குற்றம் புதிது திரைவிமர்சனம்
படம்!: குற்றம் புதிது
நடிப்பு: புதுமுகம் தருண் விஜய் , சேஷ்விதா கனிமொழி, மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார்
தயாரிப்பு: தருண் விஜய் இசை: கரண் பி. கிருபா, ஒளிப்பதிவு: ஜாசன் வில்லியம்ஸ், இயக்கம்: நோவா ஆம்ஸ்ட்ராங் பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D One), அப்துல் ஏ நாசர்

கதை open பண்ணா …!
காவல் உதவி ஆணையாளர் மகள் சேச்க்விதா கனிமொழி ஒரு நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் கடத்தப்படுகிறார். அவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்ததும் அதிர்ச்சி அடையும் உதவிஆணையாளர் மது சூதனராவ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கொலைகாரனை தேடும் வேலையில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.கொலையாளியை கண்டுபிடிக்க காவல்த்துறை மூன்றுவித குழுக்கள் அமைத்து நகர் முழுவதும் தேடி வருகிறார்கள். முதலில் வீடுகளுக்கு உணவு விநியோக வேலை செய்யும் கதாநாயகன் தருண் விஜய்யை காவல்த்துறை ஆய்வாளர் விசாரணை செய்கிறார்.விசாரணையில் அவர் குற்றமற்றவர் என அனுப்பிவிடுகிறார்கள்.
இரண்டாவதாக ஆட்டோ ஓட்டுநர் ராம்ஸ் தான் கொலையாளியென முடிவு செய்து அவரை தேடும் பணியில் காவல்த்துறை மும்முரமாக செயல்கிறது. அவரை எங்கு தேடியும் ஆள் அகப்படவில்லை. இந்நிலையில் கதாநாயகன் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழியை நான்தான் கொலை செய்தேன். என்றும் இதற்குமுன் இரண்டுபேர்களை கொலை செய்திருக்கிறேன் என்றும் காவல்த்துறை ஆணையரிடம் தானாக முன்வந்து மனநிலை பாதிக்கப்பட்டவராக ஆஜர் ஆகுகிறார்.
இரண்டாவதாக ஆட்டோ ஓட்டுநர் ராம்ஸ் தான் கொலையாளியென முடிவு செய்து அவரை தேடும் பணியில் காவல்த்துறை மும்முரமாக செயல்கிறது. அவரை எங்கு தேடியும் ஆள் அகப்படவில்லை. இந்நிலையில் கதாநாயகன் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழியை நான்தான் கொலை செய்தேன். என்றும் இதற்குமுன் இரண்டுபேர்களை கொலை செய்திருக்கிறேன் என்றும் காவல்த்துறை ஆணையரிடம் தானாக முன்வந்து மனநிலை பாதிக்கப்பட்டவராக ஆஜர் ஆகுகிறார். நீதிமன்றம் அவரை மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சேஷ்விதா கனிமொழி உயிருடன் மீட்கப்படுகிறாள்.
அப்படியானால் கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? சேஷ்விதாவை கொலை செய்தேன் என்று ஏன் தருண் விஜய் பொய் கூறினார்? இதற்கான விடையை பல அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறர் இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங்.
உணவு விநியோக நடிப்பு, மன நிலை பாதிக்கப்பட்ட நடிப்பு, உச்சக்கட்ட காட்சி நடிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கும் தருண் விஜய் போற்றதலுக்குறியவர். மகள் சேஷ்விதாவின் மீது அதிக பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மதுசூதனன் ராவின் நடிப்பு மெச்சத்தகுந்தது. சேஷ்விதா பயத்தில் பதறும் உணர்வுகளை முகத்தில் அள்ளித் தெரித்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே முகத்தை காட்டும் ராம்ஸின் வில்லத்தனம் பெண்களின் வெறுப்பை அள்ளிக் கொண்டு போகிறார். ஆளை வெட்டும் காட்சிகளை கேமராமேன் ஜாசன் வில்லியம்ஸ் மறைத்து மறைத்து எடுத்திருந்தாலும் பயமுறுத்தத்தான் செய்கிறது.
வில்லன் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கும் மது சூதனராவ் இதில் அன்பான தந்தையாக நடித்திருப்பது மாறுபட்ட சூழலை படத்துக்கு தந்திருக்கிறது. தர்ஷன் விஜய் ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தையும் தயாரித்திருக்கிறார். கரண் பி. கிருபா பின்னணி இசை விறுவிறு… எஸ் கமலக்கண்ணன் எடிட்டிங் காட்சிகளை க்ரிப் குறையாமல் வைத்திருக்கிறது..கதையின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் காட்சியில் குற்றவாளியை தப்பிக்கவிட்ட காவல்த்துறையை என்னவென்று சொல்வது.
அப்போ உண்மை தெரிய வரும்போது நீதி எங்கே போனது ..? நீதிக்கு எங்கே நீதி …சட்டம் ஒரு இருட்டறை… வலியவன் வாழ்வான் என்பது உங்கள் கருத்தா …?
இயக்குனர் பார்வைக்கே விடுகிறேன் இந்த கேள்வியை ..?
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3/5

