பன் பட்டர் ஜாம் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

படம்: பன் பட்டர் ஜாம்
நடிப்பு: புதுமுகம் ராஜு ஜெயமோகன், விக்ராந்த், ஆதியா, பவ்யா ட்ரிக்கா, சார்லி, மைகேல், சரண்யா, தேவதர்ஷினி, மைக்கேல் டாக்டர் லங்கேஷ், நிஹாரிகா, விஜே பப்பு, பாரதி தயாரிப்பு: சுரேஷ் சுப்பிரமணியம் இசை: நிவாஸ் கே பிரசன்னா ஒளிப்பதிவு: பாபுகுமார் இயக்கம்: ராகவ் மிர்தாத் பிஆர் ஓ: ஜான்சன்
கதை open பண்ணா …!
சரண்யா பொன்வண்ணன் சார்லி இவங்களோட ஒரே பையன் ராஜு ஜெயமோகன் அதே போல தேவதர்ஷினி அவங்க husband இவங்களுக்கு அதியா ஒரே பொண்ணு இந்த ரெண்டு குடும்பமும் ஒரு function ல சந்தித்து கொள்கிறார்கள் ..ரெண்டு குடும்பத்திலும் நடந்த காதல் கல்யாணம் arange marriage இரண்டிலும் டிவோர்ஸ் அதிகமா இருப்பதாக பேசி கொள்கிறார்கள் ..
இரு குடும்பத்துக்கும் ராஜூவுக்கும் ஆதியாவுக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணி அதற்காகக் இருவரும் காதலிக்க இவர்களே ஏற்பாடு செய்கின்றனர் ..அனால் ராஜு பவ்யாவையும் . ஆதியா vj பப்புவையும் காதலிக்கிறார்கள் ..
ராஜு நண்பன் மைக்கேல்க lkg முதல் இருவரும் நண்பர்கள் .. பன் பட்டர் ஜாம் என்கிற சேட்டன் கடையில் நண்பர்கள் மீட்டிங் பாயிண்ட் …
ராஜு முதல் நாளில் கல்லூரியில் சந்திக்கிற பெண் இவனிடம் வகுப்புக்கு செல்ல வழி கேட்க முதல் பார்வையில் காதல் வயப்படுகிறான் ..அதே பெண்ணை டிக் டாக் செலிபிரிட்டி யாக பார்த்து ஒருதலையாக காதலிக்கும் மைக்கேல் நண்பன் ராஜுவிடம் பேசாமல் சண்டை போட்டு சென்று விட ..ராஜு விபரம் தெரியாமல் அலைகிறான் ..!
இதற்கிடையே அம்மா சரண்யா பக்கத்துக்கு வீட் டு பெண்ணை ராஜுவுக்கு கட்டி வைக்க தேவதர்ஷினியோடு சேர்ந்து பிளான் போடுகிறார்கள் ..!
அந்த பொண்ணோ நம்ம விஜே பப்பு வோட காதல் பண்ணிட்டு அலையுது ..ராஜுவும் அவன் காதலியும் இவர்கள் நாலு பேரும் ecr இல் ஒரு ரிசார்ட் இல் ஏடாகூடமாக மாட்டி கொள்ள சுவையான கலாட்டா இடைவேளை ..!
ஒரு கிளை கதை விக்ராந்த் சீனியர் கல்லூரி மாணவர் ராஜுவுக்கு god father போல அட்வைஸ் மழை வழங்க..விக்ராந்த் 23 அரியர் ஒரே டேக் இல் பாஸ் பண்ண அவர் காதலித்த பெண் அதே கல்லூரியில் விக்ராந்த் க்காக பேராசிரியராக பணி செய்வது காதலுக்கு மரியாதையை கொடுக்கிறது ..அதுவும் ராஜுவுக்கு பாடமாக மாறுகிறது
ராஜுவும் ஆதியாவும் நல்ல நண்பர்களாக மாற.. ராஜுவின் beastie ஆதிரா அதே வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பப்பு காதலை அப்பாவிடம் சொல்ல பயப்படுற தைரியசாலி ..!இங்கோ ராஜு காதலியின் மனதை புரிந்து கொள்ளாத தத்தியாக வலம் வருகிறார் .அந்த சூழலில் மைக்கேல் தன காதலை சொல்ல இரு காதலும் தடுமாற தடம் மாறுவது தான் பன் பட்டர் ஜாம் படத்தின் மீதி கதை …!
biggboss வெற்றிக்கு பின் ராஜு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் ராஜு நடிப்புக்கு அவர் காமெடி சென்ஸ் க்கு தீனி போட்ட படம் என்று சொல்லலாம் ..ராஜு ஜெயமோகன் ஆக்ட்டிங் ..hatsoff ..!
அப்பா பிள்ளை சார்லி ராஜு பேசும் இடங்கள் அருமை …இந்த படம் ராஜு க்கென்றே அளவெடுத்து தைத்தது போல திரைக்கதை..அதிலும் பப்பு வரும் அறிமுக காட்சியை ரசித்து பார்க்கலாம் இன்டெர்வல் பிளாக் superb .!
இயக்குனர் ராகவ் மிர்தாத் and பன் பட்டர் ஜாம் மொத்த டீமுக்கு பாராட்டுக்கள் ..இந்த வாரம் வந்த படங்களில் பன் பட்டர் ஜாம் முதலிடத்தை பிடிக்கிறது.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.8/5