குட் டே திரைவிமர்சனம் rating 3.7/5 

குட் டே திரைவிமர்சனம் rating  3.7/5 

படம்: குட் டே

நடிப்பு: பிரித்திவிராஜ் ராமலிங்கம் காளி வெங்கட் மைனா நந்தினி ஆடுகளம் முருகதாஸ்  பகவதி பெருமாள் (பக்ஸ்) வேல ராமமூர்த்தி  போஸ் வெங்கட்
விஜய் முருகன் (கலை இயக்குனர்)  ஜீவா சுப்பிரமணியம்  பாரத் நெல்லையப்பன்  தயாரிப்பு: பிரித்திவிராஜ் ராமலிங்கம்  இசை: கோவிந்த் வசந்தா                     ஒளிப்பதிவு: மதன் குண தேவ்  இயக்கம்; என் அரவிந்தன்  பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

 

கதை .. open பண்ணா ...

திருப்பூரில் பனியன் கம்பெனி யில்  வேலை பார்க்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிரித்திவிராஜ் ராமலிங்கம் அங்கு வேலை  பார்க்கும் பெண்ணை சீண்டிய அலுவலக மேலாளரை தட்டிக் கேட்டதால் ,இவர்  சம்பளத்தை கொடுக்காமல் மேலாளரை வைத்து அவமானப்படுத்துகிறது நிர்வாகம்.. அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபத்தில் எரிந்து விழும் மனைவி, வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனிடம் முறை வாசலுக்கும் சேர்த்து பணம் கேட்கும் உரிமையாளரிடம் ஆத்திரம்.. உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், அவமானப்படுத்தும் அறை நண்பன்… இப்படி ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களை கடந்து செல்லும் நாயகன்..ஒரு வழியாக பணம் இவன் அக்கவுண்ட் இல் கிரெடிட் ஆக பணம் அனுப்ப வேண்டியவர்களூக்கு  அனுப்பி விட்டு. அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று எண்ணி  அறைக்கு வாங்கி வந்து  அன்றைய இரவு மதுவை  குடிக்க ஆரம்பிக்கிறார் ..!

போதை ஏற ஏற நண்பனுக்கு ஃபோன் போட்டு முன்னாள் கல்லூரித்தோழி மைனா நந்தினி நம்பர் கேட்டு வாங்கி அவளிடம் பேசுகிறார்..அந்த நள்ளிரவில்  பிறந்தநாள் கேக்கை வாங்கிக் கொண்டு முன்னாள் கல்லூரித்தோழி மைனா நந்தினியின் வீட்டுக்கு வரும் பிரித்திவிராஜ், நந்தினியின் கணவர் ஆடுகளம் முருகதாசின் முன்னோடியே நந்தினியிடம் பேசும் உளறல் அலப்பறை.. கொஞ்சம் ஓவர் ..!

அவர்களும் காவல் நிலையம் வந்து இவனை பற்றி கம்ப்ளைண்ட் கொடுக்க வரும்போது  பிரித்திவிராஜ் ராமலிங்கம் அந்த  இரவில் மதுபோதையில் மேம்பாலத்தின் மேலே நின்றுகொண்டு  மைனா நந்தனியிடம் “நான் சாகப்போகிறேன்” என்று தொலைபேசியில் உளறிக் கொண்டிருக்கிறார். அந்த உரையாடலை மைனா நந்தினி தனது கணவர் ஆடுகளம் முருகதாசுடன் காவல் நிலையத்தில் speekar ஃபோன் இல்  போட்டு காட்டி திட்டிக்கொண்டிருக்கிறார். இத்ற்கிடையில் மேம்பாலத்தில் நின்று கொண்டிருக்கிற பிரித்விராஜை காவல்துறை ஆய்வாளர் விஜய் முருகன் பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து பிரம்பால் அடி வெளுத்து வாங்குகிறார்.!

அதே காவல் நிலையத்தில் ஒரு குடும்பம் தன் 5 வயது மகளை  காணவில்லை என்று கொடுத்த புகார் ஒரு பக்கம் ,.. அது போக காவலில் இருந்த ஒருவன் தப்பி போக எல்லா  காவலர்களும் அவனை பிடிக்க வெளியே செல்கிறார்கள். இந்த நேரம் பார்த்து பிரித்விராஜ் ஆய்வாளரின் மேல் சட்டையை தான் போட்டுக் கொண்டு வாக்கி டாக்கி  யை  எடுத்துக் கொண்டு தப்பித்து விடுகிறார். அந்த இரவு முழுவதும் பிரித்திவிராஜ் மதுபோதையில் பலரோடு பிரச்சினை செய்துகொண்டு கடைசியாக ஆட்டோ ஓட்டுநர் காளி வெங்கட்டோடு சண்டை போட்டு கத்திக்குத்து வாங்கி வீதியில் அனாதையாக கிடக்கிறார். இறுதியாக  வெட்டியான் வேலராமமூர்த்தியிடம் வந்து சேர்கிறார்  வேல ராமமூர்த்தி தத்துவம் பேசுவதில்  மயான காண்டத்தின் மகிமையை முருக்கேறிய உடம்பை நிமிர்த்தி வைத்து பேசுவது கேட்டு .. சாக வேண்டிய எண்ணத்தை கைவிடுகிறான் தன் குடும்பதிற்க்காக வாழ ஆசை வருகிறது ..  இதற்கிடையே காணாமல் போன குழந்தையை தேடும் காவல்துறை தங்களை டென்ஷன் ஆக்கிய நாயகனையும் சேர்த்து தேடுகிறது. நாயகன் போலீசில் சிக்கினாரா…?? கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறை உயிருடன் மீட்டதா…? விடிந்த பொழுது யாருக்கு “குட் டே” என்பது நல்ல டுவிஸ்ட் கலந்த  திரைக்கதை.

போஸ் வெங்கட் , பகவதி பெருமாளும் தங்களின் கதாபாத்த்ரத்தை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார்கள். இரவின் நிழலை அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மதன் குணதேவ். பூர்ணா ஜெஸ் மைக்கேலின் வசனம் மேலும்  படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது கோவிந்த் வசந்தாவின் இசை.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை  நகைச்சுவையுடன் இயக்கியிருக்கிறார்.. மன அழுத்தத்திற்கு மது தீர்வு அல்ல, அது மேலும் மேலும் மன அழுத்தத்தைத் தான் கொடுக்கும் என்பதை கதை அது போகிற போக்கில் (குடிக்காமல்)  தெளிவாக  சொல்லி இருக்கிறார்.  இயக்குநர் என்.அரவிந்தன்.!

படக்குழு அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.!

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.7/5 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *