கிங்டம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.5/5

கிங்டம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.5/5

படம் கிங்டம்

நடிப்பு: விஜய் தேவர கொண்டா, சத்யதேவ், பாக்ய ஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர்    தயாரிப்பு: நாக வம்சி, சாய் சௌதன்யா     இசை: அனிருத்    ஒளிப்பதிவு: கிரிஷ் ,கங்காதரன்

இயக்கம்: கௌதம் தின்னனூரி      பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

கதை open பண்ணா …!

காவல்துறையில்  காவலர் பணிக்கு புதிதாக வந்திருக்கும் விஜய் தேவரகொண்டா க்கு சிறுவயதில் காணாமல் போன தன் அண்ணன் சத்யதேவ் வை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது லட்சியம். பணியில் அவனது வேகத்தையும் துறு துறுப்பையும் பார்த்து மேலதிகாரி ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார். கொடுக்கப்பட்ட இந்த பணியை வெற்றிகரமாக முடித்து விட்டால் காணாமல் போன உன் அண்ணனை கண்டுபிடித்து தருவது என் பொறுப்பு என்று மேலதிகாரி சொன்னதை நம்பி இந்த பணிக்குள் இறங்குகிறான்.

தமிழ்நாடு ஆந்திரா கடற்கரை பகுதியிலிருந்து இலங்கை தீவில் கடல் வழியாக கடத்தி வரப்படும் தங்க கட்டிகளை கொண்டுவரும் வேலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் கொத்தடிமைகளாக இருந்து செய்து வருகிறார்கள். அவர்களை அங்கிருக்கும் சில பண முதலைகள் தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் சிட்டுக்குருவியை போல் சுட்டுத் தள்ளுகிறார்கள். இந்த கூட்டத்தை கண்காணிக்க உளவாளியாக அனுப்பப்படுகிறார் விஜய் தேவரகொண்டா அத்துடன் சிறுவயதிலேயே தன்னை விட்டு பிரிந்து சென்ற அண்ணனையும் தேடி அங்கு செல்கிறார்.அந்தத் தேடலில் அவன் அண்ணனே கிடைக்கிறான். அண்ணனை தன்னுடன் வர எவ்வளவோ கெஞ்சியும் மறுக்கிறான் அண்ணன். அதற்கும் காரணம் இருக்கிறது.அவன் சந்தித்த அண்ணன் அங்கே சாதாரண ஆள் இல்லை. ஒரு கட்டத்தில் தம்பியாலேயே அண்ணனுக்கு உயிருக்கு அபாயம் ஏற்படுகிறது.உளவாளியாகவும் அண்ணனை தேடி செல்லும் பாசம் மிக்க  தம்பியாகவும் இரண்டு உணர்வுகளை தாங்கி இலங்கை தீவிற்கு செல்லும் விஜய் தேவரகொண்டா அங்கு அண்ணனைக் கண்டு மகிழ்வதும், உளவாளியாக இருந்து போலீசுக்கு கடத்தல்காரர்களின் தகவல்களை தருவது..காட்டு வழியில் கடற்படை கொண்டு செல்லும் தங்க கட்டிகள் அடங்கிய பெட்டியை கொள்ளையடிப்பதற்கு விஜய் தேவர கொண்டா போடும் திட்டமும், பின்னர் கடற்படையினர் அவரை மிஷின் கன்னுடன்  முற்றுகையிட்டு தாக்குவதும் என்ன நடக்குமோ என்ற பரபரப்பை அதிகரிக்கிறது.

அடிமையாக அவரும் வேலை செய்து அண்ணனை கண்டுபிடிப்பதுடன் பண முதலைகளை எதிர்த்து போர் தொடுக்கிறார். இந்தப் போரில் அடிமை  கூட்டம் வீழ்கிறதா? பண முதலைகள் அழிகிறார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் ஆக்சன் அதிரடியுடன் பதில் அளிக்கிறது.இதுவரை காதல் நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா, இப்படத்தில் சூரியாக ஒரு சாதாரண காவலர் வேடத்தில் வந்து மொத்த கதையையும் தாங்கி இருக்கிறார். முறுக்காமல் மெருகேறி நிற்கும் மீசை,…விஜய் தேவர கொண்டாவை இதுவரை லவ்வர் பாயாகவே பார்த்து ரசிகர்களுக்கு இப்படத்தில் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.கடத்தல் பண முதலைகள், கொத்தடிமைகள் என்று கதை நகர்ந்தாலும் இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ் ஆகியோரின் சகோதர பாசப் போராட்டம் கதையை  சென்டிமெண்டாக தாங்கி நிற்கிறது.குறைந்த தலைமுடி, நிமிர்ந்த நடை என அந்த வேடத்துக்காக நடிப்பை போலவே தன்னையும் மாற்றிக் கொண்டு இருக்கிறார். அதுவே சண்டைக்காட்சிகளில் எத்தனை பேரை அடித்து வீசினாலும் நம்ப வைக்கிறது.. இதையெல்லாம் தாண்டி அண்ணன் தம்பி மீண்டும் இணைந்தார்களா என்பதை கலவர நிலவர பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள்.

 

நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போஸ் நன்றாக  கிடைத்த சிறிய பாத்திரத்திலும் அழகாக வந்து தனி முத்திரை பதிக்கிறார்….அது போலவே அண்ணனாக வரும் சத்யதேவ் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்..,வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ் ரொம்ப யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார்

ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோர் கேமரா தீவுகளின் வனப்பை பிரமாண்டமாய் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப காட்சிகளை நம் கண் முன்னே அழகாக மிரட்டலாக கொண்டு வருகிறார்கள் ..அனிருத்தின் பின்னணி இசை படத்துக்குப் பலம்.சத்தமும் அதிகம் .ஒரு கடைநிலைக் காவலரை கதாநாயகனாக வைத்துக் கொண்டு தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், அந்த மக்களை வைத்து நடக்கும் கடத்தல் தொழில், அதைச்செய்யும் கூட்டம் என மிக விசாலமாக போகும் கதைக்குள் அண்ணன் தம்பி பாசத்தையும் அழகாக இணைத்து இருக்கிறார். ஒரு சாதாரண காவலன் தன் இனத்தின் காவலனாக மாறும் அந்த கிளைமாக்ஸ் rocks.. எழுதி இயக்கியிருக்கிறார் கவுதம் தின்னனூர்.

மொத்தத்தில் கிங்டம் அடிமைகளின் விடுதலைக்கான புரட்சிப்போர்..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.5/5

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *