மாரீசன் திரைவிமர்சனம் ரேட்டிங் 4/5

மாரீசன் திரைவிமர்சனம் ரேட்டிங் 4/5

படம்: மாரீசன்

நடிப்பு: பகத் பாசில், வடிவேலு, கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி எல் தேனப்பன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா

தயாரிப்பு:  சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி  இசை: யுவன் சங்கர் ராஜா  ஒளிப்பதிவு: கலைச்செல்வன் சிவாஜி  இயக்கம்: சுதீஷ் சங்கர்   பிஆர்ஓ: யுவராஜ்

கதை open பண்ணா…!

சின்னச் சின்ன திருட்டுகளில் கில்லாடியான பகத் பாசில் தண்டனை முடிந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். வந்ததுமே  திருட்டு வேலையை ஆரம்பித்து விடுகிறார்…ஒரு பைக்கை திருடி கொண்டு திருட கிளம்புகிறார் . அடுத்து எந்த வீட்டில் திருடலாம் என்று நோட்டம் பிடிப்பவர் , ஒரு வீட்டிற்குள் திருடுவதற்கு நுழைகிறார். அங்கு கைவிலங்குடன் வடிவேலு அதிர்ச்சி தருகிறார். தனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதால் வீட்டிலேயே மகன் கட்டி போட்டு வைத்திருப்பதாக கூறுகிறார்.  என் கைவிலங்கை அவிழ்த்து விட்டால் உனக்கு பணம்  தருகிறேன் என்கிறார் வடிவேலு. பணத்துக்கு ஆசைப்பட்டு கைவிலங்கை அவிழ்த்து விடுகிறார் பகத். ஏடிஎம்மில் சென்று வடிவேலு பணம் எடுக்கும் போது அவரிடம் 25 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருப்பதைக் கண்டு ஷாக்காகும் பகத் மொத்த பணத்தையும் எடுக்க திட்டமிடுகிறார். அதற்காக வடிவேலு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அவரை தன்னுடைய டூ வீலரிலேயே அமர்த்தி அழைத்துச் செல்கிறார்..அப்படி போகிற இடங்களில் எல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு கொலை நடக்க, அந்தக் கொலையை செய்வது வடிவேலு தான் என்பதே ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்கிறார். அப்படியே அவருக்கு ஞாபக மறதி நோய் இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறார்..இதன் பிறகு  பகத் பாசில் என்ன முடிவு எடுக்கிறார் என்பது சஸ்பென்ஸ்…! படத்தின் முதல்பாதி வரை வடிவேலுவின் ஞாபக மறதியும், அவரிடம் இருக்கும் பணத்தை எப்படியாவது ஆட்டையை போட வேண்டும் என்று பகத் பாசில் போடும் திட்டங்களும்  கதை ஜாலியாக செல்கிறது. திடீரென்று  ஒட்டு மொத்த ரசிகர்களையும் இடைவேளயின் போது  அதிர்ச்சியில் நிறுத்துவது எதிர்பாராத திருப்பம்…!வடிவேலுவை தெரிந்து கொள்ள fafa அவரை பின் தொடரும் காட்சிகள் மிரட்டல் ..வடிவேலுவின் பணத்தை fafa ஆட்டையை போட்டாரா ?..மறுபக்கம் வடிவேலு அவர் முயற்சியில் வெற்றி பெற்றாரா…? என்பதை திகில் கலந்து சொல்லி உள்ளார் இயக்குனர் .

வடிவேலுக்கு இந்த படம் இன்னொரு மைல்கல் . . பைக் பயணத்தில் படிப்படியாக பகத் பாசிலின் அன்பைப் பெறும் இடங்கள் ரசனைக்கான இடங்கள். தன் மனைவிக்கே தன்னை யார் என்று தெரியவில்லை என்று கலங்கும் இடத்தில் awesome acting.. .வடிவேலு ஏன் எதற்க்காக இந்த கொலைகளை செய்கிறார் என்பதை flashback கட்சியில் அவர் மனைவி சித்தாரா வோடு வாழும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் நம்மை கட்டி போடுகிறது .!
படம் முழுக்க அந்த திருடன் பாத்திரத்தில்  ரகளை செய்கிறார் பகத். சாதாரணமாக நினைத்த வடிவேலு எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்து வரும் கோபத்தை அடக்கி கொண்டு வடிவேலுவிடம் சகஜமாக பேச முயலுவது fafa ராக்ஸ் …. மொத்த பணத்தையும் ஆட்டை போட நண்பன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டும் இடங்கள் அடுத்து என்ன நடக்க போகுதோ எனும் ஆவலை தூண்டுகிறது . வடிவேலுவின் மனைவியாக சித்தாரா கொஞ்ச நேரமே வந்து போனாலும் மனதில் நின்று போகிறார்.

மாரீசன்  ஒரு crime திரில்லர் movie அதை விறுவிறுப்பாக திடீர் திருப்பங்களுடன் இயக்கி இருக்கிறார்  சுதீஷ் சங்கர்…யுவன் சங்கர் ராஜா இசை காட்சிகளோடு இணைந்திருப்பது nice. ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி கேமரா டிராவல் கதை களத்துக்கு ஏற்ப அவரது ஒளி ஓவியம் அருமை ..

மாரீசன் –  ஒரு கிரைம் திரில்லர் பயணம்.

 

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *