ஃபிரீடம் திரைவிமர்சனம்

படம்: Freedom திரைவிமர்சனம்
நடிப்பு: சசிகுமார், லிஜோ மோல், சுதேவ் நாயர், மு ராமசாமி, மணிகண்டன், மேஷ் கண்ணா, மாளவிகா, விஜய் சத்யா, கம்பட்டி மணிகண்டன்
தயாரிப்பு: பாண்டியன் பரசுராமன் இசை: ஜிப்ரான ஒளிப்பதிவு: என் எஸ் உதயகுமார் இயக்கம்: சத்ய சிவா பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா
ஃபிரீடம் கதை open பண்ணா …!
1991 இலங்கையில் போர் நிறைந்த காலகட்டத்தில் அங்கிருந்து அகதிகளாக பலர் ராமேஸ்வரம் வந்து அகதி முகாமில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.நம்ம ஹீரோ சசிகுமார் இலங்கை அகதியாக கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகிறார். அவர் வருவதற்கு முன்பாகவே கர்ப்பிணியாக இருக்கும் மனைவி லியோ மோல் ஜோஸ் அகதியாக ராமேஸ்வரம் முகாமில் இருக்கிறார்.இருவரும் சந்தித்து சந்தோஷமாக வர போகும் குழந்தைக்காக வாழ ஆரம்பிகின்றனர்
இரு நாட்கள் கழித்து ஶ்ரீபெரம்புத்தூரில் முன்னாள் பாரதப் பிரதமர் இலங்கைப் போராளிகள் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்கிறார்கள். இந்த படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்க ராமேஸ்வரம் அகதிகள் முகாமிலிருக்கும் சசிகுமார், மு. ராமசாமி, மணிகண்டன் உள்பட பல பேர்களை விசாரணை கைதியாக சிறைபிடித்து வேலூர் கோட்டையில் அடைத்து விசாரணை என்ற பெயரில் அடித்து உதைத்து கொடுமை செய்கிறார்கள். விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாக அழைத்துச் சென்ற இலங்கை அகதிகளை 4 ஆண்டுகளாகியும் அனுப்பாமல் வேலூர் கோட்டைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள். போராட்டம் நடத்தியும் சட்டரீதியாகவும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. . அரசும் அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க ஜெயிலில் இருந்து தப்பிப்பது தான் ஒரே வழி என்று முடிவெடுக்கின்றனர்..
ஜெயிலுக்கு அடியில் சுரங்கம் வெட்டி தப்பிக்கும் போது சிலர் மாட்டிக் கொள்கின்றனர். சில தப்பித்து விடுகின்றனர். இது 1995 ம் ஆண்டு நடந்த கதை யின் தழுவல்..
சசிகுமார் உள்ளிட்ட விசாரணை கைதிகள் வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்படும் காட்சிகள் தொடங்கி கிளைமாக்ஸ் வரை சிறைக்காட்சிகளே படத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.. சிறைக்குள் இவர்கள் எப்படி சுரங்கம். தோண்டுவார்கள், சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் மண் குவியலை எங்கு கொட்டுவார்கள் என்ற பல்வேறு கேள்விகளுக்கு நியாயமான பதில்களை ஒவ்வொரு காட்சியும் சொல்கிறது.
மாளவிகா ஈழத் தமிழர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக வந்த பிறகு கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது…சசிகுமார் மனைவியாக நடித்திருக்கும் லிஜோ மோல் எதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். சசிகுமாரும் லிஜோவும் ஈழத் தமிழர்கள் பேசும் அதே வழக்கில் பேசுவதெல்லாம் காட்சிக்கு பலமாக நிற்கிறது. கதாபத்திரங்களை மனதுக்கு நெருக்கமாக கொண்டு சென்று நிறுத்துகிறது.பாய்ஸ் மணிகண்டன் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம்பிடிக்க முயன்றிருக்கிறார் .. இனி தமிழக திரையுலகில் மிரட்டல் வில்லனாக வரும் வாய்ப்பு சுதேவ் நாயருக்கு அதிகம் உள்ளது
.படத்தில் தொடக்க காட்சியில் முன்னாள் பிரதமர் ஒரு அமைப்பைச் சேர்ந்த பெண் வெடிகுண்டு தற்கொலை படையாக மாறி குண்டை வெடிக்கச் செய்து படுகொலை செய்வது ஒரு நொடியில் அனல் பிழம்பை கக்கி அதிர விடுகிறது.
பாண்டியன் பரமசிவம் படத்தை தயாரித்திருக்கிறார் .. ஜிப்ரான் இசையும் பாடலும் பலம். ஒளிப்பதிவாளர் என். எஸ். உதயகுமார் தனது கேமரா கண்களால் ஈழத் தமிழர்கள் பட்ட சித்திரவதை, போலீசிடம் வாங்கிய பிரம்படியை கண் முன் நடக்கும் நிகழ்வு போல் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சத்ய சிவா ..!
ஃப்ரீடம் படம் தாமதிக்க பட்ட நீதி அது அநீதி.. என்பதை வேலூரில் இந்த ஈழத்து அகதிகளுக்கு நடந்த சித்திரவதை அவர்கள் தப்பி செல்வதை கூட ஞாய படுத்துகிறது..!
Hatsoff சத்யசிவா
நம்ம tamilprimenews. com ரேட்டிங் 3.4/5