மிசஸ் மற்றும் மிஸ்டர் (Mrs and Mr) திரைவிமர்சனம்

படம்: மிசஸ் & மிஸ்டர் (Mrs and Mr)
நடிப்பு: வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகிலா, ஶ்ரீமன், அனுமோகன், ஆர்த்தி, கணேஷ், கும்தாஜ், பாத்திமா பாபு, செஃப் தாமு, கிரண், ரவிகாந்த்
தயாரிப்பு: ஜோவிகா விஜயகுமார் இசை: ஶ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு: டி ஜி கபில் இயக்கம்: வனிதா விஜயகுமார் பிஆர் ஓ: நிகில் முருகன்
கதை ஓபன் பண்ணா …!
ஷகீலா வின் 3 மகள்களில் ஒருத்தி வனிதா அவர் துபையில் செஃப் ராபர்ட் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார் ..வயசு இருக்கும் பொது குழந்தை வேண்டாம் என்று எளிதாக முடிவெடுக்கும் இவர்கள் 40 வயதில் குழந்தை வேணும் என்கிற எண்ணம் வரும்போது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது . இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். ஆரம்பத்தில் வனிதாவும் ஏறக்குறைய அந்த முடிவில் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என்றால் வாழ்வதே வேஸ்ட் என்று தோழிகள் சிலர் வனிதாவை தூண்டி விட, இதனால் 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் வனிதா. இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் நேரத்தில் வயிற்றில் கரு தங்குகிறது. அதை கணவரிடம் சொல்ல முடியாத சூழலில் கோபித்துக்கொண்டு வனிதா பிரிந்து செல்கிறார். பாங்காக்கில் இருந்து தன் சொந்த ஊரான சித்தூர் வந்து விடுகிறார். வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? குழந்தை விஷயத்தை ராபர்ட் எப்படி எடுத்துக் கொண்டார் என்பது படத்தின் மீதிக்கதை…!
இளம் வயதிலேயே தயாரிப்பாளராக அம்மாவை, வைத்து படம் எடுத்து ஒரு வித்தியாசமான கதையை கொடுத்து இருக்கிறார் ஜோவிகா விஜயகுமார்,
அவர் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் மேலும் தொடர்ந்து படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்
ராஜபாண்டியன் ஒலிப்பதிவு பாங்காங் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும், அழகியல் வண்ணம் தெரிகிறது, வனிதா விஜயகுமார் வீடு, மற்றும் ஆர்த்தியின் ஜிம், என எல்லா இடங்களிலும் கேமரா புகுந்து கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது .
பாடல் காட்சியில் சுப ராத்திரி பாடலுக்கு ஒளிப்பதிவாளர் இளைஞர்களை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதமாக இருக்கிறது .
பவர் ஸ்டார் வரும் காட்சிகள் எல்லாம் கண்ணா லட்டு திங்க ஆசையா என்று வாய்ஸ் ஓசை போட்டு கலகலப்பை ஏற்படுத்துகிறார். இசையை தன் பங்குக்கு கொடுத்து இளைஞர்களை சூடேற்றி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
பாலகுருவின், படத்தொகுப்பு இரண்டு மணி நேரம் 21 நிமிடம் கச்சிதமாக இருக்கிறது படம் விறுவிறுப்பாகவும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் செல்வதால் நேரம் போவதே தெரியவில்லை என்று இளைஞர்கள் கைதட்டி வரவேற்கிறார்கள்.
ராபர்ட் மாஸ்டர் தான் இந்த படத்துக்கு நடனம் அமைத்திருக்கிறார் அவரும் துள்ளலான நடனத்தை கொடுத்து ரசிக்க வைத்ததோடு சுபராத்திரி, பாடலுக்கு செம மூடு ஏற்றி ரசிகர்களை உற்சாக மூடுக்கு கொண்டு போகிறார்.. வனிதாவுடன் பாடும் அந்த பாடல் காட்சிகளிலும், நடனம் ரசிக்க வைக்கிறது.
படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணி புரிந்தவர் அருமையான செட் வேலைப்பாடு .மற்றும் மேக்கப் மேன் கொஞ்சம் எல்லோருக்கும் அதிகமான மேக்கப் என்றாலும் கவர்ச்சியான வேடத்தில் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு நல்ல மேக்கப் கொடுத்திருக்கிறார் .
மொத்தத்தில் தாய்மையின் சிறப்பை சொல்லும் இந்த திரைப்படம் பெண்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் குழந்தை பெற்று அதை வளர்த்து பெரியவர்களாக சமுதாய பொறுப்பு உள்ளவர்களாக ஆக்க வேண்டும் என்ற கருத்தையும் ,கணவன், மனைவி ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பேசினால் அவர்களுக்குள் எந்த ஈகோ பிரிவும் வராது என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறது.
ஜோவிகா விஜயகுமார் ,இந்த சின்ன வயதில் ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் அதேபோல நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் பல படங்களில் நடித்த அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார் வருங்காலத்திலும் இது போன்ற சிறந்த படங்களை கொடுப்பார் என நம்பலாம்…!
Mrs&Mr கவர்ச்சி காவியம்
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 2.6/5