி முன்னே வைத்தால் இந்த ஊரே உன்னை பார்த்து பயப்படும் என்று அர்ஜுன் தாசை பார்த்து காளி வெங்கட் சொல்லும் போது தான் அவருக்குள் அதிரடி transition கையில் வளையல் அணிந்து முகத்தில் குங்குமம் அள்ளி பூசி சாமியாக மாறி நிற்கும் அந்த தருணம் ..தனது உரத்த குரலில் குறி சொல்லும் போது .”அர்ஜுன்தாஸ்” ராக்ஸ்..!
சமீபத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் BOMB படம் பற்றி அளித்த பேட்டியில் இருந்து …!
BOMB படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். பயந்த சுபாவம் உள்ள தாழ்த்தப்பட்ட இளைஞனாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறதா என்று கேட்கிறார்கள் அதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த படத்தில் டைரக்டர் விஷால் வெங்கட் தவிர எல்லோரும் என்னை அடித்திருக்கிறார்கள், நான் அடி வாங்கி இருக்கிறேன். பதிலுக்கு அடிக்கிறேனா என்பது சஸ்பென்ஸ்.
மணி என்ற பாம் பட கதாபாத்திரம் எனக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட இமேஜ் உருவாக்கி அளித்திருக்கிறது. நகரத்து இளைஞனாக, வில்லனாக மட்டுமே நடிக்க முடியும் என்ற ஒரு தோற்றம் பாம் பட கதாபாத்திரம் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் அர்ஜுன் தாசால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கை இயக்குனர் விஷால் வெங்கட்டுக்கும் வந்து என்னை அழைத்து பாம் படத்தில் நடிக்க வைத்த நிலையில் இனி மற்ற இயக்குனர்களுக்கும் அந்த நம்பிக்கை நிச்சயம் வரும். இந்த படத்துக்கு பிறகு எனக்கு நிறைய கிராமத்து பின்னணியில் அமைந்த கதாபாத்திரங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்…!இப்போதைக்கு நான் வில்லன் வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன். குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நான் நடித்தேன் என்றால் அது அஜீத் சாருக்காகத் தான். இப்படி சில சூழல்கள் விதிவிலக்கு…!இவ்வாறு அர்ஜுன் தாஸ் அந்த பேட்டியில் கூறினார்..!
ஆம் அர்ஜுன்தாஸ் அவருக்கு இருந்த நம்பிக்கையை பாம் படம் மூலம் நிரூபித்து விட்டார்..இனி எந்த கதாபாத்திரத்தையும் அர்ஜுன் தாசால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை மற்ற இயக்குனர்களுக்கும் அந்த நம்பிக்கை நிச்சயம் வரும்..BOMB இப்படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். அர்ஜுன்தாஸ் எனும் கலைஞனுக்கு அடுத்தடுத்து வரும் படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயம் இல்லை ..!
Article by: RAM
TAMILPRIMENEWS.COM