சரண்டர் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5
படம்: சரண்டர்
நடிப்பு:; தர்ஷன், லால் சுஜித், முனிஷ்காந்த், பாடினி குமார், அரரோல் டி சங்கர், சுந்தரேஸ்வரன், கௌஷிக் தயாரிப்பு: வி ஆர் வி குமார்
இசை: விகாஸ் பாடிஷா ஒளிப்பதிவு: மெய்யேந்திரன் இயக்கம்: கௌதமன் கணபதி பி ஆர் ஓ: சதீஷ் (s2 Media)

கதை open பண்ணா …!
தேர்தல் நெருங்கி வரும் நாளில் நடக்கும் கதை ..!நான்கு நிகழ்வுகள் நடக்குது ..
கேங்ஸ்டர் கனகு அமைச்சர் கொடுக்கும் பணத்தை தேர்தல் செலவுக்காக பிரித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறான் அதில் வில்லியம்ஸ் என்ற போலிஸ் அதிகாரியிடம் கொடுத்து அனுப்பிய 10 கோடி பணம் மிஸ் ஆகிறது விபத்தில் சிக்கிய வில்லியம்ஸ் மற்றும் வர்கீஸ் அவர்களிடம் இருந்து அரசியல் தலைகளுக்கு கை மாற வேண்டிய 10 கோடி பணத்தை மீட்க கணக்கு எடுக்கும் அதிரடி முயற்சிகள் ஒருபக்கம் ..!
திருமழிசை காவல் நிலையத்தில் சீனியர் போலீஸ் லால் ரைட்டராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதனால் விஐபிகள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்கும்படி ஆணை வருகிறது. நடிகர் மன்சூரலிகான் தனது துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.

காவல் நிலையம் வரவழைக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண் போலீஸ் அதிகாரி பானுமதியால், வஞ்சிக்கபடும் போதுஅந்த தாய் ,மகனும் செய்யாத குற்றத்துக்காக காவல் நிலையம் கொண்டு வந்ததை அறிந்த இன்ஸ்பெக்டர் .. வீட்டுக்கு போக சொல்கிறார்..அதே வேளையில் அந்த பெண் தனக்கு தான் உழைத்து சம்பாதிக்க ஒரு வேலை வாங்கி தர இன்ஸ்பெக்டர் இடம் கோரிக்கை வைக்க ஆகட்டும் பார்க்கலாம் என்கிறார்…
இது ஒருபுறம் இருக்க அதே காவல்நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இடமிருந்து தேர்தல் பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கி காணாமல் போக, இதனால் காவல் நிலையத்தில் ஏற்படும் குழப்பம் .மொத்த காவல் நிலையமும் பெரியசாமிக்காக அந்த துப்பாக்கி யை கண்டு பிடிக்க முயற்சி செகிறார்கள் அவர்களுக்கு இருக்கும் நேரம் எலெக்ஷன் நடக்கும் நாள் வரை ..புதிதாக காவல் துறையில் பணியில் சேர்ந்த தர்ஷன்(புகழேந்தி) writer பெரியசாமிக்கு உதவியாக களம் இறங்குகிறார்..புகழேந்தி தலைமையில் தேட ஆரம்பிக்கிறார்கள் …காணாமல் போன துப்பாக்கியை தேடி போகும் காட்சிகள் விறுவிறுப்பு ..ரவுடியின் தம்பி யுடன் ஏற்பட்ட தகராறில் கணக்கு லால் மோதல் ஏற்பட , இதில் அவமானப்படுத்தப்படுகிறார்.லால். அதைக் கண்டு தர்ஷன் ஆத்திரப்பட்டு ரவுடி மீது தாக்குதல் நடத்துகிறார்.

கனகுவின் தம்பி டெல்லி அவன் செய்யும் அட்டூழியம் ஒரு புறம் ..,!.கனகுவின் தம்பி குட்டி ரவுடி டெல்லியிடம் பேரம் பேசி அந்த துப்பாக்கியை வாங்கும் நோக்கத்தில் முனிஷ்காந்த் காரில் trichy டு சென்னை வரை அலையும் காட்சிகள் அதன் பின் நடக்கும் சம்பவங்கள் சிறிது சிரிக்க உதவுது.
ஆக,வெவ்வேறு அடையாளத்துடன் வாழ்பவர்கள். நான்கு சம்பவங்கள் நான்கு நாட்கள் தட தடுக்கும் திரைக்கதை சம்பவங்களை ஒரே புள்ளியில் ஒன்றிணைவோம் வா என்று செதுக்கியுள்ளார் இயக்குனர் .. கடைசியில் துப்பாக்கி கிடைத்ததா என்பதை கடைசி நாளில் எதிர்பாரா ட்விஸ்ட் மூலம் நம்மை சரணடைய வைத்து விட்டார் இயக்குனர் கௌதமன் கணபதி..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.9/5

