பீனிக்ஸ் திரைவிமர்சனம். ரேட்டிங் 3,4/5

படம்: பீனிக்ஸ்
நடிப்பு: சூர்யா சேதுபதி, வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, அபிநட்சத்திரா, விக்னேஷ், வர்ஷா, முத்துக்குமார் தயாரிப்பு: ராஜலட்சுமி அனல் அரசு இசை: சாம் சி எஸ் ஒளிப்பதிவு : ஆர் வேல்ராஜ் இயக்கம்: அனல் அரசு பி ஆர் ஓ: ரியாஸ் கே அகமத், பாரஸ் ரியாஸ்
கதை open பண்ணா ..!
முகத்தில் கோணியை கட்டி ஒரு கண் மட்டும் தெரியும் வகையில் சூர்யா சேதுபதியை போலீசார் அழைத்து வரும் அந்த முதல் காட்சிலேயே ..இந்த படம் ஒரு ஆக்ஷன் அனலை கக்கப்போகிறது என நாம் தயாராகி விடலாம் ..!.வடசென்னையில் வாழும் கர்ணா,சூர்யா பாசமான அண்ணன் தம்பி கர்ணனை காதலிக்கும், கலை, இவர்கள் வாழ்க்கையில் வில்லனாக வருகிறார் எம் எல் ஏ கரிகாலன், அந்த ஏரியாவில் நடக்கும் குத்து சன்டை போட்டியில்,தன் மகன் தான் வெற்றி பெற வேண்டும் என்று சுய நலனுக்காக பேரம் பேச ,அதை ஏற்று கொள்ளாது போட்டியில் திறமை வாய்ந்த கர்ணன் வெற்றி பெற கரிகாலன் மகன் குற்றுயிராக, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வர எம் எல் ஏ மனைவி வரலக்ஷ்மி தன் மகனை அடிது போட்ட கரணாவை கொலை செய்ய ஆட்களை அனுப்ப ..
அண்ணனை கொலை செய்து தூக்கில் போட்ட MLA வை,சாவு வீட்டு வாசலில் கர்ணன் தம்பி 17 வயதான சூர்யா சேதுபதி சரமாரியாக நடுரோட்டில் வெட்டி வீசியதால் சிறுவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். சிறையில் அவரை கொல்வதற்கு கூட்டம் கூட்டமாக கூலிப்படையும, ஆயுதங்களுடன் வருகிறது. அவர்களை தனி ஆளாக நின்று சூர்யா சேதுபதி அடித்து துவம்சம் செய்கிறார். ஆனாலும் கொலை முயற்சி தொடர்கிறது. வடக்கில் இருந்து இந்திய அளவில் பெரிய ரவுடிகள் சூர்யா சேதுபதியை கொல்வதற்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து சூர்யாவால் தப்பிக்க முடிந்ததா? சூர்யாவை சிறையில் தீர்த்துக் கட்ட நினைத்த எம் எல் ஏ கும்பலை சூர்யா என்ன செய்தார் என்பதை செம பாஸ்ட் டாக, விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்,,!
நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகனை திரையில் எப்படி அறிமுகப்படுத்தப்படுவார்களோ அது போலவே சூர்யா விஜய்சேதுபதியையும் இயக்குநர் அனல் அரசு திரையில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு தகுதியானவராகத்தான் சூர்யா விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். அவருக்கு வசனங்கள் படத்தில் மிக் மிக குறைவு தான். ஆனால் தன் கதாபாத்திரத்தை உடல்மொழியால் திரையில் உரையாடுகிறார். அவ்வளவு நேர்த்தியான நடிப்பை கொட்டி நடித்துள்ளார் சூர்யா விஜய் சேதுபதி. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை செம ஆக்சன் காட்சிகளில் அசத்தலாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் அனல் அரசு ..!
வில்லியின் வேடத்துக்கு துல்லியமாக பொருந்தி நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தில் 2 ஆண் பிள்ளைகளின் தாய் பாசத்தை கொட்டி நடித்திருக்கும் தேவதர்ஷிணியை வெகுவாக பாராட்டலாம் ..!பின்னணி இசை இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஒரு ஆக்ஷன் படத்தை அதிரடி ஆக்ரோஷமான படமாக மாற்றி நகர்த்தி செல்கிறார்.
இயக்குனர் அனல் அரசு மற்றும் அவரது டீம் அனைவருக்கும் பாராட்டுக்கள் ..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3,4/5