திரௌபதி – 2 திரைப்படம் பிரம்மாண்டமாக, உருவாகி வருகிறது. இப்படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது

திரௌபதி – 2 திரைப்படம் பிரம்மாண்டமாக, உருவாகி வருகிறது. இப்படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது

நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சோழ சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து G. M பிலிம் கார்ப்பரேஷனின் தயாரிப்பில் திரௌபதி – 2 திரைப்படம் பிரம்மாண்டமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்‌ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் நட்டி நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் Y.G மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எழுத்தாளர் பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். “ஜிப்ரான்” இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு “பிலிப் ஆர். சுந்தர்”, நடனம் “தனிகா டோனி”, சண்டை பயிற்சி “ஆக்‌ஷன் சந்தோஷ்”, படத்தொகுப்பு “தேவராஜ்” கலை “கமலநாதன்” அமைத்துள்ளார். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் முகலாயர்கள் கால் பதிக்கும் காலத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது . திருவண்ணாமலையை தலைநகரமாக கொண்டு தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.. 75% படப்பிடிப்புகள் மும்பையிலும் மீதம் செஞ்சி, திருவண்ணாமலை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.. 2020 ம் ஆண்டு வெளியான திரெளபதி திரைப்படத்துடன் இந்த வரலாற்றை எப்படி தொடர்பு படுத்தி இரண்டாம் பாகம் உருவானது என்பது பேசு பொருளாகும்.. இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *