ZEE5 இன் தமிழ் ஓரிஜினல் சீரிஸ், “சட்டமும் நீதியும்” வெப் விமர்சனம்

ZEE5 இன் தமிழ் ஓரிஜினல் சீரிஸ், “சட்டமும் நீதியும்” வெப் விமர்சனம்

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், “சட்டமும் நீதியும்”

இந்த சீரீஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV சண்முகம்,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார்.   “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா, பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

கதை open பண்ணா …

கதையின் நாயகன் சரவணன்.   நீதிமன்ற வளாகத்துக்குள் சுற்று சுவர் ஓரமாக  மேசை நாற்காலி போட்டுக்கொண்டு நோட்டரி பப்ளிக்காக இருந்து வருகிறார்  நீதிமன்றத்துக்குள் வழக்காடும் வழக்கறிஞர் எவரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை என்றாலும் அவர்கள் எல்லோரையும் விட வழக்கு விவரங்கள் அதிகம் அறிந்தவராக இருக்கிறார் …அதைப் புரிந்து கொண்ட பயிற்சி வழக்கறிஞர் நம்ரிதா அவர் சிபாரிசில் ஒரு சில மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற முயற்சி செய்து..சரவணன் சிபாரிசு செய்வதாலேயே ஒவ்வொரு முறையும் தோற்கிறார்.

ஒருநாள் நீதிமன்ற வளாகத்துக்குள்  காவல்துறையிடம் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்துவிட்டு   மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற வாசலில் குப்புசாமி, தீக்குளித்து இறந்து போகிறார்.

நோட்டரி வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி  வீட்டில் மகனே இவரை பார்த்து தோற்று போனவர் என்று மதிக்காமல் பேசிவிட ஒரு கேசில் ஜெயித்து விட வேண்டும் என்று அவர் எடுக்கும் முதல் கேஸ்  தீ குளித்து இறந்த குப்புசாமியின் இறப்புக்கு பின் உள்ள காரணம் என்ன என அறிய இந்த பொதுநல வழக்காக எடுத்து நடத்துகிறார்.அதற்கு நம்ரிதாவையும் தன்னுடைய உதவியாளராகவே இணைத்துக் கொள்கிறார்.கிழிந்து போன வக்கீல் கோட்டை தைத்து எடுத்து மாட்டி கொண்டு கம்பீரமாக கோர்ட் வருகிறார், அங்கு இருந்து கதை சூடு பிடித்து பரபரவென வாத பிரதிவாதங்கள் investigation நிறைய திருப்பங்கள் கொண்டு கதை நகர்கிறது …அரசு வக்கீல் எளிதாக சமாளிக்க நினைத்த வழக்கை ஆள் கொணர்வு மனுவாக விசாரணைக்கு எடுத்து கொள்கிறது நீதிமன்றம் ..

அடுத்த விசாரணையின் போது புகழ் பெற்ற அரசு வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார் ..முதல் ஹியரிங்கிலேயே வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி நீதிமன்றத்தில் மூர்ச்சையாகி விழ அது மேலும் அவரை அவமானப்படுத்துவதாக அமைகிறது. அத்துடன் அந்த வழக்கும் பல வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாக போலீஸ் ஆவணங்கள் சொல்ல, அதிலிருந்து வெளியேற நினைக்கிறார்..அரசு தரப்பு..ஆள் கொணர்வு என்பதால் வெண்ணிலாவை ஆஜர் படுத்துகின்றனர்..அதாவது அரசு தரப்பு வழக்கறிஞர் பொய் சாட்சி ஒன்றைக் கொண்டு வந்து வழக்கை திசை திருப்ப முயல…வக்கீல் சரவணன் அது உண்மையல்ல என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசு தரப்பு வக்கீலுக்கு தலை குனிவு ஏற்படுகிறது ..

வழக்கில் இருந்து விலகி கொள்ள சரவணனுக்கு பல மிரட்டல்கள் வருகின்றன …!ஜூனியர் வக்கீல் அம்ரிதா  சரியான துப்பறியும் வேலைகள் செய்து சரவணனுக்கு துணையாக நிற்கும்போது பொருத்தமான ஜூனியர் என நம்ப வைக்கிறார்..வெண்ணிலா எங்கே என்ன ஆனாள்  என்ற பரபரப்பான இன்வெஸ்டிகேஷன் கதைக்கு விறுவிறுப்பாக அதாவது களம் அமைந்து விட ,கதையில் flashback ட்விஸ்ட் இருப்பதால்  வெண்ணிலாவின் உண்மையான முகம் தெரியும் பொழுது பரிதாபம் ஏற்படுகிறது. .அதோடு ஒரு காட்சியில் விசாரணை செய்ய சென்ற இடத்தில் விபச்சார கைதுக்கு உள்ளாக படுகிறார்.. அப்போ சரவணன் flashback காட்சி கவனமாக கவனித்தவர்களுக்கு இந்த காட்சியில் பதில் வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி செல்வராஜ் Hatsoff..!

வக்கீல் சரவணன் அழகான அமைதியான sattilana நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நம்ரிதா அழகு பதுமை போலவே சுறுசுறுப்பும் அதிகம்.. ஒரு பெண் வக்கீலின் வேகம் கொடுத்த கதா பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்..!

Zee 5 மற்றும் சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் மொத்த குழுவிற்கும் பராட்டுக்கள்..

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.9/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *