தலைவன் தலைவி திரை விமர்சனம்

படம்: தலைவன் தலைவி
நடிப்பு: விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பன், பருத்திவீரன், சரவணன், தீபா, ஆர்.கே. சுரேஷ், காளி வெங்கட், ஜானகி சுரேஷ், பேபி மகிழினி, அருள்தாஸ், வினோத் சாகர், சென்றாயன், கிச்சா ரவி, ரோகன், ஆதித்ய கதிர்
தயாரிப்பு: டி. ஜி. தியாகராஜன், செந்தில், அர்ஜூன் இசை: சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு: எம் சுகுமார் இயக்கம்: பாண்டிராஜ் பி ஆர் ஓ: நிகில் முருகன்
கதை open பண்ணா…!
விஜய் சேதுபதியின் மகள் மகிழினியின் முடி கொடுக்கும் விஷயம் அறிந்து களமிறங்குகிறது ஆகாச வீரன் குடும்பம். .படத்தின் நாயகன் ஆகாச வீரனுக்கு(விஜய் சேதுபதி)அறிவிக்காமல் அவர் மகளுக்கு மொட்டையடிக்க கோயிலில் கூடுகிறது பேரரசியின் குடும்பம்.
,மகனின் பிறந்த நாள் கொண்டாட கோயிலுக்கு வருகிறார் காளி வெங்கட் குடும்பம்.அதன் பிறகு பிளாஷ்பேக்கில் கதை செல்கிறது
மதுரை ஒத்தக்கடையில் ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவர் மனைவி பேரரசி (நித்யா மேனன்). இவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கும் பொழுது நின்று போக அதற்கு காரணம் விஜய் சேதுபதியின் மச்சான் .பெண் வீட்டார் குடும்பத்தினருக்கு ஆகாச வீரனின் பரோட்டா மாஸ்டர் வேலை பிடிக்காவிட்டாலும் பேரரசிக்கு ஆகாச வீரனை பிடித்து விடுகிறது. ஒருவழியாக இவர்களுக்கு திருமணம் நடக்கிறது..!
அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளால் இருவீட்டாரும் தலையிட, பிரிவின் எல்லைக்குப் போய் நிற்கிறது கணவன் – மனைவி உறவு மாமியார் மருமகள் சண்டை , பேரரசி, நாத்தனார் சண்டை , பெண் சம்பந்திகளால் சண்டை , கணவன் மனைவி சண்டை, மாமன் மச்சான் சண்டை ,என எவ்வளவு ஆசையாக திருமணம் செய்து கொண்டார்களோ அந்த அளவுக்கு இவர்கள் இருவருக்குள்ளும் தினம் தினம் சண்டை ஏற்படுகிறது..விஜய் சேதுபதி பேரரசியுடன் சண்டை வரும்போது எல்லாம் பேரரசி அவங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி செல்வதும் விஜய் சேதுபதி சமாதானம் செய்து திருப்பி அழைத்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது ..இவர்கள் சண்டை ஒரு கட்டத்தில் இவர் மச்சான் வந்து இவர்களுடைய கடையை அடித்து உடைத்து வீட்டில் உள்ள அனைவரின் மேலும் தாக்குதல் நடத்தி பேரரசியை வீட்டுக்கு கூட்டி செல்கிறார்.. ஒரு கட்டத்தில் இது இரண்டு குடும்ப மோதலாக மாறி அடி தடி, கொலை முயற்சி, விவாகரத்து என்று நீள்கிறது. இவர்களது வாழ்க்கை என்னவாகிறது .. ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண ஆட்கள் வர.., மச்சான் divorce பேப்பர் வக்கீலிடம் ரெடி பண்ணி கொண்டு வர…, பஞ்சாயத்து பண்ண வந்தவங்க…,மச்சான் அடிக்க கூட்டிட்டு வந்த ஆட்கள்.., என அந்த இடத்தில் ஒரே ரகளை ..
விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, அவருடைய தந்தை அனைவரும் ரவுடிகள் அம்மா வாயாடி இவர்களால் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பேரரசியுடன் வாழ முடியாமல் அவஸ்தை குள்ளாகும் ஆகாச வீரணாக, படம் முழுக்க அருமையாக நடித்திருக்கிறார் .எமோஷனில் உருகுவதும் , காதலி மீது அன்பை பரிமாறுவதும், மகள் மகிழினிமீது பாசத்தை பொழிவதும் ,மச்சான் மீது வெறுப்பை பொழிவது, என பல பரிமாணங்களில் விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நித்யா மேனன் திருமணத்திற்கு பின் வாழ்க்கை நன்றாக ஜாலியாக வாழ்ந்து வர, விஜய் சேதுபதியின் தந்தை சரவணன், தனது மருமகள் நித்யா மேனனை ஹோட்டல் கல்லா பெட்டியில் அமர்ந்து கணக்கை பார்த்து கொள்ள சொல்லும் காட்சியில் ஜம்பமாய் அமரும் போது ஒய்யாரமாக இருக்கிறார். என்ன கம்பீரமாக கணவரை பார்த்து கண் சிமிட்டும் காட்சியில் கை தட்டல்.., விஜய் சேதுபதியின் அம்மாவுக்கு புதிதாக வந்த மருமகள் தனது இடத்தை பிடித்து விட்டால் என்கிற ஈகோ வால் பிரச்னை வெடிக்க அதே போல் இதுநாள் வரை தனது பெயரை ஹோட்டல் இருந்தது, ஆனால், தற்போது தனது மனைவி பெயரில் ஹோட்டலை மாற்றியதால், விஜய் சேதுபதியின் தங்கைக்கும் வரும் ஈகோ வால் அம்மாவும் மகளும் சேர்ந்து நித்யா மேனனை ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆள் போல் நடத்த, அந்தக் காட்சிகளில் அனாசியமாக நடித்திருக்கிறார் நித்தியா மேனன்.
விஜய் சேதுபதி க்கு வேண்டுகோள்…படத்தின் கதை கேக்குது அப்படிங்கிறதுக்காக நீங்க சத்தம் போட்டு பேசுவது ஒரு விதம்…, சத்தமா பேசுவதே நம்ம ஸ்டைல் அப்படிங்கறது ஒரு விதம்…, எது எப்படியோ இந்த படத்துல காது ஜவ்வு கிழியும் அளவுக்கு சத்தம் போட்டு இருக்கீங்க கொஞ்சம் டெசிபல் குறைத்துக்கொள்ளுங்கள்..!
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவிக்குள்ள குடும்ப உறவுகளுக்குள்சண்டைகள் நடப்பது சகஜம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஈகோ இல்லாமல் அவர்களே பேசிக்கொண்டால் பிரச்சனை சால்வ் ஆகிடும் இதில் மூன்றாவது நபர் மூக்கை நுழைக்காமல் இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லது அப்படின்னு இயக்குனர் பாண்டிராஜ் இந்த தலைவன் தலைவி படம் மூலமாக ரொம்ப ‘சத்தமா‘ சொல்லி இருக்காரு.
அனைவரும் குடும்பத்துடன் போய் பார்க்க வேண்டிய படம்..
பின்குறிப்பு : குடும்பத்துடன் போய் (குடும்ப நலன் கருதி) தனித்தனியாக பார்க்க வேண்டிய படம் தலைவன் தலைவி.
நம்ம தமிழ் பிரைம் நியூஸ்.காம் ரேட்டிங் 3.7 /5