“பறந்து போ” திரைவிமர்சனம்

படம்: பறந்து போ
நடிப்பு: சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ராயன், விஜய் யேசுதாஸ், அஜு வர்கிஷ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி தயாரிப்பு: ராம், வி.குணசேகரன்
இசை: சந்தோஷ் தயாநிதி பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: ஏகாம்பரம் இயக்கம்: ராம் பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
கதை open பண்ணா ..!
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிவா சிறு வியாபாரம் செய்து தனது மகனை பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார்.எப்படியாவது ஒரு மளிகை கடை வைத்து தான் ஒரு தொழிலதிபர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார். சிவாவின் காதல் மனைவி கிரேஸ் ஆண்டனி தன்னுடைய பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு மதம் மாறிவிட்டதால் தன்னுடைய பிறந்த வீட்டு நட்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டவர். புடவை வியாபாரம் செய்து ஒரு பக்கம் சம்பாதிக்கிறார். தன்னுடைய கணவர், தன் பையன் என்று தன் குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார்.
இவர்களின் மகன் அன்பு வீட்டுக்குள்ளேயே இருந்து படுசுட்டியாக வளர்கிறான். அப்பா அம்மா இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் பல நாட்கள் தனிமையில் அன்பு நேரத்தை கழிக்க வேண்டியிருக்கிறது. சிவா பகல் நேரத்தில் தான் வீடு வீடாக சென்று மளிகைப் பொருட்களை கொடுக்க வேண்டிய இருப்பதால், தன்னுடைய ஒரே மகனை வீட்டின் உள்ளே வைத்துவிட்டு வெளியில் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு செல்கிறார் . ஒரு சூழலில் அம்மா கிரேஸ் கோவையில் நடக்கும் ஒரு கண்காட்சியில் புடவை கடை போட்டு வியாபாரம் செய்ய போய் விட அன்பு கூட அப்பா மட்டும். இதில் அவன் மன வேதனை அடைகிறான். தன்னை தனது தந்தை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அவனது உணர்வை புரிந்து கொண்டு பைக்கில் கிளம்ப போகும் வழியில் இஎம்ஐ கட்ட சொல்லி வங்கி ஆள் துரத்த பயணம் ஆரம்பமாகிறது ..நீண்ட தூரம் ரோட் ட்ரிப் அவர்கள் போகும் வழியில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
சிவாவின் அப்பா அம்மாவை பார்க்க செல்லும் இடத்தில் தாத்தா பாட்டியோடு அன்பு குறும்பு கேள்விகளோடு சிவாவை சிக்க வைக்க அதை சிவா சமாளிக்க அப்பா பாலாஜி சக்திவேலை கலாய்க்க .. ஒரு கட்டத்தில் பாட்டியின் advise கேட்க பிடிக்காமல் வீட்டை விட்டு கிளம்புகிறான் அன்பு ..அவனோடு பைக் பயணம் மீண்டும் தொடங்க வழியில் skerting பலகை கொண்டு அவன் போகும் அழகை ஒரு அப்பாவாக ரசித்து மனைவியிடம் ஃபோன் பண்ணி சொல்வதாகட்டும் ஒரு மலையில் ஏறி விட்டு இறங்க முடியாமல் நிற்கும் போதும் சரி குளத்தில் நீச்சலடிக்கும் போதும் அவன் அங்குள்ள சிறுவர்களோடு விளையாடும் போதும் அதை ரசிப்பது மனைவியிடம் பகிர்வது என இவர்கள் பயணம் தொடர்கிறது ..!இரவில் தங்க இடம் இல்லாமல் ஒரு மண்டபத்தில் அடைக்கலம் ஆக ,அங்கு தங்கியிருப்பவரின் பெயர் ‘எம்ப்ரர்’..அவர் காலையில் எழுந்து போய் இவர்களுக்காக இட்லி வாங்கி வருவதும், ஒரு அறிமுகமில்லா பாசம்
போகும் வழியில் அஞ்சலியை ஒரு குளக்கரையில் சந்திக்க ,பள்ளிக்கால நட்பை சிவாவும் அஞ்சலியும் பகிர்ந்து கொள்ள அவர்களை தன் வீட்டோடு சேர்ந்த உணவகம் இருக்கும் இடம் அழைத்து வருகிறார் அஞ்சலி..! சில காட்சிகளே ஆனாலும் அஞ்சலியின் அந்த அருமையான அழகான, அமைதியான.. நடிப்பு .. அவர் சிவாவுக்கு ஈடாக பேசும் நக்கல் .. குறிப்பாக “அஞ்சாங் கிளாஸ் படிச்சப்ப கேட்ட சூரியகாந்தி பூவை என் பையன் அஞ்சாங் கிளாஸ் படிக்கும் போது கொண்டு வந்து கொடுக்கிறாயேடா…” என்று அஞ்சலி கேட்கின்ற அந்தக் கேள்வியில் தியேட்டரே அதிர்கிறது.அஞ்சலியின் கணவராக நடித்திருக்கும் அஜு வர்கீஸ் தன்னுடைய சிறப்பான நடிப்பினால் நம்மை கவர்ந்திருக்கிறார். அங்கிருந்து பயணம் அன்புவின் கேர்ள் ஃப்ரெண்ட் வீட்டுக்கு செல்ல .விஜய் யேசுதாஸூம், மிர்ச்சி சிவா combo dance விளையாட்டாக தொடங்க இதிலாவது ஜெயித்து மகனிடம் காட்டனும் என்கிற ஆசை கொஞ்சம் அதிகமாக போக அந்த சூழல் அருமை . அங்கிருந்து மீண்டும் பயணம் தொடர்கிறது ..!
