ஹரி ஹர வீரமல்லு திரை விமர்சனம்

ஹரி ஹர வீரமல்லு திரை விமர்சனம்

படம்: ஹரி ஹர வீரமல்லு

நடிப்பு: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், நாசர், சத்யராஜ், ஈஸ்வரிராவ், ரகுபாபு தணிகல பரணி, முரளி சர்மா, சுனில், ஆதித்யா மேனன், பூஜிதா பொன்னாடா, அனுசுயா வனஜா, கபீர் துஹான் சிங், நிஹார் கபூர்

தயாரிப்பு: ஏ எம் ரத்னம்  இசை: எம் எம் கீரவாணி  ஒளிப்பதிவு: ஞான சேகர், மனோஜ் பரமஹம்சா   இயக்கம்: ஜோதி கிருஷ்ணா    பிஆர்ஒ : ரேகா

 

கதை open பண்ணா…!

ஹரி ஹர வீரமல்லு 17 ம் நூற்றாண்டில் நடந்த சரித்திர பின்னணி கதையாக உருவாகி உள்ளது…ஆரம்ப காட்சியில் ஆற்றின் கரையில் ஒரு குழந்தை வருகிறது அதை சத்யராஜ்,ஈஸ்வரி ராவ் எடுத்து வளர்க்கிறார்கள் அந்த குழந்தைக்கு ஹரிஹர வீரமல்லு என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள் வருங்காலத்தில் அந்த குழந்தை ஒரு சாம்ராஜ்யத்தையே தட்டிக் கேட்கும் வீரனாக வளர்கிறது.  1650 ஆம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சிகாலத்தில் நடக்கும் கதை பேரரசர் ஔரங்கசீப் தனது ஆட்சிக் காலத்தில் தன்னை தாழ் பணியாதவர்களை தலை வெட்டி கொல்கிறார்.  தன் மதத்தை தவிர வேறு மதத்தைச் சேர்ந்த அரசர்களை கொல்கிறார். இதை தட்டி கேட்க ஒருவர் வருவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் அந்த ஒருவர் தான் ஹரி ஹர வீர மல்லு.

ஒரு மூட்டை நெல்லுக்கு குண்டர்களுடன் மோதி உயிரை விடும் அப்பாவி மக்கள் காப்பாற்றுகிறார்.  அனாதை பெண் ஆன பஞ்சமியை காப்பாற்றுகிறார் அதன் பிறகு இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டுவர “வீர மல்லு” பவன் கல்யாண் என்கிற வரலாற்று நாயகன் செல்கிறான். இந்த பயணத்தில் அவன் பல சாகசங்களை எதிர்கொண்டு தர்மத்திற்காக அவர் போராடுவதை ஆக்‌ஷன் படமாக சொலகிறது.   அத்துடன் மதிப்புமிக்க கோகினூர் வைரத்தையும் மீட்கும் பொறுப்பை வீரமல்லு  ஏற்கிறான். இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.   மொகலாயா  சாம்ராஜ்யத்தை ஆண்ட அவுரங்க சீப்  நடத்திய கொடுங்கோல் ஆட்சியை விவரிக்கும் படமாக உருவாக்கியிருக் கிறது.

வீரமல்லுவாக பவன்கல்யாண், அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் வியக்க வைக்கும் சன்டை காட்சிகள், டயலாக் டெலிவரி, எமோஷனல் கலந்த நடிப்பை வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.   பேரரசர் ஔரங்கசீப்பாக பாபி தியோல் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார் . அவர் வரும் காட்சிகள் கம்பீரமாக இருக்கிறது எதிரிகளை வாளால் தலையை வெட்டி வீசும் பொழுது மிரட்டி இருக்கிறார்..படத்தின் இசை மற்றும் பின்னணி இசை ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி மூலம் சிறப்பாக அமைத்துள்ளார் , VFX மற்றும் கிராபிக்சில் காட்சிகள் படத்தின் பலம் ஒவ்வொரு காட்சியிலும்VFX  மிரட்டி இருக்கிறது..! இளமை துடிப்புடன் பவன் கல்யாண் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் மிரட்டல் ..!  பஞ்சமியாக நிதி அகர்வால்  கவர்ச்சி,  நாயகி,  அவர் வரும் காட்சிகளில் அழகோவியமாக தெரிகிறார்  தேவதாசிகளுக்கு உதவி செய்ய பவன் கல்யாண் இடமிருந்து  திருடும்போது நடிப்பில் அழகை கொட்டி உள்ளார் ..!

இயக்குனர், ஜோதி கிருஷ்ணா   கடுமையாக உழைத்திருக்கிறார் .ஒவ்வொரு காட்சியிலும் அதன் தரம் தெரிகிறது .ஒரு வெற்றி படத்திற்காக 5 வருடம் கடுமையாக போராடி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள். HATSOFF

இந்திய வரலாற்றின் மறு பக்கத்தை மிக தைரியமாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குனர் மற்றும் என்ற ஆந்திரா  துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும்  படக்குழு மொத்த  டீமுக்கும் பாராட்டுக்கள்..!

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *