ஹவுஸ்மேட்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

படம்: ஹவுஸ்மேட்ஸ்
நடிப்பு: காளி வெங்கட், தர்ஷன் ஹர்ஷா பைஜு, வினோதினி, மாஸ்டர் கென்ரிக் இசை ராஜேஷ் குமரேசன் தயாரிப்பு: கிரியேட்டவ் புரடியூசர் ராஜவேல்
ஒளிப்பதிவு:சதீஷ் இயக்கம்: ராஜவேல் பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல்.நாசர்
தர்ஷனை, ஹர்ஷா காதலிக்கிறார். தந்தை எதிர்ப்பதால் வீட்டை விட்டு வெளியேறி தர்ஷனை மணக்கிறார். சொந்த வீடு வாங்கி அதில் தர்ஷன் குடியேறுகிறார் ஆனால் அந்த வீட்டில் அமானுஷ்யமாக ஏதேதோ நடக்கிறது. அதை கண்டு பயந்த ஹர்ஷா, தர்ஷனிடம் கூறுகிறார். முதலில் நம்ப மறுத்தாலும் பின்னர் அவரே நேரில் கண்டு அதிர்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த காளி வெங்கட் குடும்பம் இந்த அமானுஷ்ய வேலைகளை செய்வது தெரிய வருகிறது. இவர்கள் கண்ணுக்கு அவர்கள் தெரியவில்லை அவர்கள் கண்ணுக்கு இவர்கள் தெரியவில்லை. எல்லாமே சுவற்றில் எழுதி உரையாடலை பகிர்கின்றனர். இவர்களுக்கு இந்த கதி ஏன் ஏற்பட்டது, . . ஆனால் இருகுடும்பத்தார்களுக்கும் ஒருவருக்கொருவர் தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இருவர் குடும்பமும் அந்த வீட்டில் ஒருவிதமான அமானுஷ்ய சக்தியை உணர்கிறார்கள். அது பேய்யாக இருக்குமோ என்று அஞ்சுகிறார்கள். ஆனால் அது பேய் அல்ல அறிவியலின் பரிணாமம் என்று தெரிய வருகிறது. இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன?, அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் கதை. திரையுலகம் இப்படியொரு கதைக்களத்தை இதுவரை கண்டதில்லை. ஒரு புதுமையான கதை களத்தை தேர்ந்தெடுத்து திரை வடிவில் கொடுத்துள்ளார் இயக்குனர்…!
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.முக்கியமான வேடத்தில் இந்த படத்தில் காளி வெங்கட் மனைவியாக நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகளில், பீதியும் பயமும் கலந்த நடிப்பு, நன்றாக நடித்திருக்கிறார்.கிளைமாக்ஸ் காட்சியில் மகனை நினைத்து உருகி அழும் காட்சியில் வினோதினி மனதில் இடம் பிடிக்கிறார்.ஒரே வீட்டினில் இரு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமல் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு உச்சக்கட்ட காட்சி மூலம் அமானுஷ்ய சக்தியில்லாமல் அறிவியல் மூலமாக எளிதாக பதிலளித்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. படத்திற்குள் மிகப்பெரிய அறிவியல் ஆச்சரியத்தை வைத்திருப்பதோடு, அதை சுற்றி நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி பார்வையாளர்களுக்கு புரியவும் வைத்திருக்கிறார்.
மிகவும் சவால் நிறைந்த பணியை படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். கலை இயக்குநர் என்.கே.ராகுலின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.அப்துல் லீ ,தர்ஷன் வேலை செய்யும் அலுவலகத்தில் சீனீராக வந்து பிரச்சனைகளுக்கு விடை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார். மற்றும் மாஸ்டர் ஹென்ரிக் ,மகி என்ற கதாபாத்திரத்தில் முதலில் பயந்து நடுங்கி பிறகு காமெடியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
ராஜேஷ் முருகேசனின் மாயாஜால இசையுடன் வலம் வந்து இருக்கிறார் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. சதீஷ் ஒளிப்பதிவில் திகில் படத்துக்கு தேவையான வேலையை சிறப்பாக செய்துள்ளார் அந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை அடுக்குமாடி வீடுகளை அழகாகக் கட்டி உள்ளார் ..!
மொத்தத்தில் இந்த housemates அறிவியல் ஆச்சர்யங்களை திகிலுடன் காமெடி கலந்து சுவாரசியம் கூட்டி கதை சொல்லி உள்ளார்கள் ..ஆக குடும்பத்துடன் இந்த படத்தை கண்டு களிக்கலாம்…! HOUSEMATES டீம் அனைவருக்கும் பாராட்டுக்கள் .
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.2/5