மகனைக் காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறியவர் மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தபடியே இருந்து மனைவிக்கு போன் செய்து வரவழைக்கும் நேரத்தில் கட்டையை சாய்த்து மரத்திலேயே தூக்கி கொண்டு இருக்கும் அந்த ஒரு காட்சி அமைப்பிலேயே சிரிப்பை வரவழைத்துவிட முடியும் என்று நாம் இதுவரை பார்த்த சீரியஸ் இயக்குநரான ராம் செய்திருப்பது வியப்பை தருகிறது …! கிரேஸ் ஆண்டனி.. தன்னுடைய கணவரை நேரில் பார்த்தவுடன் அப்படியே உல்டாவாக அவரை “வாடா.. போடா” என்றெல்லாம் பேசி அழைக்க ரசிக்க வைத்த காட்சி அது ..!அதே சமயம் தன்னுடைய உடன் பிறந்த தங்கை தன்னைப் புறக்கணித்துவிட்டு செல்வதை நினைத்து கண் கலங்கி அழும் காட்சியில் நிறைய எமோஷன்களை உருவாக்கி இருக்கிறார் கிரேஸ் ஆண்டனி…! கடையில் வேலை செய்யும் அந்த பெண்ணும் ஒரு காட்சியில் நம்மை மனமுருக வைத்துவிட்டார். அவ்வளவு அழகான நடிப்பு.
ஏகாம்பரத்தின் கேமரா வேலை இந்த படத்தை பறக்க வைத்திருக்கிறது. அன்பு குளிக்கும் அந்த குளத்தை டிரோன் காட்சியில் பார்க்கும்பொழுது “அந்த ட்ரோன் காட்சி. அஞ்சலி இருப்பிடம் சம்பந்தமான காட்சிகள் எல்லாம் கேமராவின் பங்களிப்பு மிக அபாரம் சந்தோஷ் தயாநிதியின் இசையில் அத்தனை பாடல்களுமே அமர்க்களம். மிக எளிமையான வார்த்தைகள். பாடல் வரிகளை மட்டும் நம்முடைய காதில் மிக எளிதாக விழும் படி இசையமைத்திருக்கிறார்…!யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை குறிப்பிடத்தக்கது. .படத்தொகுப்பாளர் மதி படத்தின் காட்சிகளை மிக அழகாக செதுக்கி தந்திருக்கிறார். அதிலும் விஜய் யேசுதாஸூம், மிர்ச்சி சிவாவும் வீட்டுக்குள்ளே ஆடும் அந்த மூன்று நிமிடம் நடன காட்சி அசத்தல். அதை அவ்வளவு அழகாக படம் ஆக்கி இருந்தாலும் அதை தொகுத்து வழங்கியதில்தான் அந்தக் காட்சியின் வெற்றி..!
‘கற்றது தமிழ்’, ‘தரமணி’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கிய ராம் குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளைகூட நாம் நிறைவேற்றாமல் போனால் அது அவர்களின் மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்தும். அந்த வெறுமை பெற்றோர்களுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உண்டாக்கும் ..வெளியில் அழைத்துச் சென்று வெளியுலகத்தை காட்டி “இன்னும் கொஞ்சம் பறந்து போ… உடன் நாங்கள் வருகிறோம்… என்று சொல்லி வளர்க்கும் பிள்ளைகள் இனி ரெக்கை கட்டி பறந்து போகட்டும் – கவலை பறந்து போகும்..என்பதை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ராம் அழகாக சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் ராமின் “பறந்து போ” அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் .
நம்ம TAMILPRIMENEWS.COM RATING 3.9/5