காந்தி கண்ணாடி திரைவிமர்சனம் RATING 3.4/5
காந்தி கண்ணாடி
நடிப்பு: பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா
தயாரிப்பு: ஜெய் கிரண் இசை: விவேக் மெர்வின் ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா இயக்கம்: ஷெரிப் பி ஆர் ஓ: ரேகா

கதை open பண்ணா …!
காந்தி, கண்ணம்மா மூத்த ஜோடி அறுபதாவது வயது திருமண விழா ஒன்றுக்கு செல்கிறார்கள். அந்த திருமணத்தை பார்த்த கண்ணம்மாவுக்கு நமக்கும் ஒரு பிள்ளை இருந்தால் இதுபோல் 60 வயது திருமணம் செய்து வைத்திருப்பான் என்று கூற தன் உயிருக்கும் மேலாக மதிக்கும் கண்ணம்மாவின் ஆசையை நிறைவேற்ற எண்ணுகிறார் காந்தி.பாலா நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யும் நிறுவனம் ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார். அவரிடம் தங்களுக்கு 60ஆம் திருமணம் நடத்திதரும் பொறுப்பை ஒப்படைக்கிறார் காவலாளியான பாலாஜி சக்திவேல். மனைவி அர்ச்சனாவின் இளம்வயது ஆசைகளை இந்த 60 ஆம் திருமணத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற தனது ஆசையை பாலாவிடம் சொல்கிறார். அதற்கு ரூபாய் 50 லட்சம் செலவாகும் என்கிறார் பாலா.
ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் பாலாஜி சக்திவேலுவிடம் அவ்வளவு பணம் கையிறுப்பு இல்லாததால், தனது சொந்த ஊரிலுள்ள நிலத்தை ரூபாய் 80 லட்சத்துக்கு விற்று பணத்துடன் சென்னைக்கு வருகிறார். 60 ஆம் திருமணத்துக்கான ஏற்பாடுகளை பாலா கவனிக்க தொடங்கும்போது, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிக்கிறது. பாலாஜி சக்திவேலுவிடமிருக்கும் 80 லட்சமும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான். அனைத்தும் செல்லாமல் போய்விடுகிறது. திருமணத்துக்கு தேவையான பணத்தை வங்கியில் மாற்றமுடியவில்லை …! படத்தின் நாயகன் பாலா தான் என்றாலும், கதை நாயகர்களாக காந்தி- கண்ணம்மாவாக படம் முழுக்க நிரம்பி நிற்பவர்கள் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா தம்பதிகள் தான். அள்ள அள்ள குறையாத அமுதசுரபி அவர்கள் காதல். இளமையில் பூத்த அந்த காதல், முதுமை நிலையிலும் குறையாமல், இன்னும் சொல்லப்போனால் கூடியே தெரிகிறது.
பணத்தை மாற்றி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் நினைக்க, அதே சமயம் பணம் மாற்றுவதையும் லாப நோக்கத்துடன் பார்க்கும் நாயகன் பாலா, பாலாஜி சக்திவேல் ஆசைப்பட்டது போல், 60 வது கல்யாணத்தை நடத்தினாரா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘காந்தி கண்ணாடி’.
நாயகனாக நடித்திருக்கும் பாலாவுக்கு நாயகனாக இது தான் முதல் படம். தொலைக்காட்சி பாலாவுக்கும், வெள்ளித்திரை பாலாவுக்கும் உருவ ரீதியாக மாற்றங்கள் தெரிந்தாலும், நடிப்பில் அவர் இன்னும் முன்னேற வேண்டும். நடனம் நன்றாக வருகிறது. அவ்வபோது தனது டைமிங் காமெடி வசனங்கள் மூலம் சிரிக்கவும்
வைக்கிறார், கதாபாத்திரத்திற்குத்தகுந்தாாபோல் அமைதியாக நடித்து உச்சக்கட்ட காட்சியில் அனைவரின் மனதிலும் நிறைந்துவிட்டார் .படத்தின் உண்மையான நாயகன் காந்தியாக வரும் பாலாஜி சக்திவேல் தான். தன் காதல் மனைவி மீது அவர் காட்டும் அளவுக்கு அதிகமான அன்பு தான் படத்தின் ஒட்டுமொத்த ஜீவன். அந்தக் கண்ணம்மா கேரக்டரில் நடிப்பில் பிழிந்திருக்கிறார் அர்ச்சனா…!.நாயகியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி, காதலன் பாலாவின் சுய நலத்தை சுட்டிக்காட்டி ஆவேசமாகும் இடத்தில் நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை உறுதி செய்கிறார்….பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேலும் அர்ச்சனாவும் தங்களது அனுபவ முதிர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.4/5

