ஜென்ம நட்சத்திரம் – திரை விமர்சனம்

படம்: ஜென்ம நட்சத்திரம்
நடிப்பு: தமன் ஆகாஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்திரேயா ராகேஷ் ஷெரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிகாஷாந்த் வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி நக்கலேட்ஸ் நிவேதா, யாசர் தயாரிப்பு: சுபாஷினி கே இசை: சஞ்சய் மாணிக்கம் ஒளிப்பதிவு: கே ஜி இயக்கம்; பி. மணிவர்மன் பிஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்
சினிமாவில் இயக்குனராகும் கனவில் இருக்கும் தமன், அதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். காதல் மனைவி மால்வி மல்ஹோத்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தனது நண்பன் இல்லத்தில் தங்க வைத்து கதை சொல்லப் போகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. கனவில் சில ஆவிகள் வந்து பயமுறுத்திப் போகிறது.அரசியல்வாதி வேல. ராமமூர்த்தியின் கார் டிரைவராக, பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்பட, தான் வேலை பார்க்கும் அரசியல்வாதியிடம் கேட்கிறார். பணம் தர மறுத்து விடும் அந்த அரசியல்வாதி அவரை வார்த்தைகளால் காயப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இதனால் தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் பதுக்கி வைக்கிறார் காளி வெங்கட் .
இது தெரிந்த அரசியல்வாதியின் அடியாட்கள் காளி வெங்கட்டை வெட்டி சாய்க்கிறார்கள். தமன் வீட்டின் முன்பாக விழுந்து உயிருக்கு போராடும் காளி வெங்கட், தமன் அண்ட் கோவிடம், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கிய இடத்தை சொல்லி விட்டு , மொத்த பணத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரூ.40 லட்சத்தை மட்டும் மகள் ஆபரேஷனுக்கு கொடுத்து மகளின் உயிரை காப்பாற்றி விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு உயிரை விடுகிறார்.தமனிடம் நாயகி இந்த விஷயத்தை ஃபோனில் கூறும் போது கிராஸ்டாக்கில் அதை ஒட்டு கேட்கும் கேபிள் டிவி ஆபரேட்டர் முனீஸ்காந்தின் சிஷ்யன் முனீஸ் இடம் சொல்ல அவர்களும் அந்த கோடிகளை கைப்பற்ற பாழடைந்த பங்களாவை நோக்கி செல்கின்றனர் பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் சகிதம் அந்த இடத்திற்கு செல்கிறார். அங்கும் மால்வி தன் கனவில் பார்த்த அதே உருவங்களை பார்க்கிறார். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள். சிலர் கொல்லப்படுகிறார்கள்மிச்சம் மீதி நண்பர்களையாவது தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? இதுவே படத்தின் மீதிக்கதை.
பேய் பங்களாவுக்குள் தமன் மற்றும் நண்பர்கள் நுழைந்த பிறகு ஒவ்வொரு சீனிலும் ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கணக்கில் கொலை சம்பவங்கள் நடக்கிறது. இந்த கொலைகள் எப்படி நடக்கிறது என்பதை சஸ்பென்சாக வைப்பதற்காக சாத்தான் பூஜை, சாத்தான் நாய் என்று வெவ்வேறு காட்சிகள் அமைத்து சஸ்பென்ஸ் மெயின்டன் செய்திருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.
படத்தை சுபாஷினி தயாரித்திருக்கிறார் சஞ்சய் மாணிக்கம் இசை பின்னணி இசை திகில் ஊட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது ஒளிப்பதிவு கே ஜி திகில் படங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவு சிறப்பாக அமைத்துள்ளார் .சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? என்ற கோணத்தில் திரைக்கதை செய்து இருக்கிறார் இயக்குனர் .ஒரு நொடி என்கிற ஒரு அற்புதமான படத்தை கொடுத்தவர் இயக்குனர் மணிவர்மன்
அதேபோல இந்த ஜென்ம நட்சத்திரம் படத்தையும், விறுவிறுப்பாக சீராக இயக்கி, ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் வைத்து அந்த சாத்தானின் குழந்தை யார்? மொத்தத்தில் ஒரு வித்தியாசமான திரில்லர் ஜானர் மூவி ஜென்ம நட்சத்திரம் எல்லாரும் குடும்பத்தோட போய் பயப்படாம படத்தை பார்த்துட்டு வரலாம் …!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.2 /5