உசுரே திரைவிமர்சனம்
படம்: உசுரே
நடிப்பு: டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு: மவுலி எம் ராதாகிருஷ்ணா இசை: கிரண் ஜோஸ் ஒளிப்பதிவு: மார்க்கி சாய் இயக்கம்: நவீன் டி கோபால் பிஆர்ஓ: சாவித்திரி

கதை open பண்ணா …!
தமிழக – ஆந்திரா எல்லையான சித்தூரில் கதைக்களம் அமைந்துள்ளது.. இந்த கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் நாயகன் டீ.ஜெ & நாயகி ஜனனி வசிக்கின்றனர்..கணவன் விட்டு ஓடிப்போன காரணத்தால் மகள் ஜனனியை மிகவும் கண்டிப்பாக வளர்த்து வருகிறார் மந்த்ரா.சித்தூரில் கல்குவாரியில் மேனேஜராக இருக்கும் ராகவன் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ரஞ்சனாவை காதலிக்கிறார் இவர் காதலுக்கு அனுசியாவான அவர் தாய் மந்திரா, குறுக்கே நிற்கிறார். இது தவிர அந்த ஊரில் திருவிழா நடக்கும் போதெல்லாம் பாபு என்கிற ஒரு ரவுடிக்கும் நாயகனுக்கும் அடிதடி ஏற்படுகிறது..
.நாயகன் அம்மாவும் அப்பாவும் மகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் கள் . ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கும் அனைவரும் பிரமோற்சவம் பார்க்க புறப்பட்டு செல்ல நாயகன் அவரது வீட்டிலும், நாயகி அவரது வீட்டிலும் தனியாக இருக்கிறார்கள். அப்போது நாயகிக்கு தொந்தரவு கொடுக்கிறான் போதை ஆசாமி ஒருவர் நாயகன் தட்டி கேட்க இதனால் நாயகன் மீது நாயகி காதல் கொள்கிறாள் இவர்களது காதலை அறியும் ஜனனியின் அம்மா மந்திரா ,அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் நாயகனிட மிருந்து நாயகியை பிரிப்பதற்கு ஒரு திட்டமும் திட்டுகிறார், ,ஆனால் மந்த்ராவின் முயற்சிகளையும் மீறி நாயகனும், நாயகியும் இணைந்தார்களா ?இல்லையா என்பதை உசுரே படத்தின் மீதி கதை சொல்கிறது.

காதல் நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களும் கொண்டுள்ள டீஜே ,தன்னுடைய பங்கிற்கு நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஜனனி தனது தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்,. . மற்றும் குறிப்பிட்ட சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் நாயகியின் தாயாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மந்த்ரா நடித்துள்ளார், தான் கதாநாயகியாக நடித்த காலத்தில் கவர்ச்சிகரமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த மந்திரா ,இந்த படத்தில் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் .நாயகனின் பெற்றோராக கிரேன் மனோகரும், செந்திகுமாரியும் நடித்துள்ளார்கள் ,அதேபோல நாயகனின் நட்பு வட்டாரத்தில் தங்கதுரை, ஆதித்யா கதிர் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளார்கள், .இவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப தங்களது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்
ஒளிப்பதிவாளர் மார்கி சாய்,சித்தூரையும் அதன் அழகையும் கிராமப்புறத்தையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்.மொத்தத்தில் இந்த உசுரே” காதலும், நட்பும், துரோகமும், கலந்த ஒரு இன்றைய வாழ்வில் எதார்த்த படைப்பாக வந்திருக்கிறது ….எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் அதிர்ச்சியை கொடுக்கிறது..கிராமத்து வாழ்வியல் காட்சிகளை பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய் ….எடுத்துக்கொண்ட காதல் கதைக்கு தெளிவான திரைக்கதை அமைத்து அதோடு இந்த படத்தில் காதலை மந்திர (ரா) காதல்.. காவு வாங்குவதை வலியோடு சொல்லி இருக்கிறார் உசுரே இயக்குனர் இயக்குனர் நவீன் டி கோபால்..
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3/5
:

