BOMB (பாம்)திரை விமர்சனம் ரேட்டிங் 3.9/5

BOMB (பாம்)திரை விமர்சனம்  ரேட்டிங் 3.9/5

BOMB (பாம்)திரை விமர்சனம்

நடிப்பு: அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி

தயாரிப்பு: சுதா சுகுமார்   இசை: டி இமான்   ஒளிப்பதிவு: பிஎம்.ராஜ்குமார்   கதை திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்

வசனம்: மகிழ்நன் பிஎம்    இயக்கம்: விஷால் வெங்கட்    பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா

கதை open பண்ணா …!

காகாம்மாபட்டி என்னும் கிராமம் மலைப்பகுதியை ஒட்டி உள்ளது ..அந்த ஊரில் மேல் சாதி மற்றும் கீழ் சாதி மக்கள் வசித்து வருகின்றனர் ..ஒரு நாளில் நடந்த இயற்கை சீற்றத்தில் ஒரு பெரிய கல் மற்றும் சிறிய கல் வந்து விழுகிறதுஊருக்குள் பெரிய கல்லை சாமியாக வணங்க மேல் சாதி சொல்ல சிறிய கல்லை வணங்க கீழ் சாதி சொல்ல ஊருக்குள் கலவரம் .. போலீசார் கலெக்டர் என அரசு சார்பாக வந்து சமாதானம் செய்தும் இந்த மோதலை தீர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த ஊர் காளப்பட்டி, கம்மா பட்டி என இரண்டாகப் பிரிகிறது..!

ஒரே ஊராக இருந்தபோது சாமிக்கு பூஜை முடித்து பெண்கள் 108 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்த பின் மயில் கூவ மலை உச்சியில் ஜோதி தரிசனம் தெரிந்து வந்தது ,,இந்த நிலையில் ஊர் பிரிந்த பிறகு ஜோதி தரிசனம் கிடைப்பதில்லை ..பிரிந்த ஊரை ஒன்று சேர்க்க வேண்டும் என்று அந்த ஊரில் வாழும் இரண்டு நண்பர்கள் கதிர் (காளி வெங்கட்), மணி  (அர்ஜுன் தாஸ்) ஆசைப்படுகின்றனர்..கதிர் ஊர் நன்மைக்காக அந்த மாவட்டத்துக்கு புதிதாக வந்துள்ள சாமி நம்பிக்கையில்லாத நேர்மையான கலெக்டர் அபிராமி யை சந்தித்து மனு கொடுத்து ஊரில் ஒரு பாலம் கட்டி தர வேண்டுகோள் வைக்கிறார்.. அதே நேரம் ஊர் மக்கள் இவர் பேச்சை கேட்பதில்லை என்கிற ஆதங்கத்தில் கதிர் தினமும் குடித்து குடித்து மட்டையாகி விடுவார்..இவரை நண்பர் மணி தன தோழில் தூக்கி செண்டு கதிர் வீட்டில் கொண்டு விடுவது வாடிக்கை ..கதிரின் தங்கைக்கு அர்ஜுன்தாஸ் மீது அளவு கடந்த காதல் ..!

ஒரு நாள் கதிர் குடித்து விட்டு மட்டையாக வழக்கம் போல மணி வீட்டில் கொண்டு சேர்கிறார்அவரை கதிரின் தங்கை எழுப்ப முய கதிர் இறந்து விட.., கதிர் மறைவை கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரள்கிறார்கள். அவருக்கு இறுதி சடங்கு செய்ய நான்கு பேர் அவரை தூக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் தூக்க முடியவில்லை. இதற்கிடையில் அவருக்கு உடலில் இருந்து வாயு (குசு) வெளியேறிய வண்ணம் இருக்கிறது..ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். கதிர் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறான் என்று மணி கூறினாலும் ஊர் மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.ஆனால் ஊர் பூசாரி, ‘சாமி வந்திருக்கு என்று கூறியதும் இறந்து கிடக்கும் கதிரை சாமியாக்கி விடுகிறார். அதன் பிறகு நடக்கும் (கு)சு வாரஸ்ய சம்பவங்கள்தான் கதை,…,கடவுள் நம்பிக்கை இரு கிராம மக்களை பிரித்ததா ?இரு ஜாதி மக்களும்  ஓன்று சேர்ந்து  ஜோதியை கண்டார்களா ..?  ..இறுதியில் கதிர் நிலை என்ன ..? மணி அதன் பின் நடக்கும் சம்பவங்களை எப்படி கையாண்டான்..? என்பதே  மீதி கதை …,

படத்தின் ஹீரோ அர்ஜுன்தாஸ் ..இவர் ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் கொடுத்த வெற்றி படங்களில் வில்லனாக வந்தவர் ..உதாரணமாக கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற படங்களை சொல்லலாம் ..அந்தகாரம் படத்தில் யாரும் லேசில் ஏற்காத lead ரோல் ஏற்று அருமையாக நடித்திருந்தார் ..இந்த பாம் படத்தில் இயக்குனரின் நாயகனாக  கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்..!அர்ஜுன் தாஸ்  பேசும் வசனங்கள் அத்தனையிலும்  பணிவு, பாசம், நட்பும், ஷிவாத்மிகாவுடன் காதலும், வெளிப்பட்டிருக்கிறது .அர்ஜுன்தாஸ் எதிராளியை அடித்து துவைக்கும் ஹீரோயிசம் காட்டாமல் ஊர் மக்களிடம் அடி வாங்கி கொண்டு அவர் அமைதியாக இருக்கும் போது பார்க்கும் ரசிகர்கள் திருப்பி அடிக்க மாட்டாரா என்கிற ஏக்கத்தை பதிவு செய்து விடுகிறார்…!

ஆனால் அதேநேரம் உனக்கு புரியலையா என்று அதுவும் நண்பன் சாமியாக வந்து சொல்லும் போதும் ..!உன் குரலுக்கு நீ ஒரு குரல் கொடுத்து ஒரு அடி முன்னே வைத்தால் இந்த ஊரே உன்னை பார்த்து பயப்படும்  என்று அர்ஜுன் தாசை பார்த்து  காளி வெங்கட் சொல்லும் போது  … தான் ..அதிரடி transition கையில் வளையல் அணிந்து முகத்தில் குங்குமம் அள்ளி பூசி சாமியாக மாறி நிற்கும் அந்த தருணம் ..தனது உரத்த குரலில் குறி சொல்லும் போது .”அர்ஜுன்தாஸ்” ராக்ஸ்..!

காளி வெங்கட் அறியாமையில் இருக்கும் இரு சாதி மக்களை ஓன்று சேர்க்க போராடுவதாகட்டும் பிணமான பின் தான் அவர் உக்கார்ந்த இடத்திலேயே முழு படத்தின் திரைக்கதை நகர்வது அதற்க்கு காளி வெங்கட் ஈடு கொடுத்து நடித்தது அருமை …!ஊர் நடுவே பிணமாக அமர்த்தபடி கிடந்து  அவர்விடும் குசு சத்தத்தை கேட்டு ஊர் மக்கள் சாமி சாமி என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதெல்லாம் இன்னும் கூட அறியாமையில் மக்கள் உள்ளார்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ஊர் தலைவராக சிங்கம்புலி நடித்திருக்கிறார். மேலும் நாசர், அபிராமி, பால சரவணன், ஷிவாத்மிகா,பூவையார் ,tsk ,பாலசரவணன் ஒவ்வொருவருக்கும் ஒரு மெல்லிய அனால் அழுத்தமான சமூக நீதி வெளிப்படும் விதத்தில் திரை கதை செல்கிறது குறிப்பாக பூவையார் காலில் சூடு வைப்பதாகட்டும் அதை தொடர்ந்து கிளைமாக்ஸ் வரும் போது நடக்கும் சம்பவம் AWESOME..!

பேச தயங்கும்குசு” வை வைத்து இந்த படத்தை குசு குசு வென இல்லாமல் சத்தமாக பேச வைத்து விட்டார் இயக்குனர்  விஷால் வெங்கட்.& TEAM

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *