ஓஹோ எந்தன் பேபி திரைவிமர்சனம் Rating 3.5/5

ஓஹோ எந்தன் பேபி திரைவிமர்சனம் Rating 3.5/5

படம்: ஓஹோ எந்தன் பேபி

நடிப்பு: ருத்ரா (அறிமுகம்), விஷ்ணு விஷால், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, மிதிலா பால்கர், கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், கஸ்தூரி, விஜய் சாரதி நிர்மல் பிள்ளை

தயாரிப்பு: விஷ்ணு விஷால், ராகுல், கே வி துரை  இசை: ஜென் மார்டின்  ஒளிப்பதிவு: ஹரிஸ் கல்யாண்  இயக்கம்: கிருஷ்ணகுமார் ராம்குமார்   பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்

.

கதை open பண்ணா …!

இந்த படத்தில் விஷ்ணு விஷால் தம்பி ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்..ருத்ரா என்கிற நாயகன் (அஸ்வின்)..சின்ன வயதில்  அப்பா, அம்மா சண்டை போடுவதால் மனம் உடைந்து போகிறார் நாயகன் அஸ்வின், தன் சித்தப்பா முரளியிடம் என்னை சினிமா தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு போ என்கிறார்.. ஏனென்றால் அவர் கருணாகரன் சினிமா தியேட்டரில் மேனேஜராக இருக்கிறார் .

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்க வருகிறார். அவரிடம் கதை சொல்லும் போது, “காதல் கதை இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்க விஷ்ணு விஷால் கேட்ட 2 கதையும் அவருக்கு பிடிக்காமல் நல்ல  காதல் கதை இருந்தால் சொல்லுங்க என சொல்ல அஸ்வின் தன்னுடைய வாழ்வில் நடந்த காதல் கதையை சொல்ல ஆரம்பிக்க …!

ஜோதிட பைத்தியமான தனது தந்தை விஜய் சாரதியிடம் திட்டு வாங்கி கட்டிக் கொண்டு சராசரி பையனாக கோபப்படுவதும், பின்னர்  எதிர் வீட்டுக்கு குடி வரும் சக பள்ளி. மாணவியிடம் ஜொள்ளுவிட்டு வழிவதும் ரவீனா இரவு மொட்டை மாடிக்கு வரச் சொல்கிறார் முத்தமிட சொல்கிறார் .ரவீனா தன்னை காதலிக்கிறார் இன்று ருத்ரா நினைக்கிறார்  ஆனால் ரவீணா கிறிஸ்டோபர் என்கிற காதலனை காதலிக்கும் உண்மை தெரிய வர இதனால் உடைந்து போகிறார் .

.. அஸ்வின் அவரிடம் பிரேக் அப்  ஆனவுடன்.அடுத்தபடியாக தன் நண்பன் ராஸ்ணா , அஞ்சலி, இருவரும் காதலிக்க அந்த பங்க்ஷனுக்கு  அழகாக திட்டமிட்டு கொடுத்த அஸ்வின் மீது அங்கு வந்த மீரா பார்த்தவுடன் காதல் கொள்கிறார் இருவரும் காதலிக்கிறார்கள்  அதன் பிறகு மீரா தன் காதலன் அஸ்வின் இடம் இருக்கும் திறமையை கண்டறிந்து அவரை படம் இயக்குவதற்கு ஊக்கம் செய்கிறார் ..மீரா வுடன் காதல் மலர்ந்து லிப் டு.லிப் கிஸ் வரை மன்மத இளவட்டங்களை வாய் மூடாமல் கண் இமைக்காமல் அந்த காட்சியை பார்க்க வைக்கிறார் இயக்குனர்  ( அதுவும் 3 முறை.).!

கஸ்தூரிநாயகனின் அம்மாவாக வங்கி ஊழியராக கணவரின் கோபத்தை தாங்கிக் கொள்ளும் சராசரி குடும்பப் பெண்மணியாக நடித்திருக்கிறார். அவருடைய ரியல் கதாபாத்திரத்தை இந்த ரியல் கதாபாத்திரத்திற்கும் கொஞ்சம் பொருத்தம் இல்லை என்றாலும் நடிப்பு சிறப்பு…!நாயகனின் சித்தப்பாவாகமுரளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன் படம் முழுக்க நாயகனுக்கு துணையாக நின்று ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்து இருக்கிறார் ..

கதையில் காதலன் காதலி அவர்களுக்குள் ஒரு மோதல்காரணம் அஸ்வின் சுயநலமாக தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் எண்ணம் மீராவுக்கு கோபம் வர இருவரும் பிரிந்து செல்கிறார்கள் . மீரா என்ற கதாபாத்திரத்தில் தன் மாமாவின் கொடுமையால், வயலன்ஸ் பிடிக்காது என்ற கதாபாத்திரத்தில் அழகான தேவதையாக அம்சமாக படம் முழுக்க வந்து காதல், கொஞ்சம் கவர்ச்சி, அதோட எமோஷனல் என கலந்து கட்டி நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். தன் காதலன் தன்னிடம் கோபம் காட்டும்போதெல்லாம் அவருடைய மாமாவை நினைத்து ஒப்பிட்டு பார்க்கும் அந்த கம்பேரிசன், தன் காதலன் தனக்கு சப்போர்ட் செய்ய மாட்டார் என்று அவர் துடிக்கும் துடிப்பு, மணி ப்பால் “சென்ற பிறகு அவருடைய நடிப்பு எல்லாமே சூப்பராக இருக்கிறது…!

.கதை சொல்லி வந்த அஸ்வின் இந்த பிரிவுக்கு அப்புறம் கதை நகராமல் நிற்க,..அதை பார்த்த விஷ்ணுவிஷால் எப்படியாவது இந்த காதலர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் துடிப்பது தன் மேனேஜர் இடம் தான் ஏன் அந்த காதலர் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லும் காரணம் awesome …! முதல் பாதி நன்றாக இருக்கிறது இரண்டாம் பாதியில் என்ன செய்யப் போகிறாய்? உன் காதல் நிறைவேறுமா ஆகாதா? என்று அஸ்வினிடம்  கேட்கிறார் .. அதற்கு பின் என்ன நடந்தது ,அஸ்வின், மீரா, காதல் கைகூடியதா? விஷ்ணு விஷால் அஸ்வினுக்கு பட வாய்ப்பு கொடுத்தாரா?அது கல்குவாரியில் நடக்கும் சுவையான கிளைமாக்ஸ் .

ஹரிஷ் கல்யாண் ஒளிப்பதிவு,  ஜென் மார்ட்டின் இசை படத்துக்கு கை கொடுத்திருக்கிறது…இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் காட்சிகளில் அனுபவித்து காதல் ரசம் சொட்ட அவர்  “ஓஹோஎன இந்த பேபி யை படைத்துள்ளார் ..!

ஓஹோ எந்தன் பேபி — 2கே கிட்ஸ் அட்ராசிட்டி காதல்

நம்ம tamilprimenews.com Rating 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *