டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக “தன்வி தி கிரேட்” திரையிடலை நடத்துகிறது

டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக “தன்வி தி கிரேட்” திரையிடலை நடத்துகிறது!
சென்னை, 26 ஜூலை, 2025: டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (Tata Power Community Development Trust (TPCDT)), அனுபம் கெர் ஸ்டுடியோ [Anupam Kher Studio] உடன் இணைந்து, இன்று சென்னை தி நெக்சஸ் விஜயா மாலில் உள்ள பி.வி.ஆர். பலாஸ்ஸோ திரையரங்கில், “தன்வி தி கிரேட்” திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்களை நடத்தியது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு மற்றும் மூளையின் இயல்பான செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு இருக்கும் நரம்பியல் ரீதியான குறைபாடான நியூரோடைவர்சிட்டி ஸ்பெக்ட்ரம் பற்றிய ஆழ்ந்த விழிப்புணர்வு, புரிதல் மற்றும் அவர்களை மனதார ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்றவற்றை எல்லோரிடமும் உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் டாடா பவரின் ’பே ஆடென்ஷன்’ முயற்சியின் கீழ் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிரத்தியேக திரையிடலில், டாடா பவர் நிறுவனத்தின் சி.ஹெச்.ஆர்.ஒ. & சீஃப் சஸ்டெயினபிலிட்டி & சி.எஸ்.ஆர். திரு. ஹிமால் திவாரி [Mr. Himal Tewari, CHRO & Chief Sustainability & CSR], டாடா பவர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாறுபட்ட மூளை செயல்பாடுகள் கொண்ட சிறப்பு குழந்தைகள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள், டாடா குழுமத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள், அரசு பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் மற்றும் 470 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடன் இருப்பவர்களை மற்றவர்கள் புரிந்து கொண்டு அவர்களை சக மனிதர்களைப் போலவே மரியாதையுடனும், மதிப்புடனும் பழக வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் ‘பே ஆடென்ஷன் சென்ஸ்சரி ஸோன்’ ஒன்று ‘சென்சரி ஆல்’ [Sensory All] என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு பகுதி, மாறுபட்ட மூளை செயல்பாடு கொண்டவர்களின் கோணத்தில் [neurodiverse perspective] இருந்து யதார்த்த உலகத்தைப் பார்க்கும் ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வழங்கும் ஒரு தனித்துவமிக்க முயற்சியாக அமைந்திருந்தது.
இந்த கூட்டு முயற்சியின் மூலம், டாடா பவர் மற்றும் அனுபம் கெர் ஸ்டுடியோ இணைந்து “தன்வி தி கிரேட்” மற்றும் பே ஆடென்ஷன் சென்ஸ்சரி ஸோன் திரையிடல்களை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களிலும் மேற்கொள்ள இருக்கின்றன. இது நரம்பியல் ரீதியாக வேறுபாடுகளைக் கோண்டவர்கள், நரம்பியல் ரீதியாக இயல்பானவர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுக்கான பிரத்தியேக தளங்களை வழங்கும்.
இந்த சிறப்பு திரையிடலில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள், தமிழ்நாடு நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD), மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் சங்கம், மைத்திரி, யூத்4ஜாப்ஸ், தாஜ் சாட்ஸ், ஐஎச்Сஎல் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.”
இந்த நிகழ்வில் பேசிய டாடா பவர் நிறுவனத்தின் சி.ஹெச்.ஆர்.ஒ. & சீஃப் சஸ்டெயினபிலிட்டி & சி.எஸ்.ஆர். திரு. ஹிமால் திவாரி [Mr. Himal Tewari, CHRO & Chief Sustainability & CSR], ‘’சமூகம் என்பது ஆட்டிசம் உள்ளவர்களை வித்தியாசமாக நடத்துவது பற்றியது அல்ல. அது நம் ஒவ்வொருவரின் தனித்துவத்தைக் கொண்டாடுவது பற்றியது.
