அக்யூஸ்ட் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5
படம்: அக்யூஸ்ட்
நடிப்பு: உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, ஷாண்டிகா, பவன், தயா பன்னீர்செல்வம், ஸ்ரீதர், பிரபு ஶ்ரீனிவாஸ், டி சிவா , பிரபு சாலமன், சங்கர் பாபு, ஜெயக்குமார், தீபா சுபத்ரா, பிரபாகர், டேனி தயாரிப்பு: ஏ எல் உதயா, தயா பன்னீர்செல்வம், எம் தங்கவேல் இசை: நரேன் பாலகுமார் ஒளிப்பதிவு: மருதநாயகம் இயக்கம்: பிரபு ஶ்ரீனிவாஸ் பிஆர்ஓ: நிகில் முருகன்.

எம்.எல்.ஏ கொலை வழக்கு குற்றவாளியான உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஒரு உதவி ஆய்வாளரும் கடைநிலைக் காவலர்கள் இருவரில் ஒருவரான அஜ்மலும் செல்கிறார்கள். வழியில் உதயாவை கொலை செய்ய கர்நாடகா விலுள்ள ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. அதிலிருந்து தப்பிக்க காவலர்கள் மூவரும் சேலம் செல்லும் அரசு பேருந்தில் மாறி செல்கிறார்கள். அந்த பேருந்தையும் ரவுடிக்கும்பல் துரத்தி பேருந்துக்குள் சென்று ஒர் காவலரை வெட்டிக் கொல்கிறார்கள். உதவி ஆய்வாளர் படுகாயம் அடைகிறார். பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அதிலிருந்து கைதி உதயாவை அஜ்மல் காப்பாற்றி சேலம் நீதிமன்றத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்கிறார்.
இதை அறிந்த போலீஸ் உயரதிகாரி உதயாவை கொலை செய்ய ரவுடிகளுக்கு கட்டளையிடுகிறார். அதற்கு காவலர் அஜ்மல் தடையாக இருந்தால் அவரையும் கொலை செய்யும்படியும் கட்டளையிடுகிறார். அந்த ரவுடிக் கும்பலிலிருந்து உதயாவை அஜ்மல் காப்பாற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாரா?. உதயாவை கொல்ல உயர்காவல்த்துறை அதிகாரி ஏன் ரவுடிக்கும்பலுக்கு கட்டளையிடுகிறார்? அந்தப் பயணத்துக்குள் உதயா யார், எப்படி அந்த சதி வலைக்குள் சிக்கினார் பிளாஷ் பேக்குகளாக சொல்லப்படுகின்றன.
தான் காதலித்த மலருக்காக, நாகராஜ் கையை தொட்டான் என்பதற்காக கணக்கு நாகராஜ் கையை வெட்டி விட்டு இரண்டு வருடம் சிறைக்குச் செல்கிறார்.சிறையில் இருந்து திரும்பும்போது நாகராஜ், மலர் இருவருக்கும் திருமணம் ஆகிறது . மனம் நொறுங்கிப் போன கணக்கு, மலர் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால் நாகராஜ் அவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு மலரை, டார்ச்சர் செய்கிறார். ஒரு கட்டத்தில் கணக்கு, நாகராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளிவிட நாகராஜ் இறந்து விடுகிறார். இப்போது மலர், நாகராஜ் இருவருக்கும் பிறந்த குழந்தைபுற்று நோய் இரண்டாம் கட்ட கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறது.தான் காதலித்த, மலர் இன்னொருவன் மனைவியான பிறகும் மலரின் குழந்தையை காப்பாற்ற துடிக்கிறார் கணக்கு. தன் மலருக்காக ஒரு கொலையும் செய்ய ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு நடப்பது தான் பரபரப்பான, விறுவிறுப்பான முதல் பாராக்களில் படித்த திரைக்கதையின் flashback , .அவர்களிடமிருந்து கைதியை காப்பாற்றி வேந்தன் எப்படி அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார். கணக்கை ரவுடிகள் கொல்ல வருவது ஏன் என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

உதயா அஜ்மல் இருவருமே கதைக்கு தேவையான மிகையில்லா நடிப்பில் அசத்தி உள்ளனர் ..!
யோகி பாபு லாட்ஜ் ஓனராக வருகிறார். தனக்கே உரித்தான பஞ்ச் டயலாக் பேசி அடிக்கும் கமெண்ட்கள் உதயா அஜ்மல் இருவரையும் காப்பற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன
ஒளிப்பதிவாளர் மருதநாயகம் கேமரா சண்டை காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருப்பது பிளஸ்…
இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதன்முறையாக தமிழ் படம் இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் பட இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.அருமையாக திரைக்கதை வடிவமைத்து அதற்கென நடிகர்களை தேர்வு செய்து அருமையாக வேலை வாங்கி உள்ளார் இயக்குனர் ,அக்யூஸ்ட் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.6/5

