மாயக்கூத்து திரைவிமர்சனம் .Rating 3.2/5

படம்: மாயக்கூத்து
நடிப்பு: நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு.ராமசாமி, டாக்டர் எஸ்.கே.காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமணன், தினேஷ் செல்லையா, மிருதுலா, பிரகதீஸ்வரன், டி.ஆண்டனி ஜானகி, முருகன், கே கோபால், வீரமுத்து
தயாரிப்பு: ராகுல் தேவா, பிரசாத் ராமசந்திரன் இசை: அஞ்சனா ராஜகோபாலன் ஒளிப்பதிவு:சுந்தர் ராம் கிருஷ்ணன் இயக்கம்: ராகவேந்திரா பிஆர்ஓ: ரேகா
கதை ..open பண்ணா ..!
சிற்ப கூடத்தில் மு.ராமசாமி, எழுத்தாளர் நாகராஜன் கண்ணன் உரையாடலுடன் படம் தொடங்குகிறது. “நான் எழுதும் பாத்திரங்களுக்கு நான்தான் கடவுள். அவைகளின் தலைவிதியை நான் தான் தீர்மானிப்பேன்” என்று சொல்லி எழுத்தாளர் நாகராஜன் கண்ணன் ஆணவமாக கூறுகிறார். நாமும் ஆர்வமாக பார்க்க ஆரம்பிக்க ..எழுத்தாளர் அவர் கதைக்குள் நடக்கும் கதை ..!
டெல்லி கணேஷ் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவரது பத்திரிக்கைக்கு நாகராஜன் கண்ணன் ஒரு தொடர்கதை எழுதி வருகிறார். அந்த கதையில் மூன்று விதமான கதாபாத்திரங்களை படைக்கிறார் எழுத்தாளர் நாகராஜன் கண்ணன். முதல் கதாபாத்திரம் கல்விக்கட்டணம் கட்டமுடியாத ஒரு ஏழை மாணவி மிருதுளா மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். இரண்டாவது கதாபாத்திரம் வீட்டு வேலைக்காரியாக வரும் ஐஸ்வரியா ரகுபதி எஜமானியிடம் திருட்டுப்பட்டம் வாங்குகிறார். மூன்றாவது கதாபாத்திரம் ஒரு பிரபலமானவரை கொலை செய்து அதன்முலம் கிடைக்கும் மிகப் பெரிய தொகைக்காக வேலை செய்துவரும் ரவுடி சாய் தீனா. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் தனது வக்கிரபுத்தியோடு சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் கதாபாத்திரங்களாக படைக்கிறார்.
இதனால் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் சில துன்பங்களை அனுபவிக்கின்றன. ஆத்திரமடைந்த அந்த கதாபாத்திரங்கள் அவர்முன் தோன்றி எழுத்தாளர் நாகராஜன் கண்ணனை எல்லா பாத்திரங்களும் சேர்ந்து கொல்ல துரத்துகின்றன. அவரது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நேரில் வந்து நியாயம் கேட்டு கொல்வதற்காக துரத்துகிறது நிம்மதி இழந்து உயிருக்கு பயந்து ஓடுகிறார் ..எங்கு சென்றாலும் ஏதோ ஒரு கதாபாத்திரம் இவரை கொலை செய்ய துடிக்கிறது … இப்படியே வித்தியாசமான நகர்வுடன் கதை செல்கிறது. அதிலிருந்து தப்பிக்க எழுத்தாளர் என்ன செய்தார்? என்பதுதான் இப்படத்தின் கதை.
படத்தில் ஓன்று இரண்டு பேரை தவிர அனைவரும் புதுமுகங்கள் ..அந்த தைரியத்துக்காக இயக்குனரை பாராட்டலாம் . இப்படத்தின் கதாநாயகன் நாகராஜன் கண்ண்ன் என்பதைவிட, எழுதிய வசனங்கள் கூர்மையானவை . அஞ்சனா ராஜகோபாலனின் இசையும் நாகராஜன் மற்றும் கபிர் வாசுகியின் பாடல் வரிகளும் படத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன. நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் .. படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் வெளியே வந்து மிரட்டுவது ,பேசுவது மீண்டும் கதைக்குள்ளே செல்வது என மிகவும் அருமையாக படத்தை தொகுத்து வழங்கி உள்ளார் ..சிறு சிறு குறைகள் இருந்தாலும் இயக்குனர் ராகவேந்திரா முயற்ச்சி பாராட்டுக்குரியது
மாயக்கூத்து புதுமையான படைப்புக்கு வரவேற்பு கொடுத்தே ஆக வேண்டும் ..படக்குழு அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.2/5