மதராஸி திரைவிமர்சனம் RATING 4.1/5
மதராஸி
நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் கல்லர்கால், விக்ராந்த்
தயாரிப்பு: ஸ்ரீ லட்சுமி மூவிஸ் இசை: அனிருத் ஒளிப்பதிவு: சுதீப் எலமான் இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ் பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா
கதை open பண்ணா …!
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்து அமைதியை குலைக்க ஒரு பெரிய கூட்டம் திட்டமிடுகிறது. இதற்காக 6 ட்ரக்குகளில் கைத்துப்பாக்கிகளை கடத்தி வருகிறது. இந்த தகவலை அறிந்த என் ஐ ஏ அதிகாரிகள் துப்பாக்கிகள் அடங்கிய டேங்கரை தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க அதை வழிமறித்து தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனாலும் எதிர் தாக்குதல் நடத்தும் ரவுடிகள் அந்த ட்ரக்குகளை நகருக்குள் கொண்டுவந்து பதுக்கி விடுகிறார்கள்.
இதற்கிடையில் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபன் சிவகார்த்திகேயன் காதல் தோல்வி காரணமாக சாவதற்கு முடிவு செய்கிறான்.சிறிய காயங்களுடன் எலும்பு முறிவுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்க படும் sk க்கு என் ஐ ஏ அதிகாரி தொடர்பு ஏற்படுகிறது. ட்ரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி ஆயுதங்கள் அடங்கிய ஒரு குடோனை தற்கொலைப்படை அனுப்பி தகர்க்க என் ஐ ஏ அதிகாரி திட்டமிடுகிறார். ஏற்கனவே பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழந்த நிலையில் மற்றொரு வீரரை இழக்க விரும்பாத என் ஐ ஏ அதிகாரி …காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து, பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க பிஜு மேனன் முடிவு செய்கிறார். SK வும் இதற்கு ஒப்புக் கொள்கிறான். இந்த நிலையில் தன் காதலி காத்திருக்கும் தகவல் தெரிய வருகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. அவர் நினைத்தது போல் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதா ? , அவர் மனநிலை பாதிக்கப்பட்டது ஏன் ? அவரது காதலி அவரை பிரிந்து சென்றது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடையை AR முருகதாஸ் SK கூட்டணி விறுவிறுப்பாக திரையில் காட்சி படுத்தி உள்ளார்கள்..! ..அனைத்து தரப்பு மக்களையும் கவர்வான் இந்த மதராஸி ..!

SK ரகு எனும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ..முன் பாதியில் தற்கொலை முயற்சி ..காதலியை அவர் சந்திக்கும் தருணங்கள் அங்கெல்லாம் அவர் பாணியில் சற்று கலகலப்பாக இருக்கும் SK அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு சூழலில் இல்லாத அம்மாவிற்கு போன் பேசுவது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்து விடுகிறார் ,,,அவர்க்கு இருக்கும் மன பிரச்சனை காரணமாக தான் விரும்பும் காதலிக்கு ஒரு பிரச்சனை என்றால் தன்னை மறந்து எதிரிகளை பந்தாடி விடுகிறார்…அதிலும் CLIMAX சண்டை காட்சிகளில் SK ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார் ..!


மாலதி பாத்திரத்தில் வரும் ருக்மிணி வசந்த் நல்ல முக வசீகரம், பொருத்தமான உடல் மொழி ,தேவையான நடிப்பு என்று கவர்கிறார்.ஹேப்பி ஸ்ட்ரீட்டில் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு திறந்தவெளிப் பாடகியாக வருகிற போதும்,பல் மருத்துவ பயிற்சி மருத்துவராக மருத்துவமனையில் செயல்படும் போதும்,சிவகார்த்திகேயனின் குறையை ஏற்றுக்கொண்டு பரிவோடு அவர் மீது காதலைப் பொழியும்போதும் பிறகு சிவகார்த்திகேயனின் அபாயம் கண்டு பதறும்போதும் நடிப்பில் குறை வைக்கவில்லை.தமிழில் பெரிய ரவுண்ட் வர வாய்ப்புள்ளது …ருக்மணி வசந்த் இளைஞர்களை வசீகரித்து விட்டார் .
அரக்க குணம் கொண்டு இரக்கமே இல்லாத பாத்திரத்தில் ஆயுதக் கடத்தல் செய்யும் முக்கிய புள்ளியாக வரும் வித்யுத் ஜாம்வலின் நடிப்பு மிரட்டல்.பிஜு மேனனும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.பொறுப்பும் பதற்றமும் கலந்த அந்த பயங்கரவாத தடுப்பு பணி செய்யும் அதிகாரி பாத்திரத்தில் நன்றாகவே வெளிப்படுகிறார்.ஷபீர் கல்லாரக் கல் ஆயுதக் கடத்தல் கும்பலை இயக்குபவராக வருகிறார், வில்லத்தன நடிப்பில் மிரட்டுகிறார்.பிஜுமேனனின் மகனாக விக்ராந்த் வந்து இறந்து பார்ப்பவர் மனதில் பதிந்து போகிறார்.
படத்தின் பிரம்மாண்டத்தை கண் முன் நிறுத்துவதுபடத்தி சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு…! ஒளிப்பதிவு.படம் தொடங்கும் போதே பிரமாண்டமான டோல்கேட் ..HIGHWAY சேசிங் சண்டை காட்சிகள் மிரட்டலாக உள்ளது…காதலியை சந்திக்கும் இடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக ..அதே போல NIA டார்க் ஹவுஸ் என காட்சிகள் போகும் திசைக்கு நம்மை அழைத்து செல்வது சுதீப்எலமான் AWESOME..! அனிருத் இசை காட்சிகளுக்கு மேலும் விறுவிறுப்பு கூட்டி இருக்கிறது..பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவுகிறது ..பாடல்கள் வந்து போகிறது SK அருமையான ஆட்டம் போட்டுள்ளார்..ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் அருமை …இன்னும் கொஞ்சம் கத்திரியை பயன் படுத்தி இருக்கலாம் ..கதையின் விறுவிறுப்பில் அவர் மயங்கி விட்டார் போலும்..!

ஏ ஆர் முருகதாஸ் .மது,போதை மருந்து கலாச்சாரத்தைப் போல் மெல்ல பரவி விஸ்வரூபம் எடுக்கும் அபாயமாக ஆயுதக்கடத்தல் என்பதும் மாறிவிடக்கூடும் என்பதைக் கூறி எச்சரித்து இருக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்து அமைதியை குலைக்க நினைக்கும் சக்திகள் உள்ளே நுழைந்தால் என்னே நடக்கும் என்பதை பள்ளி குழந்தை கையில் துப்பாக்கி காட்சிகளை காட்டி மிரட்டி உள்ளார்…மொத்தத்தில் இந்த மதராஸி ,,துப்பாக்கி மாஃபியாக்களின் முகத்திரையை கிழிக்க வந்துள்ளது..அரசுக்கு இந்த படம் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது…!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.1/5

