கெவி திரைவிமர்சனம்

படம்: கெவி
நடிப்பு: ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லைடா, சார்லஸ் வினோத், விவேக் மோகன், ஜீவா, காயத்ரி, உமர் பரூக், காமன்மேன் கணேஷ், ஜெகத்ராமன், அபிமன்யு மீனா
தயாரிப்பு: மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெய சூர்யா இசை: பாலசுப்பிரமணியன் ஜி, ராஜா ரவிவர்மா ஒளிப்பதிவு: ஜெகன் ஜெய சூர்யா
இயக்கம்: தமிழ் தயாளன் பிஆர்ஓ: ஜான். ஏ
கதை open பண்ணா …!
கொடைக்கானலுக்கு கீழ் சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பகுதிதான் ‘ வெள்ள கெவி’. இங்கு வாழும் பழங்குடியின மக்களை டோலி தூக்க வைத்துதான் வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள் என்று முத்தாய்ப்புடன் ஆரம்பிக்கிறது படம்.
ஆனால் அப்போதிருந்து அந்த கெவி பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வதற்கான வசதிகளும் கற்காலத்திலேயே தான் இருக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தாலும் இவர்கள் பகுதிக்கு சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இன்றுவரை கிடைக்கவில்லை என்பதை கண்ணீரும் ரத்தமுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன்.
ஒரு பக்கம் தேர்தல் வருவதையொட்டி ஆளுங்கட்சி எம்எல்ஏ அந்தப் பகுதிக்கு ஓட்டு கேட்க போலீஸ் சகிதம் வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மலையில் மண் சரிந்து ஐந்து பேர் இறக்கிறார்கள். இப்படி ஐந்து பேர் அடி யோடு புதைந்து உயிரிழந்த மறுநாள் தேர்தலுக்காக போலீஸ் படையுடன் ஓட்டு கேட்டு வந்த எம் எல் ஏ விடம் மலையன் என்கிற ஊர்வாசி உரக்கபேசி நியாயம் கேட்க, அது எம்எல்ஏ உடன் வந்த காவல் அதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தி வாய்த் தகராறு முற்றி போலீஸ் அதிகாரியை மலையன் தள்ளிவிடப் போய் அவர் எம்எல்ஏ மீது சரிந்து எம்எல்ஏவுக்கு அடிபடுகிறது. .இதனால் ஆத்திரமாகும் போலீஸ் அதிகாரி சார்லஸ் வினோத் அவர்களை தட்டிக் கேட்க, அப்போது அவர் மீது எங்கிருந்தோ பறந்து வந்து விழுகிறது, ஒற்றைச் செருப்பு ஒன்று. அந்த கும்பலில் இருந்த மலையன் தான் இதை செய்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரி, பழி வாங்க முடிவெடுக்கிறார். அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் மலையன் சந்தையில் பொருள் வாங்க கீழே போன நேரத்தில் அதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மறுநாள் தேர்தல் என்ற நிலையில் எம்எல்ஏவின் சொல்லையும் மீறி மலையனை போலீஸ்காரர்கள் சகிதம் அடித்து நொறுக்கி கொல்லப் பார்க்கிறார் அதிகாரி..! மலையன் மனைவி மந்தாரை பிரசவ வலியில் துடிக்க, டோலி கட்டி மலைப்பாதையில் கிராமத்து மக்கள் தூக்கி வருகின்றனர். ஆறு மணி நேரம் நடந்தால் மட்டுமே கீழே உள்ள அரசு மருத்துவமனையை அடைய முடியும் என்ற நிலையில் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடிக்கிறார். அதோடு குழந்தையை கொடி சுற்றிக் கொண்டிருப்பதால் பிரசவம் இன்னும் சிக்கலாகிறது.
மனைவி இப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியாமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மலையனை சார்லஸ் வினோத் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து துவைத்து உயிரோடு எரிக்க முடிவு செய்கிறார்கள். மந்தாரைக்கு குழந்தை பிறந்ததா ? மலையன் உயிர் பிழைத்தானா என்பது க்ளைமாக்ஸ்.
மலையனாக ஆதவன் மலைப்பிரதேச மனிதராகவே மாறி யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.குற்றுயிருமாக அடி வாங்கி ரத்த வெள்ளத்தில் கிடக்கும் மலையன் திடீரென சூப்பர் ஹீரோவாக மாறி அத்தனை போலீசை யும் அடித்து துவைப்பது போன்ற காட்சிகளில் ‘சினிமா’ எட்டி பார்க்கிறது ..!
மந்தாரை கேரக்டரில் நாயகி ஷீலா நடிப்பில்நம்மை கலங்க வைக்கிறார் விடுகிறார். குறிப்பாக பனிக்குடம் உடைந்த பிறகு ஏற்படும் அரை மயக்க நிலையை நடிப்பில் அப்படியே…… சொல்ல வார்த்தைகள் இல்லை ..ஷீலா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்,,!
ஒளிப்பதிவு ஜெகன் ஜெயசூர்யா வின் கேமரா அந்த இரவு நேர மலை பயணத்தை தேவையான வெளிச்சத்தை பயன்படுத்தி awesome..!அவரது உதவியாளர்கள் எவ்வளவு சிரம பட்டிருப்பார்கள் அவர்களுக்கும் பாராட்டுக்கள்..!
படத்தில் வரும் நெஞ்சை உருக்கும் பாடல்கள் அந்த மலை மக்களின் வலி மலைவாழ் மக்களின் தீரா சோகத்தை, அரசின் பாரா முகத்தை 75 வருட சுதந்திர இந்தியாவில் சமூக நீதி பேசும் திராவிட கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆண்டாலும் ஓட்டு கேட்க மட்டும் வரும் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்த படம் ‘கெவி’
வெள்ள கெவி போன்ற எந்த தொடர்பும் மேலும் சாலை வசதி இல்லா கிராமங்கள் இருப்பதை, அவர்கள் படும் சிரமங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள் ..!
பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் போன்று ..உண்மைக்கு மிக அருகில் அந்த மலை மக்களின் வலியை சொன்ன கெவி போன்ற நல்ல படைப்புகள் வர வேண்டும் வரவேற்போம் .
கெவி மொத்த டீமுக்கு tamilprimenews சார்பாக பாராட்டுக்கள் ..!