லவ் மேரேஜ் திரைவிமர்சனம் rating 3.6/5

படம்: லவ் மேரேஜ்
நடிப்பு: விக்ரம்.பிரபு, சத்யராஜ், சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் தயாரிப்பு:சுவேதா ஶ்ரீ, ஶ்ரீ நிதி சாகர்
இசை: சான் ரோல்டன் ஒளிப்பதிவு: மதன் கிரிஸ்டோபர் இயக்கம்: சண்முக பிரியன் பி ஆர் ஒ: யுவராஜ்
கதை .. open பண்ணா ..!
மதுரை அருகே உசிலம்பட்டியில் சின்னதாக ஒரு துணிக்கடை வைத்து இருக்கும் ராமு முப்பது மூன்று வருடம் ஆகியும் திருமணம் ஆகவில்லை..25 வயது காலகட்டத்தில் தேடிவந்த மண வாய்ப்புகளில் அலட்சியம் காட்டியதன் விளைவு, இப்போது 33 வயதை எட்டிய நிலையில் பெண் பார்க்கப் போகும் இடங்களில் வயதை காரணம் காட்டி புறக்கணிக்கப்படுகிறார்..எனவே ஒரு வழியாக புரோக்கர் மூலம் பெண் பார்க்க தொலைதூர ஊராக இருந்தாலும் பரவாயில்லை என கோபி செட்டிப்பாளையம் பகுதியை சார்ந்த அம்பிகாவை திருமணம் முடிக்க நிச்சயதார்த்தத்திற்கு தன் அப்பா, அக்கா, மாமா மற்றும் நண்பர்களுடன், கோபிசெட்டிபாளையம் வருகிறார்…பெண் பிடித்துப் போக, பெண் வீட்டாருக்கும் சம்மதம். இதனால் தாமதிக்காமல் திருமண நிச்சயதார்த்தம்.அது முடித்து எல்லோரும் கிளம்பும் போது அவர்கள் வந்த பஸ் மக்கர் பண்ண அந்த இரவு அங்கு தங்கும் சூழல் ஏற்படுகிறது ..
அதேபோல மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு தேதி குறித்து ஊருக்கு கிளம்ப தயாரான நிலையில் கொரோனாவுக்காக ஊரடங்கு சட்டம் அமுல் ஆகிறது. இதனால் பயணத்துக்கு வாய்ப்பு இன்றி மாப்பிள்ளை குடும்பம் அங்கேயே தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது…!இந்த காலகட்டத்தில் மணப்பெண் சுஷ்மிதாவுடன் பேசிப் பழக விக்ரம் பிரபு முயற்சிக்க, ஆனால், அவர் முகம் பார்த்து கூட பேசாமல் மணப்பெண் தவிர்ப்பதோடு, திடீரென்று ஒரு நாள், வீட்டை விட்டும் எஸ்கேப் ஆகிறாள். அப்போதுதான் ஏற்கனவே அந்தப் பெண் ஒரு இளைஞனை காதலித்த தகவல் மாப்பிள்ளை குடும்பத்துக்கு தெரிய வர…அதன் பிறகு என்ன நடந்தது?, விக்ரம் பிரபுவுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறது கதை.
லவ் மேரேஜ் படத்தின் முதல் பாதியை பொருத்தவரை ஒரு சிம்பிளான காமெடி கலந்து பேமிலி எண்டர்டெயினர் படமாக தான் இருக்கிறது .. இடைவேளைக்கு பிறகு படம் நல்ல ஒரு மனதுக்கு நெருக்கமான கதையாக பயணிக்கிறது.. குறிப்பாக மாமாவாக வரும் அருள்தாஸ் என்ன நேரத்தில் என்ன சொல்ல போகிறாரோ என்கிற பதட்டம் நமக்குள் வருவதை உணர முடிகிறது. மனுஷன் மிரட்டி இருக்கார் .அது போல முருகானந்தம், நாயகியின் தாய் மாமனாக கொங்கு பாஷை பேசி அசத்தி உள்ளார் . கோடாங்கி வடிவேலு காமெடி கலந்த பாத்திரத்தில் பரோக்கர் வேடத்தில் அதிலும் நல்ல நேரம் பார்ப்பதில் கலகலப்பாக நடித்திருக்கிறார்..!
..விக்ரம் பிரபு படத்தில் அலட்டல் இல்லாமல் குடும்பதில் நம்ம பக்கத்து வீட்டு பையன் போல வாழ்ந்து இருக்கார் . கிளைமாக்ஸ் ல அவர் பேசும் வசனம் அருமை ..!
தயாரிப்பாளர்கள் DR சுதா ஸ்ரீ, ஸ்ரீநிதி சாகர் இயக்குனர் சண்முகப்பிரியன் யதார்த்தமான சினிமாவை கொங்குபகுதியில் குடும்பம், எமோஷனல், காதல் கலந்து அனைவர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் .மொத்தத்தில் இந்த படம் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் ..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.6/5