லோகா சேப்டர் 1 சந்திரா ரேட்டிங் 3.4/5
படம்: லோகா சேப்டர் 1 சந்திரா
நடிப்பு: கல்யாணி, நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண்குரியன் தயாரிப்பு: வேபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films)
இசை: ஜேக்கஸ் பிஜாய் ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி இயக்கம்: டோமினிக் அருண் பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை open பண்ணா …!
காட்டுப்பகுதிகளை ஆண்ட அரசன் தான் வணங்கும் கோயிலுக்குள் வரும் இரண்டு ஏழை சிறுமிகளால் கோபமடைந்து அப்பகுதியில் உள்ள கோயிலை எரிப்பதுடன் சிறுமியின் குடும்பத்தினரையும் கொல்கிறான்.அவரிடமிருந்து தப்பிச் செல்லும் சிறுமி சந்திரா (கல்யாணி) நீலி கடவுளின் சக்தி பெறுகிறாள். இதையடுத்து யாரையும் வெல்லும் சக்தி படைத்தவள் ஆவதுடன் யக்க்ஷை எனப்படும் ஜாம்பி போல் மாறுகிறாள்.
கதை நவீன காலத்துக்கு வருகிறது. ஆரம்பத்தில் சந்த்ரா, ஒரு தீ விபத்தில் இருந்து தப்பிக்கிறார். எதிரிகள் அவரை கொலை செய்ய முயற்சி செய்ய அதில் இருந்து தப்பித்து பெங்களூர் போகிறார்…அங்கு தான் கதை களம்… ஒரு ஓட்டலில் வேலை செய்கிறாள் சந்திரா பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா .. சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார்.
சந்திரா இந்நிலையில் ஆள் கடத்தி உறுப்புகள் கடத்தும் கூட்டத்துடன் சந்திராவுக்கு மோதல் ஏற்படுகிறது.சந்திராவை கடத்தும் பொழுது சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தென்படுவதையும் கவனிக்கிறார். சன்னி. சந்திராவுக்கு ஆபத்துவர, அவரைக் காக்கக் களமிறங்குகிறார் சன்னி…கடத்தல் கூட்டத்துக்கு துணையாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருடனும் சந்திராவுக்கு மோதல் ஏற்படுகிறது. சந்திராமட்டும் ஒரே ஆளாக அத்தனை பேரையும் தீர்த்து கட்டுகிறாள். இதையடுத்து அவளைப் பிடிக்க தனிப்படை வருகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு ஆக்சன் அதிரடியுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்… சந்திராவைச் சுற்றும் அமானுஷ்யங்கள் என்ன ?என்பதுதான் சூப்பர் ஹீரோயின் படத்தின் கதை. ..!
படம் முழுக்க வெறித்த பார்வை, சூப்பர் பவர் கொண்ட சந்திராவாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்..பறக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும், தனது அடையாளத்தை மறைக்கச் சாந்தமாக அனைத்தையும் கையாளும் இடத்திலும் சூப்பர் ஹீரோயினாக மிரட்டுகிறார் .திடீரென்று ஜாம்பியாக மாறி எதிரிகளை அவர் அடித்து துவம்சம் செய்வது, கோரைப் பற்களால் கடித்துக குதறுவது என ஆக்சன் அதிரடி காட்டியிருக்கிறார் கல்யாணி… இவரைச் சுற்றி ஒரு மர்மம் இருக்கிறது! அது என்ன என்பதை காட்டும் வரை சஸ்பென்ஸ்! விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது ! கல்யாணி பிரியதர்ஷன்.அவருக்கு தனி பாராட்டுக்கள் .

படம் முழுக்க நாயகன் பயந்த சுபாவம் கொண்டவராக, தனது டிரேட்மார்க் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்குக் கணக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் நஸ்லென்.சந்திராவை காதலிக்க தொடங்குவது பின் அவர் அமானுஷ்ய சக்தியை கண்டு பயந்து அலறுவது, கனவு கண்டு ஓடுவது, என ஆங்காங்கே அவர் நிகழ்த்தும் காமெடிகளும் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருக்கின்றன. சீரியஸ் காட்சிகளிலும் அவருடைய உடல் மொழி, ரசிக்க வைக்கிறது .
அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளை அத்தனை கோணங்களிலும் கச்சிதமாகப் படம்பிடித்து மிரட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி HATS OFF..!
படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஹாலிவுட் படம் பார்க்கிறோம் என்ற நினைவை ஏற்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்முதற்பாதி, ஆக்ஷன், இரண்டாம் பாதி கதை களம் என படத்தைப் செதுக்கி யிருக்கிறார் Editor சாமன் சாக்கோ..கிளைமாக்ஸ்சில் துல்கர் சல்மானின் பறக்கும் சண்டை காட்சி wow...முதல் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸ் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்குத் தனிக் கவனத்தைக் கொடுத்து உழைத்திருப்பது நல்லதொரு விஷுவல் அனுபவத்தையும் கொடுக்கிறது..வாழ்த்துக்கள் இயக்குனர் டோமினிக் அருண் மற்றும் பட குக்குழு அனைவருக்கும் பாராட்டுக்கள்.
லோகா சாப்டர் 1 சந்திரா நம்ம tamilprimenews.comரேட்டிங் 3.4/5

