சென்னை ஃ பைல்ஸ் முதல் பக்கம் ரேட்டிங் 3.7/5
படம்: சென்னை ஃ பைல்ஸ் முதல் பக்கம்
நடிப்பு : வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா
தயாரிப்பு: மகேஸ்வரன் தேவதாஸ் இசை:ஏ ஜி ஆர் ஒளிப்பதிவு: அரவிந்த் இயக்கம்: அனீஸ் அஷ்ரஃப் பி ஆர் ஒ: நிகில் முருகன்

கதை..open பண்ணா …!
கதையின் நாயகன் வெற்றியின் தந்தை ஒரு பிரபல எழுத்தாளர், அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதும் பத்திரிக்கையாளர் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவி செய்வதற்காக வெற்றி சென்னைக்கு வருகிறார் அங்கு இன்ஸ்பெக்டராக பணி புரியும் தம்பி ராமய்யாவுடன் பழக்கமாகிறார். நகரில் மர்மமான கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகளை துப்பறிய முடியாமல் தம்பி ராமையா திணற தனது அறிவுத் திறமையை பயன்படுத்தி கண்டுபிடிக்கிறார் வெற்றி,
இதே போல் அடுத்தடுத்து பல உதவிகளை அவருக்கு வெற்றி தொடர்ந்து செய்து வருகிறார், இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் பல இளைஞர்கள் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள், இந்த கொலைகளை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிப்பதற்கும் வெற்றியுடன் இணைகிறார் தம்பி ராமையா. அந்த கொலைகாரன் யார் ?எதற்காக அந்த கொலைகளை செய்கிறான்?முகம் சிதைத்து கொல்லப்படும் வழக்கில் வெற்றி போடும் ஸ்கெட்ச்சிலிருந்து கொலைகாரன் தப்பிக்கிறான். அவனை வெற்றியால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

ஒரு துப்பறியும் நாவல் கொடுக்கும் த்ரில்லிங் அனுபவத்தை இந்த படம் நமக்குள் கடத்துகிறது..அதற்கேற்ப வெற்றி தன அறிவை பயன் படுத்தி துப்பறிவது நம்பும் படியாக திரைக்கதை நகர்கிறது..ஒவ்வொரு கொலையின் பின்னணியையும் வெற்றி வெகு எளிதாக கண்டுபிடிப்பது காட்சிகளை சுவாரஸ்யமாக்குகிறது ..இதற்கு அடுத்தபடியாக இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையா வழக்கமான தனது பாணி நடிப்பில் இயல்பாக நடித்துள்ளார்.ஷில்பா மஞ்சுநாத் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறை காண முடியாத அளவிற்கு நிறைவாக நடிப்பினை தந்துள்ளார் .மேலும் மகேஷ்தாஸ், ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் மகேஸ்வரன் தேவதாஸ் படத்தை தயாரித்ததுடன் வில்லனாக அதற்கேற்ற உடல்வாகுடன் மிரட்டலாக நடித்துள்ளார் ..ஒரு குற்றம் நடக்கும் முன் தடுப்பது ஒரு விதம்.. குற்றம் நடந்தபின் குற்றவாளி யார் அந்த தேடும் முயற்சிக்கு அறிவும் அனுபவமும் தேவைப்படும் ..அந்த வகையில் சரியான கதைக்களத்தை தேர்வு செய்து சென்னை பைல்ஸ் முதல் பக்கத்தை வெளியிட்ட மொத்த டீமுக்கும் பாராட்டுக்கள் …
அனீஸ் அஷ்ரஃப் உங்கள் இரண்டாம் பக்கம் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.7/5