’தன்வி தி கிரேட்’ மூலம், பச்சாதாபத்தை வளர்க்கும் மற்றும் வேறுபாடுகளை மனதார ஏற்றுக்கொள்ளும் ஆரோக்கியமான உரையாடல்களை முன்னெடுப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். டாடா பவர் நிறுவனத்தை பொறுத்தவரையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பு, இந்தியாவின் முதல் நேரடியாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாகவும் நரம்பியல் ரீதியான வேறுபாடுகளின் காரணமாக மாறுபட்ட மூளை செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் இந்தியாவின் முதல் நியுரோடைவர்சிட்டி ஆதரவு தளத்தை முன்னெடுப்பதில் அமைந்திருக்கிறது. ஏனென்றால் நாம் பார்க்கும் உலகில், ஒவ்வொரு மனமும் உண்மையிலேயே முக்கியமானது.” என்றார்
“நாம் அனைவரும் பல கதைகளால் உருவாக்கப்பட்டவர்கள். அவையே நம்மை வடிவமைக்கின்றன, நம்மை ஊக்குவிக்கின்றன, நம்மை ஒன்றாக இணைக்கின்றன. கதைசொல்லிகளாக, நன்மையை, அனைவரையும் அரவணைக்கும் கதைகளின் மீது வெளிச்சம் போட்டு புரிய வைப்பது நமது கடமை. ‘தன்வி தி கிரேட்’ என்பது என் மனதிற்கு மிக நெருக்கமானது. எனது மருமகள் தன்வியால் ஈர்க்கப்பட்டு உருவானது. நரம்பியல் ரீதியான பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் அவரைப் போலவே ஏராளமானோர், திறமையையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள நல்ல இதயங்களைச் சென்றடையும்போது இந்தக் கதைக்கு உண்மையான வெற்றி கிடைக்கும். டாடா பவர் கம்யூனிட்டி டெவலப்மென்ட் டிரஸ்டுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களுடைய ’பே ஆடென்ஷன்’ [Pay Autention] முன் முயற்சியானது, ஆட்டிசம் மற்றும் நியுரோடைவர்சிட்டி பாதிப்பு குறித்த விழிப்புணர்வையும், அவர்களுக்கான ஆதரவையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இம்முயற்சி நரம்பியல் ரீதியான வேறுபாடுகளின் மூலம் மாறுப்பட்ட மூளை செயல்பாடுகளைக் கொண்டிருப்பவர்களூக்கு ஆதரவளிக்கும் வகையில் நீண்ட காலம் தொடரும், அர்த்தமுள்ள நேர்மறையான தாக்கத்தை உருவாக்குமென நாங்கள் நம்புகிறோம்.” என்றார் மூத்த நடிகர் மற்றும் இயக்குனர் அனுபம் கெர்.
“தன்வி தி கிரேட்” என்பது தனது கனவைத் தொடர சமூக வரம்புகளைத் தாண்டி, கவனத்தை ஈர்த்த ஒரு இளம் நியுரோடைவர்சிட்டி குறைபாடு கொண்ட பெண்ணைப் பற்றிய ஒரு கதை. இந்த படம் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமினால் பாதிக்கப்பட்டிருக்கும் தனிநபர்களின் சவால்கள் மற்றும் பலங்களை உணர்வுரீதியான முறையில் படம்பிடித்து, காட்டுகிறது. இதன் மூலம் நியுரோடைவர்சிட்டி, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் உடையாடல்கள், அவர்களை அவர்களாகவே ஏற்றுகொள்ளும் மனோபாவம், அரவணைக்கும் அன்பு என நாம் செய்ய வேண்டியவை குறித்தும் தெளிவான பார்வையை முன்வைக்கிறது.
நியுரோடைவர்சிட்டி குறித்த விழிப்புணர்வு, ஆரம்பகாலத்திலேயே பாதிப்பு குறித்து கண்டறிதல், பராமரிப்பாளர்களின் ஆதரவு, அவர்களுக்கான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பணியிட ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது டாடா பவர் நிறுவனத்தின் ’பே ஆடென்ஷன்’ முன்முயற்சி திட்டம். இவற்றின் மூலம் முன்னெடுக்கப்படும் சமூக சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிறப்பு திரையிடல் அமைந்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட கூட்டு செயல்பாட்டு நிறுவனங்கள், 18,000 தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் இதன் நேர்மறை தாக்கத்தைப் பெற்றிருக்கின்றனர். பாட நிபுணர்கள் மற்றும் MSJE மற்றும் டாடா எல்க்ஸி [Tata Elxsi] நிறுவனத்துடன் இணைந்து E-Sanidhya தளம் மூலமாக இந்த முயற்சி ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. அதிலும், குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை [TPCDT] தனது ’பே ஆடென்ஷன்’ முயற்சியின் ஒரு பகுதியாக “Tanvi The Great”-க்கு அதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு கதைசொல்லல் மூலம் சமூக சொல்லப்படும் கதைகளை மாற்றியமைக்கும், நீடித்த மாற்றத்தை உருவாக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை அடிக்கடிட்டுக் காட்டுகிறது. இந்த கலாச்சார மைல்கல் முயற்சி, நியுரோடைவர்சிட்டியை அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறது. இது அவர்களுக்கான எதிர்காலத்திற்கான வழிகளையும் உருவாக்கும் என்பது நிச்சயம்.
About Tata Power:
Tata Power Company Limited, a leading integrated power company and a part of the Tata Group, India’s largest multinational business conglomerate, owns a diversified portfolio of 15.7 GW. This portfolio spans the entire power value chain, from renewable and conventional energy generation to transmission, distribution, trading, storage solutions, and solar cell and module manufacturing. As a pioneer in India’s clean energy transition, Tata Power has 6.9 GW of clean energy generation, constituting 44% of its total capacity. Committed to achieving carbon neutrality before 2045, Tata Power has successfully partnered with public and private entities across India’s generation, transmission, and distribution sectors, serving approximately 12.8 million customers nationwide.